புகைப்பிடிக்காதே! அம்பரீஷூக்கு ரஜினி அட்வைஸ்!
புகை பிடிக்காதே! அம்பரீஷூக்கு ரஜினி அட்வைஸ்!
கன்னட நடிகர் அம்பரீஷீன் 60வது பிறந்த நாள் விழா பெங்களூரில் நடந்தது. விழாவில் தமிழ் தெலுங்கு இந்தி, கன்னடம் என ஏராளமான நடிக நடிகையர்கள் கலந்து கொண்டு அம்பரீஷின் 40 ஆண்டுகால சினிமா சாதனைகளை பட்டியலிட்டு பேசினர். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு அம்பரீஷிடம் புகைப் பிடிப்பதை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார்! விழாவில் ரஜினி பேசியது அம்பரீஷ் திறமையான நடிகர். அவரிடம் கிருஷ்ணர், பீமன், சகுனி, துரியோதனன்
அம்சங்களைப் பார்க்கிறேன். சமையலில் பீமனுக்கு நிகர் அவர். பிரியாணி
சாப்பிடுவதற்காக அவரது வீட்டுக்கு போவேன். கர்ணனைப் போன்ற கொடையாளி.
துரியோதனனைப் போல அனைத்து நல்லது கெட்டதுகளையும் அறிந்தவர் அவர். துரியோதனனைப் போலவே, கெட்ட விஷயம் தெரிந்த பிறகும் விடாமல் இருக்கிறார்.
புகை பிடிப்பதனால் வரும் பாதிப்புகள் அம்பரீசுக்கு தெரியும். ஆனாலும் அதை அவர் விடவில்லை. புகைப் பழக்கத்தால்தான் என் உடல்நிலை இந்த அளவு பாதிக்கப்பட்டது. அதனால் நான் அடியோடு அதை விட்டுவிட்டேன். அம்பரீஷ், நீயும் இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடு," என்றார்.

லண்டன் சென்ற அஜித் குடும்பம்!
அஜித் குமாரின் குடும்பத்தினர் அஜித்தை விட்டுவிட்டு கோடை விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ளனர். படப்பிடிப்புக்களில் பிஸியாக இருப்பதால் அஜித் லண்டன் செல்லவில்லை! விஷ்ணு வர்த்தன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிப்பதால் அவர் மும்பை சென்றுவிட்டார்.இதையடுத்து அஜீத்தின் மனைவி
ஷாலினி, செல்ல மகள் அனோஷ்கா, மாமனார், மைத்துனி ஷாமிலி ஆகியோர் மட்டும்
லண்டன் பறந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் ஜாலியாக லண்டனை சுற்றிப் பார்க்க
தல மட்டும் இங்கு தனியாக உள்ளார்.
படப்பிடிப்புகள் இருப்பதால் குடும்பத்தார் வீட்டில் இல்லாதது ஒரு வேளை வித்தியாசமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் தனது மகளை மிஸ் பண்ணுவார்.
படப்பிடிப்புகள் இருப்பதால் குடும்பத்தார் வீட்டில் இல்லாதது ஒரு வேளை வித்தியாசமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் தனது மகளை மிஸ் பண்ணுவார்.
தனுஷ் நடிக்கும் சொட்ட வாளக்குட்டி!
வாகைசூடவா இயக்குனர் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். 3 பட சர்ச்சைகளுக்குப்பின் தோல்வியில் இருந்து மீள இந்த படம் உதவும் என்ற நம்பிக்கையில் உள்ளார் தனுஷ்.தற்போது பரத்பாலா இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ், அப்படத்தை முடித்த கையோடு சற்குணம் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு சொட்டவாளக்குட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
நகைச்சுவை இழையோடும் விறுவிறு படமாக சொட்ட வாளக்குட்டியை உருவாக்கிறார் சற்குணம். தமிழரின் வட்டார வழக்கு, பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைக்க உள்ளதாக சற்குணம் கூறியுள்ளார்.
நகைச்சுவை இழையோடும் விறுவிறு படமாக சொட்ட வாளக்குட்டியை உருவாக்கிறார் சற்குணம். தமிழரின் வட்டார வழக்கு, பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைக்க உள்ளதாக சற்குணம் கூறியுள்ளார்.
கமல் பாராட்டிய கள்ளத்துப்பாக்கி பாடகர்!
கமல் ஹாசனும் சரி, ரஜினிகாந்தும் சரி எந்த திறமைசாலிகளையும் பாராட்ட
தயங்குவதில்லை. கமலின் உதவியாளர் ரவிதேவன் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை
எடுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியும். அந்த படத்தில் மிட்நைட் கல்லூரி
நான், என் கில்லாடி ஸ்டூடண்ட் யாரு என்ற குத்துப்பாடல் உள்ளது. அதை
கேட்பவர்கள் ஆஹா யார் இந்த பாடகி இவ்வளவு அருமையாக பாடியிருக்கிறார் என்று
நினைக்கத் தோன்றும். ஆனால் அதைப் பாடியது பாடகியல்ல புதுமுக பாடகர் கரந்தை
பி. ராஜசேகரன்.
தஞ்சையில் சந்தோஷ் இசைக்குழு வைத்துள்ள ராஜசேகரன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ராத்திரி நேரத்து பூஜையில் பாடலை பெண் குரலில் பாடி அசத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்த ரவிதேவன் அவரை தொடர்பு கொண்டு தனது படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்துள்ளார். பெண் குரலில் படத்தில் பாடுவதா என்று தயங்கிய அவரை அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தி பாட வைத்துள்ளனர்.
அவரும் சரி என்று பாடினார். அந்த பாட்டை கேட்ட கமல் ஹாசனுக்கு குரல் பிடித்துப் போகவே ராஜசேகரனை அழைத்து மனதாரப் பாராட்டினாராம். ராஜசகேரனுக்கோ கமல் பாராட்டியவுடன் கையும் ஓடவில்லை, கால் ஓடவில்லை. இன்ப அதிர்ச்சியில் அப்படித் தான் இருக்கும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை எதிர்பார்க்கிறோம்!
Comments
Post a Comment