விநாயகத் தத்துவம்! ஆன்மீகத் தகவல்கள்!



மோதகம்!
விநாயகருக்கு சதுர்த்தியன்று மோதகம் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே! அதன் தத்துவம் என்ன தெரியுமா? அரிசி மாவு சுவையற்றது. அதனுள்ளே இருக்கும் பூரணம் சுவையானது. அரிசி மாவு வெல்லத்துடன் சேரும்போது சுவையான தின்பண்டமாக மாறுகின்றது.  பக்தி கலந்த வாழ்வே சுவையானது என்பது மோதகத்தின் தத்துவம் ஆகும்.

விநாயகிகளை தெரியுமா?
 விநாயகர் தெரியும். விநாயகிகளை தெரியுமா?  பெண் வடிவில் சித்தரிக்கப்பட்ட விநாயகர்கள் விநாயகிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் சுமார் 30 இடங்களில் விநாயகிகள் சிற்பங்கள் உள்ளன.  அவற்றில் சில. சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் தூண் சிற்பமாக உள்ளது.  நாகர்கோயில் அருகில் உள்ள வடிவீஸ்வரம் கோயிலில் உள்ள வீணை ஏந்திய புலிக்கால் விநாயகி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன் மண்டபத்தில் உள்ள வியாக்ர சக்தி விநாயகி, நெல்லை வாசுதேவ நல்லூர் யாளி வடிவில் உள்ள விநாயகி, பவானி ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வீணையுடன் விநாயகி ஆகியவை தமிழகத்தில் உள்ள விநாயகிகள் ஆகும்.

ஓங்காரம் சொல்லும் கணபதி:
   காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே புத்தேரி செல்லும் பாதையில் உள்ள பழமைவாய்ந்த கைலாச நாதர் கோயில் அருகே அமைந்துள்ள ஓண காந்தன் தளி என்னும் தலத்தில் கர்ப்பகிரக நுழைவாயிலில் உள்ள விநாயகர் புடைப்பு சிற்பத்தில் காது வைத்து கேட்டால் ஓங்காரம் கேட்கிறது.

பிள்ளையார் சுழி போடுவது ஏன்?
   வியாசர் மஹாபாரதம் சொல்ல அதை தன் தந்தத்தை உடைத்து வேக வேகமாக எழுதியவர் விநாயகர். அதை நினைவு கூறும் விதமாக எதை எழுதுவது என்றாலும் விநாயகரை நினைத்து ஆரம்பிப்பதாக பிள்ளையார் சுழி போட்டு துவங்குகிறோம்.

வன்னி பத்ரம்!
   விநாயகருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்வது விஷேசம் என்று புராணங்கள் கூறுகின்றன. அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி இலை சார்த்தி அர்ச்சனை செய்து நெல்பொறி நிவேதனம் செய்து வர திருமணத்தடை அகன்று திருமண பாக்கியம் கைகூடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.


 திருவலம் வந்த விநாயகர்!
     ஞானப்பழத்தை அடைவதற்காக அம்மையப்பரை வலம் வந்த விநாயகர் எழுந்தருளியுள்ள தலம் ஆற்காடு ராணிப்பேட்டை சாலையில் திருவலம் என்ற ஊரில் அமைந்துள்ளது.. வில்வநாதீஸ்வரர் சன்னதியில் வில்வநாதரை பார்த்தவண்ணம் கையில் ஞானப்பழத்துடன் காட்சி தரும் விநாயகரை காண கண்கோடி வேண்டும்.

நரமுக விநாயகர்:
   விநாயகர் யானை முகத்துடனே காட்சி தருவார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரிய கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் ஆதிவிநாயகர் என்னும் நரமுக விநாயகர் உள்ளார். திருவாரூர் மாவட்டம் செதலப்பதி என்னும் தலத்திலும் நரமுக விநாயகர் உள்ளார்.  நரமுக விநாயகர் தொந்தியுடன் ஜடாமுடி தரித்து மோதகம் விளாம்பழம் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.

