'நித்தி'கொடுத்த கலக்கல் பிரசாதம்!கலக்கல் கதம்பம்!
'நித்தி'கொடுத்த கலக்கல் பிரசாதம்!கலக்கல் கதம்பம்!
டெல்லியை ஒரு கலக்கு கலக்கி வருகிறார் அம்மா!
பயங்கரவாத தடுப்புமையம் அமைப்பதற்கான முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்
மத்திய அரசை ஒரு சாடு சாடியுள்ளார். போன முறை போல அல்லாமல் இம்முறை முன் வரிசையில்
இடம் ஒதுக்கப்பட்டதாம் அம்மாவிற்கு! ஆனாலும் பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை அழுத்தம்
திருத்தமாக கூறிய ஜெயலலிதா இது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாக உள்ளது என்றார்
அத்துடன் ராணுவ உளவுப்பிரிவு, மாநில உளவுப்பிரிவு, ‘ரா’ உளவுப்பிரிவு போன்ற
உளவுப்பிரிவுகளை ஒதுக்கிவிட்டு மத்திய அரசின் உளவுப்பிரிவை முன்னிலைப்படுத்துவது
தவறு என்றும்,மும்பை தாக்குதல் கார்கில் போருக்கு பின்னரே மத்திய அரசு பயங்கரவாத
செயல்கள் கொடுமையானது என்று புரிந்து கொண்டது. இந்த இரண்டு செயல்களும் மத்திய அரசின் உளவுப்பிரிவு எவ்வளவு
பலவீனமானது என்று நாடு புரிந்துகொண்டது. அத்தகைய உளவுபிரிவை மையப்படுத்தி இந்த
பயங்கரவாத தடுப்புமையம் ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றார் முதலில் மத்திய அரசு
தன்னை திருத்திக் கொண்டு மாநில அரசுகளின் மீது பாய வேண்டும் என்றார் அவர்.
எப்படியோ டெல்லி மீடியாக்களை கவர் பண்ணிவிட்டார் ஜே.
கிளுகிளுப்பு சாமி கில்மானந்தா! சாரி நித்யானந்தா
மதுரை ஆதினமாக பதவியேற்றதும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட போனாராம்!
அங்க இருந்த ஊழியர்கள் எல்லாம் சாமி ஆசாமியான்னு புரிஞ்சுக்காம பிரசாதம் தருவார்னு
கையை நீட்டினாங்களாம்! அவங்களுக்கு
அதிர்ச்சி காத்திருந்ததாம்! சாமிகள் புத்தம் புது ஆயிரம் ரூபா தாளை எல்லோருக்கும்
பிரசாதமா தந்தாராம்! ஊழியர்கள் பக்தி பரவசத்துல திளைச்சிட்டாங்களாம்!
பத்திரிக்கையாளர்களும் செய்தி அறிந்து தங்களுக்கும் பிரசாதம் கிடைக்குமுன்னு
மொய்ச்சிட்டாங்களாம்! சாமி பக்தர்களோட நாடியை சரியா புரிஞ்சு
வைச்சிக்கிட்டிருக்கார் போல!
நம்மளுக்கு உடம்புக்கு ஓன்னுன்னா ஹாஸ்பிடல் போறோம்!
