Posts

Showing posts from March, 2024

கண்மணி நில்லு! காரணம் சொல்லு! சிறுகதை

Image
  கண்மணி நில்லு ! காரணம் சொல்லு !                                                                                                                                                   நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு .   “ கண்ட இடத்துலே கண்ணை அலையவிடாம ரோட்ட ஒழுங்கா பார்த்துப் போடா பொறுக்கி நாயே !”    இப்படி ஒரு வார்த்தை எதிர்விட்டு கண்மணியிடமிருந்து தன்னை நோக்கிவரும் என்று நடேசன்   கனவில் கூட நினைத்துப் பார்த்த்தில்லை ! ஆனால் இன்று நிஜமாகவே நடந்தேறிவிட்டது .    இப்பொழுதெல்லாம் அவன் கண்மணியிடம் நிறைய மாறுதல்களை காண்கிறான் . சிரிக்க சிரிக்க அவனுடன் பேசுபவள் அவனைக்கண்டாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாள் . ஜாடை மாடையாகச் சாடுகின்றாள் . இவனது தங்கையிடம் பேசிக்கொண்டே இருப்பவள் இவன் நுழைந்ததுமே அவசரம் அவசரமாக பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஓடிப்போகிறாள் .    கண்மணி இப்படி நடக்க கூடியவள் இல்லை . சிறுவயது முதலே ஒன்றாக பழகியவள்தான் . அவனும் அவன் தங்கை நித்யாவும் அவளும் கூடிவிட்டால் அரட்டைக்கச்சேரி ஓயவே ஓயாது . அந்த அரட