கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 91

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 91


1.   மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட் சதா பொண்ணோட தோழியை சைட் அடிச்சிக்கிட்டே இருக்காரே… என்ன விஷயம்?
அவர் தோழி மாப்பிள்ளையாச்சே!

2.   தலைவர் பொங்கல் இனாம் கொடுக்கிறேன்னு சொன்னாரேன்னு போனது தப்பா போயிருச்சு!
   ஏன் என்ன ஆச்சு?
பழைய ஐந்நூறு ரூபாயை கொடுத்து அனுப்பிச்சிட்டாரு!

3.   அந்த ஏ.டி.எம் லே எப்பவும் கூட்டமே இருக்காது!
ஆச்சர்யமா இருக்கே?
இதுல என்ன ஆச்சர்யம்? அது எப்பவும் பூட்டித்தானே கிடக்குது!

4.   அவர் தீவிர விஜய் ரசிகர்,,,!
அதுக்காக மளிகைக் கடையில வந்து எனக்கு ‘பை’ரவா! தான் வேணும்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

5.   நிறைய கிரெடிட் கார்டை வச்சிக்கிட்டு தேய்ச்சு தேய்ச்சு பொருளுங்க வாங்கிட்டு இருந்தார் அவர்!
அப்புறம்? நிறைய ஓவர் ட்ராப்ட் ஆகிருச்சுன்னு ஒருநாள் எல்லாரும் அவரை துவைச்சு எடுத்திட்டாங்க!


6.   எதிரியைக் கண்டதும் மன்னர் வில்லை…!
பூட்டிவிட்டாரா?
ஊகும்! போட்டுவிட்டு சரணாகதி அடைந்துவிட்டார்!

7.   யார் அங்கே??
எல்லோரும் ஏ.டி.எம் க்யுவில் நிற்க போய்விட்டார்கள் மன்னா!

8.   உங்களுக்கு ஒரு பொண்ணு பையன்னு சொன்னீங்களே பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
தற்சமயம் ஏ.டி.எம் க்யுவில நின்னு பணம் எடுக்க ட்ரைப் பண்ணிகிட்டு இருக்கான்!

9.   ஆனாலும் கேடி கபாலிக்கு இவ்வளவு திமிர் இருக்க கூடாது,,,!
  ஏன் என்ன சொல்றான்!
மாமூல் வாங்கிங்க கார்டு அக்செப்ட் பண்ணிக்குவீங்களா சார்னு  கேக்கறான்!


10.  மன்னா! கலி முற்றிவிட்டது!
என்ன ஆயிற்று மந்திரியாரே!
எதிரி நமக்கு கப்பம் கட்ட சம்மதித்துவிட்டான்!

11. அந்த போஸ்ட் மேனுக்கு ரொம்பவும் நக்கல் அதிகமா போச்சு!
ஏன்?
ஜோக்ஸ் எழுதி போஸ்ட் பண்ண போனா உங்க வீட்டு குப்பையெல்லாம் எதுக்கு இங்க வந்து கொட்டறீங்க சார்னு கேக்கறான்!


12.  பொங்கல் வாழ்த்து சொன்ன தலைவர் ஜெயில்ல இருக்கிறார்னு எப்படி சொல்றே?
பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் “களி”ப்படைகிறேன்னு அறிக்கை விட்டிருக்காரே!

13.  மன்னா! வீரர்களும் ஊழியர்களும் பொங்கல் பரிசு கேட்டு வந்திருக்கிறார்கள்!
நாளை ஒருநாள் எல்லா ஏடி.எம் களிலும் பணம் வைத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள்!

14. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பொங்கலா போயிருச்சு இந்த வருஷம்!
போனஸ் கிடைச்சும் ஏ,டி.எம் லே பணம் எடுக்க முடியாம போயிருச்சே!

15. அது அரசியல் வாதி வீட்டு குழந்தைன்னு எப்படி சொல்றீங்க?
அம்மாவோட தோழியை “சின்னம்மா”ன்னு கூப்பிடுதே!

16. எதிரியை பார்த்ததும் மன்னர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்!
அப்போ அது அறைக்”கேவல்”னு சொல்லு!


17. என்ன திடீர்னு வீட்டு வாடகையை ஆயிரம் ரூபா ஏத்தி இருக்கறீங்க?
வீட்டு பக்கத்துல இருக்கிற ஏ.டி.எம்ல எப்பவும் பணம் இருந்துட்டே இருக்கே!

18. தலைவருக்கு ஆங்கில அறிவு கம்மின்னு எப்படி சொல்றே?
சுகர்கேன் வழங்கறாங்கன்னு சொன்னா ஏன் கேன்ல தர்றாங்க பை ஸ்டாக் இல்லையான்னு கேக்கறாரே!

19.  பொண்ணுக்கு வாட்சப், பேஸ்புக், டிவிட்டர்னு எந்த பழக்கமும் இல்லே!
ரொம்ப பழமையான வளர்ப்புன்னு சொல்லுங்க!

20. உங்களை ஒரே நாளில் வென்றுவிடுவேன் என்று எதிரி தம்பட்டம் அடித்துக் கொள்கிறான் மன்னா!
  “ஒரு நாள் ஆகுமாமா? அவ்ளோ ஸ்ட்ராங்கா நான்!

வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய போகி, பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. இரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  2. ஏ.டி.எம் பற்றிய நகைச்சுவைகள் அனைத்தும் அருமை...

    இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. எல்லாவற்றையும் ரசித்தேன். எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தொடர்க
    ரசித்தேன்

    ReplyDelete
  5. ரசித்தேன் ...
    சிரித்தேன்...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அனைத்தும் ரசித்தேன்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  7. அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
  8. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. அனைத்துமே ரசனையானவை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2