Posts

Showing posts from January, 2017

இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017

Image
இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017 சென்ற ஆண்டில் இரண்டு முறை விகடனில் இடம் பிடிக்க முடிந்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக என்னுடைய ஜோக் இந்த வார விகடனில் இடம்பெற்று மகிழ்ச்சியை உண்டாக்கியது. இரண்டு வருடங்களாக எண்ணற்ற ஜோக்ஸ்களை அனுப்பி தளராத நம்பிக்கையுடன் போராட்ட குணத்துடன் எழுதி வந்ததற்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன்.     விகடனில் ஜோக்ஸ் வந்ததை உடனே பதிவிட்டு தெரியப்படுத்திய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், பதிவிட்ட பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! என்னுடைய ஜோக்கினை பதிவிட்ட விகடன் குழுமத்தினருக்கும் விகடன் ஆசிரியர் குழுவினருக்கும் நான் ஜோக்ஸ் எழுத உறுதுணையாக இருக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்! என் வளர்ச்சியில் உறுதுணையாக தொடர்ந்து ஆதரவளித்து வரும் வலைப்பூ நண்பர்கள்  என்னை பத்திரிக்கைகளில் எழுதுமாறு சொன்ன மதுரைத் தமிழன், தில்லையகம் கீதா,உள்ளிட்ட நண்பர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்! கீழே ஜோக்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில்

சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!

Image
சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்! வானத்துல ரொம்ப தொலைவுல உள்ள ஒரு நட்சத்திர குடும்பத்துல சூரியன், சந்திரம், காற்று ஆகிய மூவரும் பிறந்து வளர்ந்து வந்தார்கள். அப்போ அவங்க ஊருல ஒரு வீட்டுல விருந்து நடந்தது.    அந்த விருந்துக்கு போக மூன்று பேரும் ஆசைப்பட்டாங்க! உடனே மூணு பேரும் தங்களோட அம்மாக்கிட்ட வந்து அம்மா!   “அம்மா!  பக்கத்து ஊரில எங்க நண்பன்வீட்டுல பெரிய விருந்து வைக்கறாங்களாம்! வடை பாயாசம்,லட்டு, அதிரசம்னு இனிப்பெல்லாம் நிறைய விருந்துல உண்டாம். எங்களோட நண்பன் கூப்பிடறான். நாங்க போயிட்டு வரட்டுமா?”ன்னு கேட்டாங்க.     “அப்படியா பசங்களே! நண்பன் வீட்டு விருந்துன்னு சொல்றீங்க! போகாட்டி நல்லா இருக்காது! போயிட்டு பத்திரமா திரும்பி வந்துருங்க”ன்னு மூணு பேரையும் வழி அனுப்பிச்சு வச்சாங்க அம்மா!   இந்த மூணு பேரும் விருந்துக்கு போனாங்க! அங்க தடபுடலா விருந்து நடந்துகிட்டு இருந்துச்சு. இவங்களை பார்த்த உடனேயே அவங்க நண்பன் வாசல்லேயே வந்து வரவேத்து கூட்டிட்டுப் போனான்.  “வாங்க!வாங்க! நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!” அப்படின்னு சொல்லி சாப்பாட்டு ஹாலுக்கு கூ

இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் பத்து!

Image
இந்த வார பாக்யா ஜனவரி 27- பிப்3 இதழில் என் பத்து ஜோக்ஸ்கள்! இந்த வாரமும் நான் எதிர்பார்த்தது போலவே பாக்யாவில் என் ஜோக்ஸ்கள் இடம்பெற்றன.  இரண்டாம் முறையாக என்னுடைய பத்து ஜோக்ஸ்கள் இடம் பெற்றது கூடுதல் மகிழ்ச்சி!    பாக்யா ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், குடும்பத்தினர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஜோக்ஸ்கள் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் கீழே காத்திருக்கின்றன! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

நியதியும் வசதியும்!

