Posts

Showing posts from May, 2012

குழப்பமின்றி மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?

Image
புதிய மின் கட்டண முறையில், வீட்டு இணைப்பு நுகர்வோர் குழப்பமின்றி கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களை, தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. குழப்பம்: புதிய மின் கட்டண முறைகளை, தமிழக அரசு, ஏப்ரல் முதல் அமல்படுத்தியுள்ளது. இதில் வீடுகளுக்கான கட்டணம், பலவித அடுக்கு முறைகளை கொண்டுள்ளதால், எத்தனை யூனிட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் என, நுகர்வோர் குழப்பமடைகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சென்னை மண்டல அமைப்பாளர் சுதர்சனம் மற்றும் காஞ்சி மாவட்டச் செயலர் வரதராஜன் ஆகியோர், புதிய மின் கட்டண விவரங்களை, கையடக்க அட்டைகளாக அச்சடித்து, மின் நுகர்வோருக்கு இலவசமாக வழங்குகின்றனர். கட்டண முறை: வீடுகளுக்கான மின் கட்டண கணக்கீட்டு முறை குறித்து, அதில் கூறியிருப்பதாவது :நூறு யூனிட்கள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும். 101 யூனிட்டுகளுக்கு மேல், 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 பைசா வீதம், மின் கட

ரியாலிட்டி ஷோக்களும்! ரீல் விடும் டீவீக்களும்!

Image
ரியாலிட்டி ஷோக்களும்! ரீல் விடும் டீவீக்களும்! ஒரு காலத்தில் தமிழ் தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்கள் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருந்தது.அரைத்தமாவையே அரைத்துக் கொண்டு மெகாத் தொடர்கள் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளை அழவைத்துக் கொண்டு இருந்த நிலையில் விஜய் டீவி ஸ்டார் குருப் வசம் கை மாறியது. அந்த சமயத்தில்தான் முதல் ரியாலிட்டி ஷோவாக ஜோடி நம்பர் 1 உருவானது.இந்த ஷோவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே சூப்பர் சிங்கர் ஜூனியர் சூப்பர் சிங்கர், என்று ரியாலிட்டி ஷோக்களை துவங்கியது விஜய் டீவி!        விஜய் டீவியை பார்த்து சன்னும் மற்ற சேனல்களும் ரியாலிட்டி ஷோக்களை துவக்க ஆரம்பித்தன. சன்னில் அசத்த போவது யாரு? விஜயின் கலக்க போவது யாரு? வின் அப்பட்டமான காப்பியாக அமைந்தது. சன்னுக்கு போட்டியாக கலைஞர் டீவி உதயமானதும் மானாட மயிலாட ஆரம்பித்தது. இதுவும் ஜோடி நம்பர் 1ன் பாதிப்பில் விளைந்த ஒன்றுதான்!     இந்த ஷோக்களை சுவாரஸ்யமாக்க டீவிக்கள் செய்யும் விசமங்கள்தான் ஷோக்களை பரபரப்பாக மாற்றுகிறது. உண்மையில் இந்த ஷோக்களால் மக்களுக்கு ஒரு லாபமும் இல்லை! ஆனாலும் வியாபார நோக்கில் அதி

புகைப்பிடிக்காதே! அம்பரீஷூக்கு ரஜினி அட்வைஸ்!

Image
  புகை பிடிக்காதே! அம்பரீஷூக்கு ரஜினி அட்வைஸ்! கன்னட நடிகர் அம்பரீஷீன் 60வது பிறந்த நாள் விழா பெங்களூரில் நடந்தது. விழாவில் தமிழ் தெலுங்கு இந்தி, கன்னடம் என ஏராளமான நடிக நடிகையர்கள் கலந்து கொண்டு அம்பரீஷின் 40 ஆண்டுகால சினிமா சாதனைகளை பட்டியலிட்டு பேசினர். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு அம்பரீஷிடம் புகைப் பிடிப்பதை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார்! விழாவில் ரஜினி பேசியது அம்பரீஷ் திறமையான நடிகர். அவரிடம் கிருஷ்ணர், பீமன், சகுனி, துரியோதனன் அம்சங்களைப் பார்க்கிறேன். சமையலில் பீமனுக்கு நிகர் அவர். பிரியாணி சாப்பிடுவதற்காக அவரது வீட்டுக்கு போவேன். கர்ணனைப் போன்ற கொடையாளி. துரியோதனனைப் போல அனைத்து நல்லது கெட்டதுகளையும் அறிந்தவர் அவர். துரியோதனனைப் போலவே, கெட்ட விஷயம் தெரிந்த பிறகும் விடாமல் இருக்கிறார். புகை பிடிப்பதனால் வரும் பாதிப்புகள் அம்பரீசுக்கு தெரியும். ஆனாலும் அதை அவர் விடவில்லை. புகைப் பழக்கத்தால்தான் என் உடல்நிலை இந்த அளவு பாதிக்கப்பட்டது. அதனால் நான் அடியோடு அதை விட்டுவிட்டேன். அம்பரீஷ், நீயும் இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடு," என

குடியரசு தலைவராக ஆசைப்படும் திமுக தலைவர்?!!