தோப்புக்கரணம் ஏன்?
   ஒரு சமயம் மஹாவிஷ்ணுவின் சக்கரத்தை விநாயகர் விளையாட்டாக விழுங்கி விட்டாரம். அவரிடம் இருந்து அதை எப்படி பெறுவது. விநாயகரை சிரிக்க வைத்து வாய்வழியே சக்கரத்தை விழ செய்யலாம் என்று தன் காதுகளை பிடித்து உட்கார்ந்து எழுந்தார். அதைக்கண்டு விநாயகர் சிரித்து குலுங்க சக்கரம் வெளியே வந்தது. இது புராணம்.  நம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் காதில் சென்று முடிகின்றது.எனவே காதுகளை பிடித்து எழுத்து உட்கார்ந்து எழுந்து பயிற்சி செய்வதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் கிடைக்கிறது.

விநாயகத் தத்துவம்!
     தலை ஞானத்தையும் பெரிய காதுகள் வேதாந்த உண்மைகளையும் கேட்டறிதலையும் ஐங்கரங்கள் ஐந்தொழிலையும் முக்கண்கள் சூரிய சந்திர அக்னியையும் தும்பிக்கை புத்தியினையும் இன்பம், துன்பம், இனிப்பு, கசப்பு, செல்வம் வறுமை அனைத்தும் கலந்ததே வாழ்க்கை என்பதை குறிக்க ஒற்றைக் கொம்பும் அண்டங்கள் அனைத்தையும் உயிர்களையும் தன்னகத்தே கொண்டது பெரிய வயிறு.

அருகம்புல்லின் மகிமை!
   அருகம் புல்லானது எளிதில் கிடைக்க கூடியது. ஒரிடத்தில் வளர்ந்து ஆறு இடங்களில் பரவக்கூடிய மூலிகை. உஷ்ணத்தை தணிக்க கூடியது. அனலாசுரனை வதம் செய்த விநாயகருக்கு அருகம்புல் சார்த்தியதால் உஷ்ணம் தணிந்து குணமடைந்தார்.

சிதறு தேங்காய் ஏன்?
     பார்வதி குளிக்கையில் உள்ளே வந்த சிவனை விநாயகர் தடுக்க அவர் கோபம் கொண்டு சிரத்தை கொய்து விடுகின்றார். பின்னர் அவருக்கு யானை முகம் பொறுத்தப்பட்டது. அப்போது சினம் தணியாத விநாயகர் சிவனின் தலையை கொய்ய வேண்டும் என்கிறார். சிவனுக்கு மூன்று கண் உள்ளது போன்ற தேங்காயிலும் மூன்று கண்கள் உள்ளதால் தேங்காயை சிதறவிட்டனர். சிதறு தேங்காய் விடுவதால் காரிய தடைகள் விலகி  வெற்றி கிடைக்கும்


(புத்தகங்களில் படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அதிகம் அறிந்திராத அருமையான தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அறியாத விஷயங்கள்... சகோ
    விநாயகி இது வரை அறியாதது
    அனைத்தும் அருமை சகோ

    ReplyDelete
  3. விநாயகி சிலைகள் - ரொம்ப நாட்களாக விநாயகி சிலை கிடைக்குமா என தேடி வருகிறேன். நண்பர் ஒருவருக்கு பரிசளிக்க வேண்டும்.... தமிழகத்தில் எங்கே கிடைக்கும் என்று தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. விநாயகி - மதுரையில் இருக்கா..? அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவில் போறோம்... பார்த்ததில்லை பார்க்கணும்...
    விநாயகி படமோ சிலையோ கிடைத்தால் வீட்டில் வைத்து பூஜிக்கலாம்தானே...?

    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  5. தொகுப்பு அருமை சுரேஷ்! விநாயகி பற்றி அறிவோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2