Image
இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கட்டுக்குள் கட்டுக்கோப்பாய் வாழ்வது நியதி! எப்படியும் வாழ்வேன்! என்று கட்டுக்களை தளர்த்தெரிந்து பாய்வது வசதி! நியதிக்குள் வாழ்க்கை நீடிக்கும் நித்தம் நம்மை சோதிக்கும்! நெளிவும் சுளிவும் தரும் வசதி! நித்தமும் அதனால் அசதி! பித்தமும் ஒருநாள் உறுதி! கூட்டுக்குள்ளே புழுவாக இருந்து பட்டு இறக்கை முளைத்து பறக்கிறது வண்ணத்துப்பூச்சி! கூட்டினை உடைத்து கொடியதன் கொழுந்தினைத் தின்று புழுவாய் உதிர்ந்து மடிகிறது கம்பளிப்பூச்சி! சிப்பிக்குள் அடங்கினால் விளையும் முத்து! குப்பிக்குள் அடங்கினால் விளையும் மருந்து! உடைப்பெடுக்காத ஆறு! ஊட்டும் நல்ல சோறு! மடை திறந்தால் அது வெள்ளம்! உடைந்து போகும் உழவன் உள்ளம்! கட்டுக்குள் வாழ்க்கை அமர்க்களம்! கட்டுடைத்த வாழ்க்கை போர்க்களம்! நியதி மனிதன் வகுத்தது! வசதி மனிதன் படைத்தது! படைப்பு மிஞ்சினால் நியதி அடங்குகிறது! எல்லோரும் சமன் என்பது நியதி! எல்லோருக்கும் மேல் நான் என்பது வசதி! நியதிக்கும் வசதிக்கும் நிதம் தோறும் போட்டியில் வென்றதுவோ வசதி! வல்லான் வகுத

சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!

Image
இந்த வாரமும் பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் பிரசுரமாகி மகிழ்ச்சியைத்தந்தன. திங்கள் அன்றே புத்தகம் வாங்கிவிட்டாலும் அன்று போனவார ஜோக்ஸ்களை பகிர்ந்து கொண்டதால் இரண்டு நாட்கள் தள்ளி இன்று ஜோக்ஸ்களை பகிர்ந்து கொள்கிறேன். பாக்யா தவிர்த்து, குமுதம், விகடன், கல்கி, குங்குமம் இந்து போன்ற இதழ்களுக்கும் படைப்புக்கள் அனுப்பி வருகிறேன். விகடன், குங்குமம் போன்ற பாரம்பரிய இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள் குறைந்து விட்டது. குங்குமத்தில் இரண்டு வாரங்களாய் நகைச்சுவை துணுக்குகளே வரவில்லை! விகடனில் அதிகபட்சமாய் நான்கு அல்லது ஐந்துதான் வருகின்றது. அந்த வகையில் பாக்யாவில் சன்மானம் வராவிட்டாலும் நிறைய துணுக்குகள் பிரசுரம் ஆகின்றன.    ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன் மகனை   சான்றோன் எனக்கேட்ட தாய்!                    என்பது போல நமது துணுக்குகள் வலைப்பூவில் எழுதி வெளியிட்டு இருந்தாலும் பலரின் பாராட்டுதல்கள் பெற்றிருந்தாலும்  அச்சு ஊடகத்தில் வரும்போது ஒரு தனி மகிழ்ச்சி கிடைக்கிறது. கல்கி கேள்வி பதில் பகுதியிலும் இந்த வாரம் என்னுடைய கேள்வி இடம் பெற்றிருந்தது. இப்படி பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என் பெயர் இடம்ப

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 29

Image
1.    காலண்டர்!   “எதுக்குங்க இத்தனை காலண்டர் எல்லார் கிட்டேயும் கேட்டு வாங்கறீங்க! ஒண்ணு இருந்தா போதாதா? என்று கேட்ட மனைவியை நாளைக்கு பார்! என்று அடக்கினார். மறுநாள் வாங்கி வந்த காலண்டர்களை தன் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் அலுவலக கடைநிலை ஊழியர்களை வரவழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர். 2.    அட்வைஸ்! நேரத்துக்கு சாப்பிடனும்! நிறைய தண்ணி குடிக்கணும், காய்கறி பழங்கள் நிறைய சேர்த்துக்கணும் என்று பேஷண்டுக்கு அட்வைஸ் செய்த டாக்டரின் போன் சிணுங்கியது, எடுத்தார். ஒருநாளாவாது டயத்துக்கு சாப்பிட வீட்டுக்கு வர்றீங்களா? மணி ரெண்டு ஆவப்போகுது என்று சிடுசிடுத்தாள் அவர் மனைவி. 3.    வாழ்த்து! சுற்றங்களும் நட்புக்களும் பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர் வாட்சப் பில்! 4.    ஞாபகம்!    சாமிக்கு பொங்கல் வைத்து படையல் போட்டதும் மறந்துடப் போறே ஞாபகமாய் போட்டோ எடுத்து எஃப்.பியில் ஷேர் பண்ணு! கவனமா இரு மறந்துடாதே! என்றாள் அக்கா. 5.    எழுத்து:     மனதில் கரு உதித்தவுடன் வேக வேகமாய் கணிணித் திரையை ஆன் செய்து எழுத ஆரம்பித்தார் அந்த எழுத்தாள்ர். 6.