Image
ஜனாதிபதி பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார் போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம் காத்துவருகிறார். துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என, பலருக்கு இந்த பதவியில் அமர ஆசை. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல் விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, "தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர். பிரபல எதிர்க்கட்சித் தலைவரை அந்த தி.மு.க., குழு சந்தித்து விஷயத்தைச் சொன்னதுமே, அவர் ஆடிப்போனாராம். உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் அந்த தலைவர். "ஜனாதிபதி பதவியில் தலைவரை அமர்த்த நாங்கள் ஆசைப்படுகிறோம்' என்று தி.மு.க., வினர் சொல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர தலைவரை பார்க்கும் படி சொன்னார் அந்த எதிர்க்கட்சி தலைவர். உடனே

5 ஆவது முறையாக உலக சாம்பியன் ஆனார் வி. ஆனந்த்!

Image
மாஸ்கோ: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். இன்று நடந்த பரபரப்பான "டை- பிரேக்கரில்' இஸ்ரேலின் ஜெல்பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார். ரஷ்யாவின் மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 42, இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பாண்டு, 43, மோதினர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின், 7வது மற்றும் 8வது சுற்றில் மட்டும், இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். மற்ற 10 சுற்றுகள் "டிரா' ஆனது. 12 சுற்று முடிவில் இரு வீரர்களும் தலா 6 புள்ளி பெற்றனர். இதையடுத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய, போட்டி "டை பிரேக்கருக்கு' சென்றது. "ரேபிட்' முறையில் நான்கு போட்டிகள் நடந்தது. இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன. முதல் "டிரா' : முதல் போட்டியில் கறுப்பு காய்களுடன் ஆனந்த் விளையாடினார். இப்போட்டி 32வது நகர்த்தலின் போது "டிரா' ஆனது. ஆனந்த் முன்னிலை : பின் இரண்டாவது போட்டியில் வெள்ளை காய்களுடன் போட்டியை துவக்கிய ஆனந்த், அசத்தலான

மனித ரத்தத்தில் எரியும் விசித்திர விளக்கு:

Image
லண்டன்: மனித ரத்தத்தில் எரியும் விளக்கை அமெரிக்க டிசைனர் ஒருவர் வடிவமைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த டிசைனர் மைக் தாம்ப்சன். அவர் சற்று வித்தியாசமாக மனித ரத்தத்தில் எரியும் விளக்கை வடிவமைத்துள்ளார். அந்த விளக்கினுள் ரசாயனங்களை வைத்துள்ளார். அந்த கண்ணாடி விளக்கை எரிய வைக்க அதன் வாய்ப் பகுதியை உடைத்து அந்த துண்டைக் கொண்டு கையைக் கீறி ரத்தத்தை அந்த ரசாயனங்களில் விட வேண்டும். ரத்தம் ரசாயனங்களுடன் கலந்த பிறகு விளக்கு நீல நிறத்தில் பிரகாசிக்கிறது. இந்த விளக்கை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மக்கள் மின்சாரத்தின் அருமை தெரியாமல் கண்டபடி வீணடிப்பதை உணர்த்தவே இந்த விளக்கை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மனித உடலில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறினால் அது எப்படி உயிருக்கு ஆபத்தோ, அதே போன்று தான் மின் சக்தியை அதிகம் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது இணையதளத்தில் மேலும் கூறுகையில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த விளக்கு இருப்பது, விளக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும் எ

ஷாருக்குடன் மம்தா குத்தாட்டம்! ஐபிஎல் அரசியல்!

