தளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு
கவிதைகள்!
1.அரசவைப் புலவர்களான
அமைச்சர்கள்!
சட்டமன்றம்!
2.வீடுதேடிவந்த
புடவைகள்!
கொலுப்படியில்
அமர
தனிப்படி!
3.நீரூற்றாமலே
வளர்ந்து கொண்டிருக்கிறது
காவிரி பிரச்சனை!
4.மூடிய கதவுகள்!
தட்டியும் திறக்கவில்லை!
காவிரி நீர்!
5.நெகிழிப்பைகள்
வருகை
நினைவிழந்தன
துணிப்பைகள்!
6.ஆட்டம் போட்ட
பூமி!
அடங்கிப்போனது
ஊர்!
பூகம்பம்!
7.விளக்குமாற்றுக்குப்
பஞ்சுமெத்தை
விளையாட்டாகிப்
போனது சொத்தை!
ஒலிம்பிக்!
8.கால்கள் வளைந்தாலும்
வளையவில்லை நம்பிக்கை!
தங்க மாரியப்பன்!
9வாரி இரைத்துவிட்டு
பொறுக்கிறார்கள்!
தேர்தல்வெற்றி!
10.விலை பேசப்படும்
வாக்குரிமை!
வலை வீசும் வேட்பாளர்கள்!
தேர்தல்!
11. கடைவாசல் தவம்!
கடைந்தேற வழியில்லை!
குடிமகன்!
12.விளைந்து அறுவடையில்லை!
வீணாய் போனது
மழைநீர்!
13.நோட்டுக்கள்
சிக்கின!
விடுபட்டார்
அமைச்சர்!
14.இறக்கும் வரை
போராடிக்கொண்டிருந்தன!
அரசுப் பேருந்துகள்!
15.சில்லரைத் தட்டுப்பாடு!
உறக்கம் பிடிக்கவில்லை!
குருக்களுக்கு!
16.குழலூதும் கண்ணன்!
தாளம் போட்டது
சில்லரை
பிச்சைக்காரன்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தையும் ரசித்தேன் சுரேஷ்.
ReplyDeleteஅனைத்தும் அருமை!
ReplyDeleteஒவ்வொரு படைப்பும் உயிரோட்டம் நிறைந்ததாக உள்ளது.
ReplyDeleteநன்று.
முதல் கவிதை சவுக்கடி நண்பரே
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தோம்
ReplyDeleteஎல்லாமே அருமை எனினும், மூன்றும் , நான்கும் யதார்த்தம்!
ReplyDelete