வீருவா! தோனியா? விறுவிறு போட்டி!
எலிமினேட்டர் ஆகுமா
டெல்லி! சென்னையுடன் விறுவிறு போட்டி!
ஐபிஎல் போட்டிகள்
இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அரையிறுதி போன்ற போட்டியில் இன்று டெல்லியை
எதிர்கொள்கிறது சென்னை. இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே சென்னைக்கு
சறுக்கல்தான். வெல்வதும் தோற்பதும் வாடிக்கையாக இருந்தது. ப்ளே ஆப் போட்டிற்கும்
அதிர்ஷ்டத்தால் உள்ளே நுழைந்தது. ஆனால் அந்த போட்டியில் மும்பைக்கு எதிராக
அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் உழைக்கவும் செய்தது சென்னை.
வாழ்வா சாவா போன்ற போட்டிகளில் இதுவரை சென்னை
அணி சிறப்பாக செயல்பட்டுவந்துள்ளது. 2010 பஞ்சாப், 2011ல் பெங்களூரு இந்த ஆண்டில்
மும்பை என முக்கியமான அணிகளை முக்கிய போட்டிகளில் வீழ்த்தி தன் திறமையை நிருபித்து
காட்டியுள்ளது. இந்த வருடம் சென்னையில் ஐபிஎல் பைனல் நடக்க இருப்பதால் தங்கள் அணி
பைனலில் இருக்க வேண்டும் என்ற நினைப்பு சென்னை ரசிகர்களுக்கு உள்ளது. அதுபோல ஒட்டுமொத்த ரசிகர்களும் சென்னை அணிக்கு
பக்கபலமாக உள்ளனர். கொல்கத்தா தாதா கங்குலி மட்டுமே இந்த முறை கொல்கத்தா அணி
சாம்பியன் ஆகும் என்று கணித்துள்ளார்.
இந்த நிலையில் பைனலுக்கு செல்வது யார் என்ற
முக்கிய போட்டியில் டில்லி அணியை எதிர்கொள்கிறது சென்னை. சேப்பாக்கம் ஆடுகளத்தில்
பல போட்டிகளை வென்ற சென்னை அணி இப்போதெல்லாம் தடுமாறி வருவது தான் சற்று கலக்கமாக
உள்ளது. அதுபோல ஆடுகளமும் மந்தமாக உள்ளது. பொதுவாக டி 20 போட்டிகளுக்கான ஆடுகளம்
பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைப்பது போல தயாரிக்கப்படும். அப்போதுதான் பேட்ஸ்மேன்கள்
அடித்து விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். பெங்களூரு
ஆடுகளம் அது மாதிரி அமைந்தது. எனவேதான் கிறிஸ் கெய்ல் இரண்டு சதம் உட்பட 600
ரன்களுக்கு மேல் குவிக்க முடிந்தது.
சென்னை ஆடுகளம் அதுமாதிரி அமையவில்லை என்பது
நமக்கு பாதகமே! அதுபோல பேட்டிங்கில் நாம் பலமாக இருந்தாலும் பவுலிங்கில் மிகவும்
பலவீனமாகவே உள்ளோம். டில்லி அணியில் வேகப்பந்து வீச்சில் கலக்க உமேஷ் யாதவும்
வருண் ஆரோணும் உள்ளனர். ஆல்ரவுண்டர் இர்பான் பதானும் பவுலிங்கில் கலக்குவார்.
ஆனால் சென்னையின் வேகப்பந்து சொதப்பலாக உள்ளது. ஹில்பெனான்ஸ் பெரிதாக
சாதிக்கவில்லை. ஆல்பி மோர்கல் ரன்களை கட்டுப்படுத்திவருகிறார். ஆனால் விக்கெட்
வீழ்த்த தடுமாறுகிறார். சுழல் பந்திலும் அஸ்வின் ஜொலிக்க வில்லை. ஜகாதி நேற்றைய
போட்டியில் சிறப்பாக வீசினார்.பத்து கோடி ஜடேஜாவை பதினோரு பேர் அணியில்
சேர்க்கத்தான் வேண்டுமா என்று தோனி யோசிக்க வேண்டும்.
சென்ற போட்டியில் ஹசி சிறப்பாக விளையாடினார்.
இவர் இதை இன்றும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். விஜய் தொடர்ந்து ஏமாற்றுகிறார்.
இவருக்குப் பதில் அனிருத்தாவை களமிறக்கலாம். ரவீந்திர ஜடேஜாவையும் நீக்கி குலசேகரா
அல்லது சகாவிற்கு வாய்ப்பு அளிக்கலாம். ஆனால் தோனி அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்.
வெற்றி பெற்ற அணியையை தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!
டெல்லி அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் சேவக்
மற்றும் வார்னரையே நம்பி உள்ளது. இவர்களில் யாராவது ஒருவர் ஆடிய போட்டிகளில் வென்ற
அணி மற்ற சமயங்களில் தோற்று இருக்கிறது. ரோஸ் டெய்லர் இப்போது பார்முக்கு திரும்பி
இருக்கிறார். நமன் ஓஜாவின் அதிரடி இப்போதெல்லாம் எடுபட வில்லை.வேணுகோபால் ராவும்
சிறப்பாக ஆடுவது இல்லை. இருந்த போதிலும் இதுவரை நடந்த 5 தொடர்களில் முதல் முறையாக
ப்ளே ஆப் சுற்றில் நுழைந்துள்ளது டெல்லி அணி.எனவே கோப்பை கைப்பற்ற கடுமையாக
போராடும். டெல்லியை பொறுத்தவரை சேவக் வார்னர், உமேஷ்யாதவ் வருண் ஆரோன் கையில் தான்
வெற்றி இருக்கிறது. இவர்கள் சொதப்பினால் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்!
சென்ற போட்டியில் பிராவோ போலார்டுக்கு சைகை
காட்டியவிவரம் மீடியாக்களில் பெரிதாக அடிபடுகிறது. சிலநாட்கள் முன்பாக போலார்டு
பிராவொவிற்கு மூட்டை முடிச்சுகளுடன்
தாயகம் கிளம்ப ரெடியாக இருக்குமாறு ஒரு
குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாராம். அதற்கு பதிலடி கொடுக்கும்படியாகத்தான் அவரது
விக்கெட் வீழ்த்தியதும் அடுத்த பிளேனில் தாயகம் புறப்படும்படி ஜாலியாக கூறினாராம்
பிராவோ!
எப்படியோ இன்று டெல்லியையும் தாயகம் புறப்பட
வைத்தால் சென்னை ரசிகர்கள் மனம் குளிர்வர்! குளிர வைப்பார்களா? பொறுத்திருப்போம்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்தலாமே!
Comments
Post a Comment