கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 81
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 81
1.
தலைவர்
எதுக்கு திடீர்னு கவுன் போட்டுகிட்டு வர்றார்?
அவர் வார்டு “கவுன்” சிலருக்கு
போட்டியிடப் போறாராம்!
2.
அதோ
போறாரே அவர் அதிகார மையத்திலே இருக்கார்!
செக்ரெட்ரியேட்ல ஒர்க் பண்றாரா?
ஊகும்! மிளகா மிஷின் நடத்திகிட்டு இருக்கார்!
3.
அந்த
டாக்டருக்கு பேஷண்ட்டுங்க பணத்தை கொட்டி கொடுக்கிறாங்களா அப்படி என்ன வைத்தியம் பண்றார்?
ஹேர் டிராஸ்பிரண்ட் பண்றார்!
4.
நம்ம
மானேஜரோட ஆக்டிவிட்டி கொஞ்ச நாளா சரியில்லையே ஏன்?
அவர் புதுசா வாங்கின ஜியோ சிம்
இன்னும் ஆக்டிவேட் ஆகலையாம்! அதான் டென்ஷனா இருக்கார்!
5.
நம் மன்னர் இயற்கை ஆர்வலராமே! அடிக்கடி காட்டுக்கு
சென்று விடுகின்றார்?
நீ வேறு காட்டு வாசி தலைவரின் பெண்ணின் பெயர் இயற்கை
யாம்!
6.
என்
பொண்டாட்டியோட கைப்பக்குவம் யாருக்கும் வராது!
அவ்வளவு நல்லா சமைப்பாங்களா?
அவ்வளவு நல்லா யாருக்கும் தெரியாத
மாதிரி அடிப்பா!
7.
அந்தப்
புலவர் இட்டுக் கட்டி பாடுவதில் வல்லவராமே!
அதனால் தான் மன்னரிடம் நிறைய
துட்டு கட்டி வாங்கிவிடுகிறார்!
8.
புலவரே!
என்னை புகழ்ந்து நிறைய மெய்கீர்த்திகள் எழுதலாமே!
உங்களை புகழ்ந்து நிறைய பொய்க்
கீர்த்திகள் வேண்டுமானால் எழுதலாம் மன்னா!
9.
என்ன
மாப்பிள்ளை! என் பொண்ணுக்கு போட்ட நகையை எல்லாம் வித்து சாப்பிட்டுட்டீங்களாமே!
நீங்கதானே சொன்னீங்க மாமா! என்
பொண்ணு முகத்துலே புன்னகையை தவிர வேற எதையும் பார்க்க கூடாதுன்னு! அதான் பொன் நகையை
எல்லாம் வித்துட்டேன்!
10. அந்த சேல்ஸ்மேன் கிண்டல் பேர்வழியா இருக்கான்!
எப்படி?
புதுசா வாங்கற துணி நல்லா உழைக்குமான்னு
கேட்டா அது நீங்க உழைக்காம இருக்கிறதை பொறுத்துதான்னு சொல்றான்!
11. அந்த டாக்டர் போலியா இருப்பார்னு எப்படி சொல்றே?
புதுசா வாங்குன செருப்பு கடிச்சிருச்சுன்னு சொன்னா
தொப்புளை சுத்தி பதினாறு ஊசி போட்டே ஆகனும்னு சொல்றாரே!
12. எதிரி கூப்பிடு தூரத்தில் வந்து விட்டான் மன்னா!
ஓடிப்போய் கும்பிடு போட்டு விட்டு
வந்துவிடலாமா மந்திரியாரே!
13. நம் மன்னருக்கு நாட்டுப் பற்று அதிகம் என்று எப்படி
சொல்கிறாய்?
பாரின் சரக்கு அடிக்காமல் டாஸ்மாக் சரக்கையே குடிக்கிறாரே
அதை வைச்சுத்தான்!
14. என்னப்பா சர்வர் ஆமை வடை கேட்டு அரை மணி நேரம் ஆச்சு
இன்னும் கொண்டு வரலையே!
ஆமை வடையாச்சே சார்! மெதுவாத்
தான் வரும்!
15. அந்த ஜிராக்ஸ் கடைக்காரர் இதுக்கு முன்னாடி
டீ கடை வைச்சிருந்தார் போலிருக்கு…!
எப்படி சொல்றே?
ஜிராக்ஸ் காபி எடுக்க போனா சிங்கிளா
போடவா கப்பா போடவான்னு கேக்கறாரே!
16. ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டுல சம்பந்தம்
பண்ணிக்கிட்டது தப்பா போச்சா ஏன்?
ரியலை விட ரீல் அதிகமா இருக்குது!
17. பிடிக்காம போனதாலேதான் அந்த பொண்ணு மேல இடிச்சேன்னு
சொல்றியே பிடிக்கலைன்னா இடிச்சுருவியா?
ஐயோ சார்! நான் பொண்ணை பிடிக்கலைன்னு
சொல்லலை! ப்ரேக் பிடிக்கலைன்னு சொன்னேன்!
18. இன்னிக்கு நான் பண்ண ஸ்வீட்டுக்கு ஏகப்பட்ட
ரெஸ்பான்ஸ்!
வீட்டுலையா?
இல்லே பேஸ் புக்கில! ஐநூறு லைக்ஸ்
விழுந்துருச்சே!
19. நம்ம மேயர் வேட்பாளருக்கு நிறைய பெண்களோட தொடர்பு
இருக்காமே?
அப்ப அவர் மேயற வேட்பாளர்னு சொல்லு!
20. அதோ போறாரே! அவர் பெரிய சீரியல் கில்லராம்!
எப்படி?
டீ வி சீரியல் டைரக்டரா இருக்கார்!
21. எதிரி நம்மை துச்சமாக நினைத்து சூறையாடிக்கொண்டிருக்கிறான் மன்னா!
போனால் போகட்டும் கொஞ்சம் மிச்சம் மீதியையாவது விட்டு விட்டு போகட்டும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ரசித்தேன் சகோதரா....
ReplyDeleteஅனைத்தையும் இரசித்தேன் நண்பரே...
ReplyDeleteமேயற வேட்பாளர் ஹாஹாஹா ஸூப்பர்
ரசித்தேன்.
ReplyDeleteகவுன்சிலரே கவுன் போட்டால் ,மேயர் என்ன போடுவாரோ :)
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன் ஜி !
சார், சும்மா சொல்லக்கூடாது, இந்தத் தடவை செம விருந்து!
ReplyDeleteஇதோ என் வரிசை:
ஜெராக்ஸ் கடைக்காரர்
மன்னரின் இயற்கை ஆர்வம்
ரியல்-- ரீல்
கூப்பிடு - கும்பிடு
மெய்க்கீர்த்தி-- பொய்க்கீர்த்தி
பெண்டாட்டி கைப்பக்குவம்
தொப்புள் ஊசி
கொஞ்சம் என்ன, நிறையவே ஹஹ்ஹஹ்ஹா தான்!
ரசித்தேன்
ReplyDeleteசிரித்தேன் நண்பரே
ReplyDeleteபுன்னகையைப் பேண
பொன்நகையை விற்றாரோ
அருமையான பதிவு
அனைத்தும் ரசித்தேன். நன்றி.....
ReplyDeleteஹிஹிஹிஹிஹிஹி!
ReplyDelete