சென்ற வார பாக்யா-ஜனவரி 13-19 இதழில் எனது ஜோக்ஸ்கள்

Image
பாக்யா வார இதழ் ஜனவரி 13-19 2017ல் என்னுடைய ஜோக்ஸ்கள்! ஒரு வார இடைவெளிக்கு பின் என் ஜோக்ஸ்கள் மீண்டும் பாக்யாவில் பிரசுரம் ஆனது. புது வருடத்தின் முதல் இதழில் அதாவது வருடம் பிறந்து கிடைக்கும் இதழில் (புத்தாண்டு சிறப்பிதழ் அதற்கு முன்பே வந்துவிடும்) என் ஜோக்ஸ்கள் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது. இருந்தாலும் விடவில்லை! தொடர்ந்து அனுப்பினேன். பிரசுரம் ஆகியிருக்கிறது. இம்முறை தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில்  உங்கள் ஜோக்ஸ் வந்திருக்கிறது என்று சொன்னார்கள். புக் யாரும் வாங்காததால் பதிவிட வில்லை! நானும் தாமதமாகத்தான் கடைக்கு சென்று புத்தகம் வாங்கினேன். வாங்கிய பிறகும் உடனே பகிர்ந்திட இயல வில்லை! பின்னர் மறந்தும் போனேன். இன்றுதான் மீண்டும் நினைவுக்கு வந்து பதிவிடுகிறேன்! பிரசுரம் செய்த ஆசிரியர் குழுவினர், ஊக்கமளிக்கும் வாட்சப் குழுவினர், நண்பர்கள் வலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் எனது நன்றிகள்! ஜோக்ஸ்கள் கீழே! இந்த வாரமும் என்னுடைய ஜோக்ஸ்கள் வந்திருக்கிறது அதை நாளை பதிவிடுகின்றேன்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! 1.    காய்ந்தவயல்கள்! எரிந்து போனது உழவன் உயிர்! 2.    தடுத்தார்கள் உடைபட்டது ஜல்லிக்கட்டு! 3.    ஈரம் கசிகிறது! விழிகளில் கண்ணீர்! 4.    ஊடுறவல் தெரிந்தும் தடுக்கவில்லை! விழிகள்! 5.    கிராமங்களின் அழகு! மறைத்துக் கொண்டிருந்தன! தொழிற்சாலைகள்! 6.    விடியவிடிய உறங்கியே கிடக்கிறது! அறியாமை! 7.    துணை வந்தவன் கழட்டிவிடப்படுகிறான் வாசலில் காலணி! 8.    நீரோடவில்லை! வேறோடாமல் போனது! விவசாயம்! 9.    தூக்கில் தொங்கியவர்களை மீட்டெடுத்தான் வாசகன்! வாரப்பத்திரிக்கைகள்! 10. நிலவு வந்ததும் புன்னகைத்தன அல்லிமலர்கள்! 11. விளைந்த முத்துக்கள்!     களவாடியது சூரியன்!       பனித்துளி! 12. கயிறு இல்லாமல்    ஊஞ்சல் கட்டியது!    சிட்டுக்குருவி. தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 91

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 91 1.    மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட் சதா பொண்ணோட தோழியை சைட் அடிச்சிக்கிட்டே இருக்காரே… என்ன விஷயம்? அவர் தோழி மாப்பிள்ளையாச்சே! 2.    தலைவர் பொங்கல் இனாம் கொடுக்கிறேன்னு சொன்னாரேன்னு போனது தப்பா போயிருச்சு!    ஏன் என்ன ஆச்சு? பழைய ஐந்நூறு ரூபாயை கொடுத்து அனுப்பிச்சிட்டாரு! 3.    அந்த ஏ.டி.எம் லே எப்பவும் கூட்டமே இருக்காது! ஆச்சர்யமா இருக்கே? இதுல என்ன ஆச்சர்யம்? அது எப்பவும் பூட்டித்தானே கிடக்குது! 4.    அவர் தீவிர விஜய் ரசிகர்,,,! அதுக்காக மளிகைக் கடையில வந்து எனக்கு ‘பை’ரவா! தான் வேணும்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! 5.    நிறைய கிரெடிட் கார்டை வச்சிக்கிட்டு தேய்ச்சு தேய்ச்சு பொருளுங்க வாங்கிட்டு இருந்தார் அவர்! அப்புறம்? நிறைய ஓவர் ட்ராப்ட் ஆகிருச்சுன்னு ஒருநாள் எல்லாரும் அவரை துவைச்சு எடுத்திட்டாங்க! 6.    எதிரியைக் கண்டதும் மன்னர் வில்லை…! பூட்டிவிட்டாரா? ஊகும்! போட்டுவிட்டு சரணாகதி அடைந்துவிட்டார்! 7.    யார் அங்கே?? எல்லோரும் ஏ.டி.எம் க்யுவில் நிற்க போய்விட்டார்கள் மன்னா! 8.    உ