டாக்டர்கள் மருந்து எழுதி தர்றதை வாங்கி சாப்பிடறோம்! அந்த மருந்து சீட்டுல என்ன
எழுதி இருக்குதுங்கறது அந்த டாக்டருக்கும் மெடிக்கல் ஸ்டோர்காரருக்கும் மட்டுமே
வெளிச்சம்! அப்படி புரியாம இருக்கும் அந்த கையெழுத்து! பிரிட்டனில் சமிபத்தில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டாக்டர்களால் கொடுக்கப்படும் மருந்து சீட்டில் பிழைகள்
உள்ளதாக கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வாறு ஆறு பேரில் ஒருவருக்கு கொடுக்கப்படும்
சீட்டில் தவறு உள்ளதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் குழந்தைகளும்
முதியவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சில சமயம் மருந்துகளின்
பெயர் தவறாகவும் அல்லது எந்த நேரத்தில் உட்கொள்ளுவது என்பதை தவறாகவும்
எழுதப்படுவதாக தகவல் கூறுகிறது. இவ்வாறு தவறாக எழுதப்பட்ட மருந்து வாங்கிய நான்கு
சதவீதம் பேர் பாதிக்கப்பட்டதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டன் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நம்ம ஊருல பாதிப்பேருக்கு மெடிகல் ஸ்டோர்காரர்தானே டாக்டர்! அதனால பயப்பட
வேண்டாமுன்னு?!! நினைக்கிறேன்!.
இன்னமும் கங்குலி ‘தாதா’தான்!
ஐபிஎல்
தொடரில் புனே வாரியர்ஸ் கேப்டனாக கங்குலி உள்ளார். ரிடையர் ஆனபிற்கு
கொல்கத்தாநைட்ரைடர்ஸுக்காக பெரிய அளவில் சோபிக்காத கங்குலி இப்போது புனே அணிக்காக
விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்படும்
நபராக கங்குலி உள்ளாராம். ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் இரண்டாவது இடத்திலும்
சென்னையின் தோனி மூன்றாவது இடத்திலும் உள்ளனராம். வீரர்கள் தொடரில்
வெளிப்படுத்தும் திறமை அடிப்படையில் இது மாறும் என்று நினைத்தோம் ஆனால் கங்குலி
இன்னும் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தோனி சேவக், டிராவிட் கம்பீர்
இவர்களுடன் ஒப்பிடுகையில் கொல்கத்தாவில் மிகவும் பிரபலமான நபராக இன்னும் கங்குலி
இருக்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. அப்ப ‘தாதா’ இன்னும் ரிடையர்
ஆகலைன்னு தோணுது இல்லே?
ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கினாலும் துவங்கிச்சு
இந்த ஜாதி சங்களுக்கெல்லாம் வேலை வந்துடுச்சு! பரபரப்பா மீட்டிங்க போட்டு தங்க
இனத்தை சேர்ந்தவர்களை கூப்பிட்டு கணக்கெடுப்புல இப்படி சொல்லுங்க அப்படி
சொல்லுங்கன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா இந்த கணக்கெடுப்பால எந்த
பிரயோசனமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். எல்லா தகவல்களையும் ஒழுங்கா யாரும்
தர்றது இல்லேன்னு நியுஸ் கிளம்பி இருக்கு! பலபேரு இதை வேண்டாத வேலையாத்தான்
நினைக்கிறாங்க! இதுல ஒரு மறைமுக உத்தரவு என்னனா தகவல்களை வெரிபிகேஷன்
பண்ணக்கூடாதாம்! நாம என்ன சொல்றோமோ அதான் பதிஞ்சிப்பாங்க! இது சரிப்பட்டு
வருமுன்னு தோணலை!
மூன்றடுக்கு
பாதுகாப்பு அது இதுன்னு எப்பவும் போலிஸ் கண்காணிப்பில் இருக்கும் ஹைக்கோர்ட்டில்
இளைஞர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்த விசயம் இப்ப சென்னையில அதிர்ச்சியை ஏற்படுத்தி
இருக்கு! அவர் வட மாநில இளைஞர்னுமுதல்கட்ட விசாரணையில் தெரிஞ்சி இருக்கு. ஆனாலும்
இது ஹைகோர்டின் பாதுகாப்பை குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கு 300க்கும்
மேற்பட்ட போலிசார்கள் பணியில் உள்ள ஹைகோர்ட் வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு
கரும்புள்ளியா அமைஞ்சிடுத்து!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பகிரலாமே!
நல்ல தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்.
ReplyDelete