Image
ஷாருக்குடன் மம்தா குத்தாட்டம்! ரசிகர்கள் ரகளை! திண்டாட்டத்தில் முடிந்த கொண்டாட்டம்! ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு பாராட்டு விழா நடத்திய மேற்கு வங்க அரசு இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. விழாவில் அரசியல் புகுந்து விளையாடியது. ரசிகர்கள் மீது தடியடி நடத்தியதில் பெரும் களேபரம் நடந்தது. தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவே மம்தா இவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ள எதிர்கட்சிகள் அவர் ஷாருக்கானுடன் மேடையில் நடனம் ஆடியதையும் உடன் கவர்னரும் ஆடியதையும் கடுமையாக விமரிசத்து உள்ளன.     ஐபிஎல் போட்டிகள் முடிந்தும் பரபரப்புக்கு பஞ்சமில்லை! ஆடை அவிழ்ப்பு ராணிகள் பூனம் பாண்டேவும் ரோஸ்லின் கானும் ஆடைஅவிழ்த்து தங்கள் பங்கிற்கு பரபரப்பு ஏற்படுத்த இதுவரை இல்லாத ஒரு புதிய மரபை கொண்டு வந்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா. ஐபிஎல் என்பது ஒரு தனியார் அமைப்பு. இதன் அணிகளும் தனியாருக்கு சொந்தமானது. நாட்டிற்கோ மாநிலத்திற்கோ சொந்தமானது அல்ல. இந்த அமைப்பு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு விழா என்பது கொஞ்சம் அதிகமானதுதான்.     மேற்கு வங்க மாநிலம் ஏற்கனவே நித

காற்றில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்! வேலூர் அருகே பரபரப்பு!

Image
வேலூர்:  வேலூர் அருகே ரோட்டில் காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே உள்ளது வேலப்பாடி மெயின் ரோடு. இங்கு திடீரென ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்த வண்ணம் இருந்தது. முதலில் 100 ரூபாய் நோட்டுகளும், பின்பு 10 ரூபாய் நோட்டுகளும், அடுத்து 20 ரூபாய் நோட்டுகளும், தொடர்ந்து 50 ரூபாய் நோட்டுகளும் வரிசையாக பறந்து வந்தன. இதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை பறந்து பறந்தே பிடித்தனர். சிறியவர் முதல் பெரியவர்கள் என பலரும் முன்டியடித்து காற்றில் வந்த நோட்டுகளை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாங்கள் ஓடி, ஓடி பிடித்த நோட்டுகளை பறிமுதல் செய்ய போலீசார் வந்த தகவல் அறிந்து பலரும் மாயமாய் மறைந்துவிட்டனர். இருப்பினும் பொது மக்களிடம் இருந்த சுமார் 8,900 ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ரூபாய் நோட்டுக்கள் எங்கிருந்து வந்தது, யார் பறக்க விட்டனர் என்ற தகவல் தெரியவில

யோகா உலக கோப்பை: தங்கம் வென்ற கும்மிடி பூண்டி பள்ளி மாணவன்

Image
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக யோகா போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், ஷகிலா தம்பதியர் மகன் பிரவீன், 12. கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ள மாணவன்.அதே பகுதியில் உள்ள கைரளி யோகா மையத்தில், நான்கு ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். கடந்த வாரம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் பசிபிக் - ஆசியா யோக விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடந்த 20-20 யோக உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க பிரவீன் தேர்வானார்.ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் என்பதால் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சேகர், டி.ஜே.எஸ்., கல்வி குழுமம் உள்ளிட்டவர்களின் உதவியால் யோகா உலக கோப்பையில் பிரவீன் பங்கேற்றார்.மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நடந்த தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்ற பிரவீன் தாய்லாந்து நாட்டில் நடந்த இறுதி சுற்றுக்கு தேர்வானார். ஆஸ்திரேலியா, சீனா, நார்வே, பின்லாந்து, ரஷ்யா, ப

சூதாட்ட சர்ச்சையில் ஐபிஎல்! இறுதி போட்டி எழுப்பும் கேள்விகள்!

Image
சூதாட்ட சர்ச்சையில் ஐபிஎல்! பரபரப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் திருவிழாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பை தட்டி சென்றது. ஆனாலும் இறுதி போட்டியில் சென்னை தோற்றவிதமும் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய விதமும் பலரது புருங்களை உயர்த்தியுள்ளது. நிறைய கேள்விகள் அதற்கு சரியான பதில்கள் இல்லை என்ற நிலையில் ஐபிஎல் ஒரு சூதாட்டம் என்ற நினைப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடர்.     வீட்டில் சோத்துக்கு வழி இல்லை என்றாலும் டீவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருப்பானே தவிர உருப்படியாக வேலைக்கு போகமாட்டார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இப்படி பட்ட கிரிக்கெட் ரசிகர்களை அவமானப்படுத்தும் அளவுக்கு இப்போது கிரிக்கெட்டில் பணம் புழங்கத்தொடங்க விட்டது. அதிலும் உலகத்திலேயே மிக பணக்கார கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ வளர்ந்து தன் ஆதிக்கத்தினை கோலொச்சி வருகிறது. அதனுடைய கண்டுபிடிப்புதான் இந்த டி20 ஐபிஎல். ரசிகர்களிடையே டி20க்கு இருக்கும் வரவேற்பை மனதில் கொண்டு இந்த ஐபிஎல் போட்டிகளை உருவாக்கி லலித் மோடியை தலைவராக்கியது. இறுதியில் அவரே போட்டிகளி

பிஸ்லாவின் ஆட்டத்தில் புஸ்ஸாகிய சென்னை!

