நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 19.

   டோராவும் புஜ்ஜியும்  
நீதான் டோரா, வருண் தான் புஜ்ஜி! நான் போய் ஒளிஞ்சிக்கிறேன்  மேப் உதவியோடு என்னை கண்டுபிடிப்பீங்களாம்! பக்கத்து வீட்டு சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தது குழந்தைதேர்வு:
       டீச்சர் மும்முரமாக டி.ஈ.டி தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்க வகுப்பறையில் விளையாடிக்கொண்டிருந்தனர் பிள்ளைகள்.


விழிப்புணர்வு:
       குட்கா, சிகரெட் விற்கறதில்லைங்க! என்றான் .வாய்ப்புற்று நோயில் பிள்ளையை பறிகொடுத்த பெட்டிக்கடைக்காரன்.

பத்தினி:
     வேலைக்கு கிளம்புகையில் மறக்காமல் கணவனுக்கு குடிக்க குவார்ட்டருக்கு காசு தந்துவிட்டு கிளம்பினாள் அந்த பத்தினி.

தொழில் பக்தி!

     படத்தோட கதை ரொம்ப ஷார்ட்டா இருக்குது! இன்னும் கொஞ்சம் லெந்த்தியா  இருந்தா இன்னும் நல்லா இருக்கும் புது இயக்குனரின் ப்ரிவ்யூ ஷோ பார்த்த சீரியல் இயக்குனர் சொல்லிக்கொண்டிருந்தார்.

திருப்பம்!
    கோடி கோடியாக மந்திரி வீட்டில் சிக்கியது. விசாரணைக் கைதி இறந்ததும் மந்திரிய மறந்தனர் போராளிகளும் மீடியாக்களும்.

சிகிச்சை!
தவறான சிகிச்சையினால் உயிரை விட்டவன் காப்பாற்றிக் கொண்டிருந்தான்
 பல உயிர்களை சிகிச்சை அளிக்காமலேயே!

போராட்டம்!

      காலையிலே இருந்து பேரணி அது இதுன்னு காயற வையில்ல அலைஞ்சி போராடிகிட்டிருக்கோம்! தண்ணி கொடுத்திருவாங்களா? கொடுத்துதான் ஆகனும். இல்லேன்னா விட்டுருவோமா?மனசுக்குள் போராடிக்கொண்டிருந்த போராளி மாலையில் சரக்குக்கு காசு கொடுத்ததும் அப்பாடா தண்ணிக்கு காசு கொடுத்திட்டாங்க! மகிழ்வோடு டாஸ்மாக் கிளம்பினான்.

அலாரம்!
    அலாரம் அடித்ததும் திடுக்கென விழித்து எழுந்து கொண்டான் அபார்ட்மெண்ட் வாசல் கூர்க்கா!

வாட்சப்: 
      இந்த போனில் வாட்சப் இருக்குமாப்பா? என்று திருவிழாவில் வாங்கிய பொம்மை செல்போனைக் காட்டிக் கேட்டது குழந்தை.

செல்ஃபி
      தாலிக் கட்டி முடித்ததும் மணமக்களோடு செல்பி எடுத்து தன் பேஸ்புக் அக்கவுண்டில் 500வது கல்யாணம் என்று அப்லோட் செய்தார் மாடர்ன் புரோகிதர்

ஏமாற்றம்!
     ஏ.டி.எம். மிசினில் கொள்ளையடிக்க வந்த திருடர்கள் மிசினை உடைத்தும் ஒன்றும் சிக்கவில்லை! பணம் இல்லை! பல்லைக்காட்டியது மிசின்.

பய”டேட்டா”
      தேர்தலில் ஜெயிப்பதற்காக வேண்டியவர்களுக்கெல்லாம் 4ஜி டேட்டாவை இலவசமாக டாப் செய்து கொண்டிருந்தார் அந்த கவுன்சிலர் வேட்பாளர்.


நலம் விசாரிப்பு!
     ஒருவாரமாய் காணாமல் போயிருந்த தாத்தா வாட்சப்பிற்கு வந்ததும்
   வந்து குவிந்தன ஏராளமான நலம் விசாரிப்புக்கள்!

தமிழன்!
   சமையல் மாஸ்டர் முதல் கிளினீங் பாய் வரை வெளி மாநில ஆட்களை வைத்து ஓட்டல் நடத்திக்கிட்டு இருக்கியா? சபாஷ்! ஓட்டல் பேரு என்ன?
தமிழன் ஓட்டல்!

டிஸ்கி} கொஞ்சம் கூடுதல் பணி, பத்திரிக்கைகளில் படைப்புக்கள் எழுத முயல்வதால் நண்பர்களின் பதிவுகள் பக்கம் வரவில்லை! பொறுத்துக் கொள்ளுங்கள்! இந்த வாரம் நேரம் எடுத்து வாசித்துவிடுகின்றேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சீரியல், பத்தினி ,தொழில் பக்தி உட்பட அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அனைத்தும் ரசித்தோம்....சுரேஷ் அருமை..பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2