தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


1.   அணைத்ததும்
அதிகமானது வெப்பம்!
காதலி!

2.   வெள்ளைத் தேவதை விஜயம்!
வழிமேல் விழிவைத்தது!
பூமி!

3.   அணை திறந்ததும்
பாய்ந்தது இரத்த ஆறு!
காவிரி!

4.   மின்னியது
கூசவில்லை!
மின்மினி!

5.   வெளிச்சத்தின் பின்னே
ஒளிந்து கொண்டது
இருட்டு!


6.   அறுவடை வயல்!
இறைந்து கிடந்தன!
பறவைகள்!

7.   விரட்ட விரட்ட
துரத்துகிறது!
தூக்கம்!

8.   மூடி வைத்த முத்துக்கள்
ஓடி ஒடி ஒளிர்ந்தன!
மின்மினி!

9.   எங்கோ ஒலிக்கு பாடல்
ஈர்த்து வருகிறது!
லயிப்பு!10. பூக்களால் நிறைந்திருந்தது
பூக்கள்
ஓணம் பண்டிகை!

11. தொலைதூரப் புன்னகை
தொட்டுவிட்டு சென்றது!
பிறைநிலா!

12. சிதறிய முத்துக்கள்!
சிக்கவில்லை கையில்!
நீரூற்று!

13.  சுழற்றி அடித்தாலும்
சிக்கவில்லை எதிரி!
வேதனையில் மாடு!

14. கொளுந்துவிட்டு
எரிகிறது நீர்!
காவிரி!

15. தேடுதல் வேட்டை!
படையெடுத்தன சிப்பாய்கள்!
எறும்புகள்!


16. அணிவகுத்தன படைகள்!
தப்பவில்லை தாக்குதல்
எறும்புகள்!

17. மனம் பாட
விரல் ஆட உருவானது
கவிதை!

18. கண்ணைத் தோண்டினால்
இனித்தது
நுங்கு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

 1. அனைத்தும் அற்புதமானக் கவிதைகள்
  தொடர் சிந்தனை மலைக்க வைக்கிறது
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை.

  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2