காதலில் விழுந்த சச்சின் மகன் அர்ஜுன்! சப்போர்ட் செய்யும் சச்சின்!
இந்திய கிரிக்கெட்டின் கடவுளான சச்சினின் மகன் அர்ஜுன் காதலில் விழுந்துள்ளதாக அவரது தந்தை சச்சினே தெரிவித்துள்ளது பரபரப்பான தகவலாக அமைந்துள்ளது. சச்சினின் மகன் அர்ஜுன் வயது 11. இளம் கிரிக்கெட்டரான இவரை ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் பாராட்டி இருந்தார். இவர்தான் இப்போது காதலில் சிக்கியுள்ளார். என்னது அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டீர்களா? கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு மேலே படியுங்கள்! அட மேலே என்றால் மேலே பொய்விடாதீர்கள் இங்கேதான்!
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை அமெரிக்காவில் இருந்து வரும் பிரபல டைம் பத்திரிக்கை தனது அட்டை படத்தில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. இப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சச்சின் கூறியது, எனதுமகன் அர்ஜுனை கிரிக்கெட்டை தேர்வு செய்யும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை! அவனாகவே கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ளான், எத்தனை மணி நேரம் பயிற்சி செய்கிறான் என்பது கணக்கில்லை.கிரிக்கெட்டை அவன் அனுபவித்து விளையாடவேண்டுமென்று விரும்புகிறேன். கிரிக்கெட் ஆர்வம் முதலில் இதயத்தில் இருந்து துவங்கும். பின் ஒருவர் வளர்ச்சி அடையும்போது மூளைக்குச் செல்லும். கிரிக்கெட் போட்டிகளில் எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரமாக செயல்பட விரும்புவேன். இதன் காரணமாக பல இரவுகளில் தூக்கத்தை தொலைத்து இருக்கிறேன். ஆனாலும் இந்த நெருக்கடி என்னுள் இருக்கும் திறமையைவெளிப்படுத்த உதவியாக அமைந்தது. எனது கவனம் எப்போதும் கிரிக்கெட் தொடர்பான விசயங்களில் மட்டும் இருக்கும்
இவ்வாறு சச்சின் கூறினார். என்னது சப்புன்னுருக்கா? கொஞ்சம் காரமா மிளகாவ கடிச்சிக்கிங்க? எப்ப பாரு ஏதாவது விவகாரமாவே அலையாதீங்க! நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்!!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
Comments
Post a Comment