Image
பிஸ்லாவின் ஆட்டத்தில் புஸ்ஸாகிய சென்னை! ஐபிஎல்லின் பைனலில் தோற்று சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது சென்னை. தோனியின் அதிர்ஷ்டம் இந்த முறை பைனலில் கை கொடுக்கவில்லை! கோப்பை வெல்வதில் கே கே. ஆர் அணியினருக்கு இருந்த உறுதியும் போராட்டமும் கொஞ்சம் கூட சென்னை அணியில் இல்லாது போனது கோப்பையை இழக்க காரணமாக இருந்தது.    ஐந்தாவதுஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே சரிவுகளை சந்தித்த சென்னை அதிர்ஷ்ட வாய்ப்பில் ப்ளே ஆப் சுற்றில் நுழைந்து மும்பை டெல்லி அணிகளை அபாரமாக வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது. இந்த பைனலில் எப்படி ஆட வேண்டும் என்பதை மறந்து கோப்பை நமக்குத்தான் என்பது போல ரிலாக்ஸாக ஆடி தோற்றது சென்னை. இதற்கு கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப்பும் ஒரு முக்கிய காரணம்.      இந்த மாதிரி போட்டிகளில் டாஸ் ஒரு முக்கியத்துவம் பெறும். அந்த டாஸை வென்ற தோனி கோப்பையை கை நழுவ விட்டதற்கு காரணம் பவுலர்களை சரியாக பயன்படுத்தாமையே! பேட்டிங்கும் அவ்வளவு சிறப்பு என்று சொல்ல முடியாது. முரளிவிஜயும் ஹசியும் சிறப்பான துவக்கம் தந்தாலும் டெல்லி அணிக்கு எதிராக ஆடியது போல அவ்வளவு அதிரடியாக ஆடவில்லை. டெல்லிக

"ஓ" போடவைத்த கோவா! பெட்ரோல் ரூ 60 தான்!

Image
பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது! குறையுங்கள்! குறையுங்கள் என்று எதிர்கட்சிகள் அனைத்தும் போராட்டம்! ஆர்பாட்டம் என அறிவிப்புக்களை வெளியிட்டு கொண்டிருக்க சத்தம் போடாமல் ஒரு சாதனை படைத்திருக்கிறது கோவா அரசாங்கம்! உண்மையிலேயே மக்கள் மேல் அக்கறை உள்ள ஒரு அரசு செய்யவேண்டியது இது தான் என்று  எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது கோவா அரசு.    நாடெங்கும் பெட்ரோல் விலை ரூ 80 ஐ நெருங்கிய நிலையில் இங்கு மட்டும் ரூ 60க்கு கிடைக்கிறது.  சென்னையோடு ஒப்பிடும் போது லிட்டருக்கு ரூ 17 குறைவு டில்லியோடு ஒப்பிடுகையில் லிட்டருக்கு ரூ 12 குறைவு. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? சாத்தியப்பட்டு சாதித்திருக்கிறது கோவா அரசாங்கம்!      பெட்ரோல் மீதான வாட் வரியை முற்றிலுமாக நீக்கி விட்டது கோவா அரசு! இதனால்தான் பெட்ரோல் விலை அங்கு குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ 26 வரை வரியாக விதிக்கப்படுகிறது. இதனால் தான் கூடுதல் விலை செலுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. வரி செலுத்தாவிடில் அரசுக்கு இழப்புதான். அந்த இழப்பை ஆடம்பர பொருட்கள் மீது அதிக வரி விதித்து ஈடுகட்டி கொள்கிறது கோவா அரசு. ஈடு செய்வது எப்படி? பெட்ரோல்

நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்

Image
லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர். கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் 'ஜஸ்ட் லைக் தட்' இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன். ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர். ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார். இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக

இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!

Image
யாழ்ப்பாணம்: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது. இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, தேமுதிக வைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை. ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன

ஹாட்ரிக் கோப்பை அள்ளுமா சி.எஸ்.கே! ஓர் அலசல்!

