சூதாட்ட சர்ச்சையில் ஐபிஎல்! இறுதி போட்டி எழுப்பும் கேள்விகள்!

சூதாட்ட சர்ச்சையில் ஐபிஎல்!
பரபரப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் திருவிழாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பை தட்டி சென்றது. ஆனாலும் இறுதி போட்டியில் சென்னை தோற்றவிதமும் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய விதமும் பலரது புருங்களை உயர்த்தியுள்ளது. நிறைய கேள்விகள் அதற்கு சரியான பதில்கள் இல்லை என்ற நிலையில் ஐபிஎல் ஒரு சூதாட்டம் என்ற நினைப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடர்.
    வீட்டில் சோத்துக்கு வழி இல்லை என்றாலும் டீவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருப்பானே தவிர உருப்படியாக வேலைக்கு போகமாட்டார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இப்படி பட்ட கிரிக்கெட் ரசிகர்களை அவமானப்படுத்தும் அளவுக்கு இப்போது கிரிக்கெட்டில் பணம் புழங்கத்தொடங்க விட்டது. அதிலும் உலகத்திலேயே மிக பணக்கார கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ வளர்ந்து தன் ஆதிக்கத்தினை கோலொச்சி வருகிறது. அதனுடைய கண்டுபிடிப்புதான் இந்த டி20 ஐபிஎல். ரசிகர்களிடையே டி20க்கு இருக்கும் வரவேற்பை மனதில் கொண்டு இந்த ஐபிஎல் போட்டிகளை உருவாக்கி லலித் மோடியை தலைவராக்கியது. இறுதியில் அவரே போட்டிகளில் ஊழல் செய்ததாக கூறி கழட்டிவிடப்பட்டார்.
     இந்த தொடரில் இந்த சூதாட்ட புகார் வீரர்கள் மீது குவிந்துள்ளது. குறிப்பாக ஒரு சில வெளிநாட்டு வீரர்களும் உள்நாட்டு வீரர்களும் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் உலாவுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாணோம் பிசிசிஐ. அதே சமயம் போட்டியில் நோபால் வீசியதற்காக வும் முன்கூட்டியே தகவல்களை கூறீயதாகவும் புனே, பஞ்சாப் அணி வீரர்கள் சிலரை டிஸ்மிஸ் செய்தது.
    அப்போதே ஐபிஎல் மீதான நம்பிக்கை குறைந்து போனது. முதல் ஐபிஎல் தொடரிலேயே நிறைய சந்தேகங்கள் எழுந்தன. இறுதி போட்டியில் இப்போது தோற்ற மாதிரி அப்போதும் தோற்றது சென்னை அணி. அன்றும் அதனுடைய பவுலிங் மோசமாக அமைந்தது. அதற்கடுத்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத டெக்கான் அணி கோப்பை வென்றது. மூன்றாவது நாலாவது தொடரில் சென்னை அணி வென்றது. இதிலும் மூன்றாவது தொடரில் சென்னை கஷ்டப்பட்டுதான் உள்ளே நுழைந்தது.
      இறுதியாக இந்த ஐந்தாவது தொடரில் அணிகளின் செயல் பாட்டில் சில அதிர்ச்சியாக உள்ளன. இவ்வாறு செய்தது ஏன்? ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன. அந்த கேள்விகளை இப்போது பார்ப்போம்.

முதலில் சென்னை அணி உள்ளே நுழைந்தது எப்படி?
   16 போட்டிகள் முடிவில்17 புள்ளிகளுடன் இருந்த சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டதாக கூறலாம். ஆனால் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகள் வரிசையாக தோற்றதால் இந்த அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பெங்களூரு டெக்கானுக்கு எதிராக தோற்றதில் ஏகப்பட்ட சந்தேகங்கள். கிறிஸ் கெய்ல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் அன்று குறைந்த இலக்கை சேஸ் செய்கையில் விரைவாக ஆட்டமிழந்து விட்டார். அணியில் கோஹ்லி போன்றோர் இருந்தும் வென்றால் ப்ளே ஆப் வாய்ப்பு நிச்சயம் என்ற நிலையில் 136 ரன்களை சேஸ் செய்யாமல் தோற்றது ஏன்? என்பது முதல் கேள்வி?

அடுத்ததாக எழும் ஏன் கேள்வி? சென்னை அணி மும்பைக்கு எதிராக வென்றதுமே ஐபிஎல் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டதாக செய்தி வெளியாகியது இது எப்படி ? டெல்லியுடன் விளையாடாத நிலையில் இந்த அறிவிப்பு ஏன்?

  அடுத்த கேள்வி டெல்லி அணிக்கு. பங்கேற்ற போட்டிகளில் 25 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய மோர்னே மோர்கலை சென்னைக்கு எதிராக அணியில் சேர்க்காமல் புதிய பவுலர் ஒருவரை சேர்த்தது ஏன்? சேவக் துவக்க ஆட்டக்காரராக இறங்காமல் மூன்றாவது வீரராக களமிறங்கியது ஏன்? நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்றதும் பவுலிங் செய்ய முடிவெடுத்தது ஏன்?

இது சென்னை அணிக்கு முக்கியமான பைனல் போட்டிக்கு அதிர்ஷ்டத்தால் தகுதி பெற்ற நிலையில் பிஸ்லாவை சாதாரணமாக நினைத்து மோசமாக பந்துகளை வீசியது ஏன்? 10 கோடி கொடுத்து வாங்கிய ஜடேஜாவை பேட்டிங் மற்றும் பந்து வீச அழைக்காதது ஏன்?
  முக்கியமாக பத்தொன்பதாவது ஓவரில் ஹில்பெனான்ஸ் ஏற்கனவே ஒரு பவுன்சர் போட்ட நிலையில் தேவையில்லாமல் இரண்டாவதாக பவுன்சர் போட்டு நோபால் வாங்கியது ஏன்?
    களம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையில் இன்னும் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவிக்க முனையாதது ஏன்?
இப்படி பல ஏன்கள்?
   நடந்து முடிந்த சுற்று போட்டிகளில் எல்லாம் சென்னை அணி தோற்ற போதெல்லாம் இப்படி பல ஏன்கள் எழுந்துள்ளது. ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியான சென்னையின் அதிர்ச்சி தோல்வி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
   இதன் பின்னணியில் சூதாட்டம் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது! இறுதிப்போட்டியில் சென்னையின் ரசிகர்கள்! பெட்டிங் பெட்டிங் என்று கோஷம் எழுப்பியதையும் காண முடிந்தது. இது உண்மை எனில் உழைப்பிற்கு உலை வைக்கும் இந்த ஐபிஎல் மட்டுமல்ல மற்ற கிரிக்கெட்டையும் தடை செய்ய வேண்டும்.
   சாதாரண ரசிகன் தனது ஒருநாள் சம்பாதியத்தை இழந்து இந்த போட்டிகளை பார்க்க யாரோ சம்பாதிக்க இவர்கள் சூதாட்டம் ஆடுவது நியாயம் ஆகாது. இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2