Posts

Showing posts with the label ஜோக்ஸ்

சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 5.

Image
  சிரிச்சுக்கிட்டே இருங்க ! பகுதி 5.   1.        மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் எல்லாம் தங்களோட குமுறலைக் கொட்டித்தீர்த்திட்டாங்களாமே!     அட நீ வேற   கெட்டுப்போன சாப்பாட்டைத்தான் கொட்டிட்டு போயிட்டாங்க!       2.    உண்ணாவிரதப் போராட்டத்துலே கலந்துகிட்டவங்க எல்லாம் ஹாஸ்பிடலுக்கு எதுக்கு வந்திருக்காங்க ?    ” அஜீரனக் கோளாறு ” ஏற்பட்டிருச்சாம் !   3.        மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே ... ?       ஆம் ...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம் !     4.      எதிரிக்கு பயத்தைக் காட்ட வேண்டும் அமைச்சரே …!   நீங்கள் “அபயம்” கேட்டு அவன் முன் நிற்கையில் அவனுக்கு நன்றாக காண்பித்துவிடலாம் மன்னா!        5.    சந்திரனில் விக்ரம் லேண்ட் ஆகிருச்சுன்றதை நம்ம தலைவர் தப்பா புரிஞ்சுகிட்டார் !    எப்படி ச...

சிரிச்சுக்கிட்டே இருங்க!பகுதி 4

Image
  சிரிச்சுக்கிட்டே இருங்க!பகுதி 4   1.    தலைவர் ரொம்பவும் உஷார் பேர்வழின்னு எப்படி சொல்றீங்க?   பள்ளிக்கூடத்துலே கொடியேத்தும்போது அடுத்த வருஷமும் நான் தான் கொடியேத்துவேன்!னு சொல்லி மறைமுகமா பர்மிஷன் வாங்கிட்டாரே!   2.    மேடையிலே பேசிக்கிட்டிருக்கும்போதே தலைவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டாராமே..!   இல்லையா பின்னே இத்தனை கூட்டமும் இன்னும் நம்ம பேச்சை நம்பிகிட்டிருக்கேன்ற ஆனந்த கண்ணீர்தான் அது!   3.    தலைவர் மீட்டீங்கிற்கு பெண்கள் கூட்டம் அள்ளுதே!   கூட்டத்துக்கு வர்ற பெண்மணிகளுக்கெல்லாம் இரண்டு கிலோ தக்காளி கொடுக்கிறதா சொல்லி கூட்டி வந்திருக்காங்களாம்!   4.    எதிரி நாட்டு மன்னன் தண்ணீரை திறந்துவிட மறுத்துவிட்டான் மன்னா! போருக்குப் புறப்படலாமா? ராணியின் கண்களில் கண்ணீரைப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஏன் அவசரம் மந்திரியாரே!   5.    அந்த டாக்டர் ட்ரெண்டியா வைத்தியம் பார்க்கிறாரா எப்படி?   நர்ஸா ஏஐ கேர்ளை அப்பாயிண்ட் மெண்ட் பண்ணி வைச்சிருக்காரே!   6.  ...

சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 3

Image
  சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 3   1.    அவர் தக்காளி வியாபாரின்னு எப்படி சொல்றே?   ரூபாய் நோட்டுக்களை ஃப்ரிசரில் வெச்சிருக்காரே!   2.      நாம மீண்டும் ஆட்சியை புடிச்சா மக்கள் நினைவிலே நிலைத்திருக்கிற மாதிரி எதையாவது செய்யனும்யா!   500 ரூபா 200 ரூபா நோட்டெல்லாம் செல்லாதுன்னு திரும்பவும் செல்லாதுன்னு அறிவிச்சிடலாமா தலைவரே!   3.    மெகாசீரியல் டைரக்டரை கட்சியிலே சேர்த்த்து தப்பாப் போயிருச்சா ஏன்?   மீட்டிங்லே எதிர்கட்சியோட கதை முடிஞ்சிருச்சுன்னு பேசச்சொன்னா   எத்தனை எபிசோட்லன்னு கேக்கறாரே!   4.      தலைவர்கிட்டே எதைக்கேட்டாலும்   எனக்குத் தெரியாது! நினைவில் இல்லை!   ஆதாரமில்லைன்னு சொல்லிக்கிட்டிருக்காரே! ஏன்?    ஒண்ணுமில்லே   ஈ.டி ரெய்டுலே இருந்து இன்னும் அவர் மீண்டு வரலை அதான்!   5.      தலைவர் எல்லாவேலையையும் தானே இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வாரு!    ம்ம்.. அதுக்காக மகளிர் அணித்தலைவியை   கையைப்பிடிச்சு...

சிரிச்சுக்கிட்டே இருங்க பகுதி 2

Image
  சிரிச்சுக்கிட்டே இருங்க பகுதி 2   நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.     1.      நம்ம தலைவருக்கு நக்கல் அதிகம்னு எப்படிய்யா சொல்றே?   கவர்னருக்கு அனுப்பற லெட்டருக்கு ஸ்டாம்ப் ஒட்டாமலேயே அனுப்பிட்டு ”எப்படியும் திரும்பித்தானே வரப்போவுது” அதுக்கு எதுக்கு ஸ்டாம்ப்னு கேட்கிறாரே! 2.    லேடி டிரைவருக்கு தலைவர் கார் வாங்கிக் கொடுத்தது தப்பாப் போயிருச்சா ஏன்?   தலைவரோட சம்சாராத்துகிட்டே இதை யாரோ “புகார்” பண்ணிட்டாங்களாம்!     3.     தலைவர்கிட்டே அமலாக்கத்துறை விடியவிடிய விசாரணை பண்ணுச்சாம்!      “ கட்சிக்காரங்கதான் தூங்க விடலைன்னா இவங்களுமா?   4.    தக்காளி விலை ஏறுனதும் தலைவர் ரொம்பவும் குஷி ஆயிட்டாரே ஏன்?   சட்டை கொஞ்ச நாளைக்கு “சிவப்பா” ஆகாதிருக்கும்கிற சந்தோஷம்தான்!   5.    டாஸ்மாக்   ஊழல்ல சிக்கின தலைவர் கோர்ட்ல நீதிபதி கேட்டதுக்கு என்ன பதில் சொன்னாராம்!      இதெல்லாம் கஷ்டப்பட்டு”சில்லறை சில்லறையா” சேர்த்ததுன்னு சொ...