Image
 ஹாட்ரிக் கோப்பை அள்ளுமா சி.எஸ்.கே! ஓர் அலசல்! சென்னை சூப்பர்கிங்ஸ் ஐபிஎல் போட்டிகளில் துவக்கத்தில் இருந்தே ஒரு அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. இதுவரை நடந்த 5 ஐபிஎல் தொடர்களில் நான்காவது முறையாக பைனலுக்கு வந்துள்ளது. அதில் இரண்டுமுறை கோப்பை வென்றுள்ளது. ஒருமுறை முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்சிடம் சிறு வித்தியாசத்தில் கோப்பையை இழந்தது. இதனால் தான் ஐபிஎல் அரங்கில் சென்னை அணிக்கு எப்போதுமே ஒரு மரியாதை இருக்கிறது என்று சொன்னேன்.       இந்த முறை அனைவரின் கணிப்புக்களையும் பொய்யாக்கி அதிர்ஷ்ட வாய்ப்பினால் ப்ளே ஆப் சுற்றினுள் உள்ளே நுழைந்த அணி தன்னை பலம் வாய்ந்த அணியாக காட்டிவருகிறது. இதற்கு முன் மும்பை டெல்லி அணிகளை எதிர்கொண்ட விதத்திற்கும் ப்ளே ஆப்பில்  எதிர்கொண்ட விதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.     நாக் அவுட் வாழ்வா சாவா? என்ற நிலையில் சென்னை எப்போதுமே ஜொலிக்கும். அந்த ஜொலிப்பு கடந்த இரண்டு ஆட்டங்களில் பிரமாதமாக இருந்தது. கேப்டன் தோனி மும்பைக்கு எதிராக சூறாவளி ஆட்டம் ஆடி அசத்தி இழந்த பார்மை மீட்டுவிட்டார். டெல்லி அணியையும் இவரது ஆட்டம் மிரட்டிவிட்டது.

தப்பாட்டம் ஆடும் தமிழக ஐ.டி அமைச்சர்! பரப்பரப்பு தகவல்கள்!

Image
சென்னை: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் பொய்யாக தாம் பி.ஏ. படித்திருப்பதாக அரசுக் குறிப்பில் இடம்பெறச் செய்திருப்பது தவறு என்று சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரும் இது தொடர்பாக போயஸ் தோட்டத்துக்கு புகார் மேல் புகார் அனுப்பி வருகின்றனர். உண்மையில் முக்கூர் சுப்பிரமணியம் படித்திருப்பதுதான் என்ன? சட்டப்பேரவைத் தேர்தலின் போது செய்யார் தொகுதி வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் பி.ஏ. என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். பேரவைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின் போது பி.ஏ. இரண்டாம் ஆண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 6-ம் வகுப்பு பெயில் என்று குறிப்பிட்டிருந்தார். முக்கூர் சுப்பிரமணியம் வெற்றி பெற்ற பின்னர் அரசின் குறிப்புகளில் பி.ஏ. என்றே இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தவுடன் பி.ஏ. என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டு அனைவரது வாயையும் அடைத்தனர். இது தொடர்பாக முக்கூர் சுப்பிரமணியத்திடம் கேட்கும் பத்திரிகையாளர்களிடம் தமிழ்நாடு திறந்தவெளிப் பல

விஸ்வரூபம் எடுத்த விஜய்! சரணாகதி அடைந்த வீரு!

Image
விஸ்வரூபம் எடுத்த விஜய்! சரணாகதி அடைந்த வீரு! நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்தவர்கள் யாரும் எளிதில் மறக்கமாட்டார்கள்! அப்படி ஒரு ஆட்டம் ஆடி விஸ்வரூபம் எடுத்து எதிரணியை ஒரே ஆளாய் வீழ்த்திவிட்டார் விஜய்.     முரளிவிஜய் தமிழக அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன். கிளாசிக் பேட்ஸ்மேன் என்று அவரை வர்ணிப்பார்கள். சென்னை அணிக்கு தேர்வானபோது எல்லோருமே ஆச்சர்யப்பட்டார்கள் டி20 போட்டிக்கு இவர் ஒத்துவருவாரா என்பதுதான் அந்த ஆச்சர்யம். ரஞ்சி போட்டிகளில் பொறுமையாக ஆடி ரன் குவிப்பதற்கும் டி20க்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இவர் முதல் ஐபிஎல் தொடரில் அவ்வளவாக அணியில் சேர்க்க வில்லை. 2010 ஐபிஎல் தொடர்தான் இவரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.     அந்த தொடரில் சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார். அதன் பின் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஒருசதம் கூட அடித்தார். ஆனால் இவரை நிலையாக அணியில் நீடிக்க விடவில்லை தேர்வாளர்கள். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பெரிதாக பேசப்பட்டாலும் மோசமான பார்ம் காரணமாக பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.    இந்த