கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 81
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 81 1. தலைவர் எதுக்கு திடீர்னு கவுன் போட்டுகிட்டு வர்றார்? அவர் வார்டு “கவுன்” சிலருக்கு போட்டியிடப் போறாராம்! 2. அதோ போறாரே அவர் அதிகார மையத்திலே இருக்கார்! செக்ரெட்ரியேட்ல ஒர்க் பண்றாரா? ஊகும்! மிளகா மிஷின் நடத்திகிட்டு இருக்கார்! 3. அந்த டாக்டருக்கு பேஷண்ட்டுங்க பணத்தை கொட்டி கொடுக்கிறாங்களா அப்படி என்ன வைத்தியம் பண்றார்? ஹேர் டிராஸ்பிரண்ட் பண்றார்! 4. நம்ம மானேஜரோட ஆக்டிவிட்டி கொஞ்ச நாளா சரியில்லையே ஏன்? அவர் புதுசா வாங்கின ஜியோ சிம் இன்னும் ஆக்டிவேட் ஆகலையாம்! அதான் டென்ஷனா இருக்கார்! 5. நம் மன்னர் இயற்கை ஆர்வலராமே! அடிக்கடி காட்டுக்கு சென்று விடுகின்றார்? நீ வேறு காட்டு வாசி தலைவரின் பெண்ணின் பெயர் இயற்கை யாம்! 6. என் பொண்டாட்டியோட கைப்பக்குவம் யாருக்கும் வராது! அவ்வளவு நல்லா சமைப்பாங்களா? அவ்வளவு நல்லா யாருக்கும் தெரியாத மாதிரி அடிப்பா! 7. அந்தப் புலவர் இட்டுக் கட்டி பாடுவதில் வல்லவராமே! அதனால் தான் மன்னரிடம் நிறைய துட்டு கட்டி வாங்கிவிடுகிறார்! 8. புலவரே! என்னை