நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 20
1.தேசியம்!
பீஹாரிகளால் கட்டப்பட்டு ஆந்திரர்களால் கடப்பை
கல் பதியப்பட்டு வங்காளிகளால் வர்ணம் பூசப்பட்டு மும்பைகார்கள் வயரிங்க் செய்ய கன்னடர்கள்
சமையல் செய்ய சம்ஸ்கிருதத்தில் ஐயர் மந்திரம் ஓதி ஓமம் வளர்க்க கிரகப்பிரவேசம் ஆனது
தமிழனின் வீடு.
2.நிஞ்சா
டெக்னிக்!
“ஹோம் ஒர்க் எழுது! என்று சொன்ன போது அப்பா! நிஞ்சா டெக்னிக் ஏதாவது பண்ணி
ஹோம் ஒர்க் எழுதினா மாதிரி டீச்சரை ஏமாத்தா ஏதாவது வழி இருக்கா?” என்றான் பையன்.
3.மகிழ்ச்சி!
தந்தை கைது ஆனதும் பிள்ளைகள் எல்லோரும் கூடி பார்ட்டி வைத்தனர். கல்வித் தந்தை கைது என பத்திரிக்கை பேனரில் செய்தி.
4.விழிப்புணர்வு!
திருமண விருந்தில் கொடுத்த பீடாவை மறுத்து நான், பீடா, பான் எல்லாம் போடறதில்லைங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார் ப்ளாக்கில் பான் விற்கும் அந்த நபர்.
5.செல்ஃபி:
பொம்மை போனை தூக்கி எறிந்த பாப்பா சொன்னது. இந்த போன்ல செல்ஃபியே எடுக்க முடியலை! சுத்த வேஸ்ட்! எனக்கு வேண்டாம்.
6.ராங்
ஜர்னி!
“டிக்கெட் வாங்கியிருந்தாலும் நீங்க ராங் ஜர்னி
பண்ணியிருக்கீங்க! ரூல்ஸ்படி ஃபைன் கட்டியே ஆகனும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் முறைகேடாக
லஞ்சம் கொடுத்து பதவிக்கு வந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்.
7.ஏக்கம்!
மண்ணில் புரண்டு விளையாடிக்கொண்டிருக்கும் சகவயது
சிறுவர்களை ஏக்கத்துடன் பார்த்தபடி பள்ளிப் பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தது ப்ரி-கே-ஜி
படிக்கும் குழந்தை.
8.யோசனை!
குவிந்து கிடக்கும் வேஷ்டி –துண்டுகளை என்ன செய்வது
என்று யோசித்துக் கொண்டிருந்தார் நாளைக்கு கட்சி தாவ இருக்கும் தலைவர்.
9.செட்டில்!
அடுத்த ஒலிம்பிக்கில் எப்படியாவது ஒரே ஒரு மெடல்
வாங்கிட்டா போதும்! வாழ்க்கையில செட்டில் ஆயிரலாம்! என்று யோசித்துக் கொண்டிருந்தான்
அந்த இந்திய தடகள வீரன்.
10.டைட்டில்!
டீவியில் ஓடிக்கொண்டிருந்த பழைய படத்தின் டைட்டிலை
எதேச்சையாக பார்த்த டைரக்டர் நல்லதொரு டைட்டில் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தார்.
11.நம்பர்
நம்பர் ஒன்னுக்கு எப்பவும் போட்டி இருந்துகிட்டே இருக்கும். யார் வேண்டுமானாலும் திடீர்னு நம்பர் ஒன் ஆகிடலாம். டூ விற்கு அந்த போட்டி இல்லை! யாரும் நம்பர் டூ ஆக அதிகம் விரும்பறது இல்லை! இது ரொம்ப பாதுகாப்பான இடம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் கட்சியின் நம்பர் டூ தலைவர்.
12.விற்பனை!
தேர்தல் அறிவிப்பு வந்ததும் வாங்கத் தயாராக பலர்
மொய்த்தனர். விற்பனைக்கு வந்தது குடிமகனின் வாக்கு.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அனைத்தும் அருமை. வாக்கு விற்பனை மிகவும் அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
அருமை சுரேஷ்!
ReplyDeleteநொடிக்கதைகள் அனைத்தும்
ReplyDeleteமனம் கவர்ந்த வெடிக்கதைகள்
மிகவும் இரசித்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அதென்ன டிக்கெட் வாங்கியிருந்தாலும் ராங் ஜர்னி?
ReplyDeleteரசித்தேன் அனைத்தையும்.
அருமை
ReplyDeleteசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
அனைத்தும் அருமை.
ReplyDeleteகுடிமகனின் வாக்கு விற்பனை எப்போதும் அமோகம் தான்! :(
ReplyDelete