ஸ்காட்லாந்து ஜோக்ஸ்!

நம்மூரீல் சர்தார்ஜிகளை கிண்டலடித்து ஜோக் அடிப்பது பிரபலமானது அதே போல ஸ்காட்லாந்து காரர்கள் கஞ்சத்தனம் மிக்கவர்களாம்! அவர்களை கிண்டல் செய்து ஏராளமான ஜோக்குகள் உள்ளனவாம். பழைய புத்தகங்களை பொழுது போகாமல் புரட்டிய போது இந்த ஜோக்குகள் அகப்பட்டன. உங்களுக்கு சிரிப்பு வராவிட்டால் நான் பொறுப்பல்ல!

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்!

   வெளியூரில் இருக்கும் மகனுக்கு கடிதம் எழுதினார் தந்தை. மகனே நீ ஏன் இப்போதெல்லாம் கடிதங்கள் எழுதுவது இல்லை? தபால் ஆபிஸுக்கோ பேங்குக்கோ போனால் அங்கு வருபவர்களிடம் பேனா இரவல் வாங்கி கடிதம் எழுதலாமே?

தாடியின் காரணம்!

  முப்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு ஓடிப்போன ஒருவர் ஸ்காட்லாந்துக்கு திரும்பி  வந்தார். வறவேற்க ரயில் நிலையத்துக்கு வந்தான் அவரது தம்பி. தம்பியை தழுவி நலம் விசாரித்த அண்ணன் கேட்டார்... இதென்ன தாடியும் மீசையுமாய் இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?
நீங்கள் அமெரிக்காவிற்கு போகும்போது நம் இருவருக்கும் சொந்தமான சேப்டி ரேசரை தூக்கிக் கொண்டு போய்விட்டீர்களே ... என்று பதில் சொன்னான் தம்பி.

 செருப்புத் திருடன்!

செருப்பு திருடியதை நீ ஒப்புக் கொள்கிறாயா? -- நீதிபதி.
 நான் திருடவில்லை ஐயா! இந்த செருப்பை ஸ்காட்லாந்துகாரர் ஒருவர் அன்பளிப்பாக தந்தார்.
திருடியதற்காக ஒரு ரூபாயும் ,கோர்ட்டில் பொய் சொன்னதற்காக ஒரு ரூபாயும் அபராதம் விதிக்கிறேன் என்றார் நீதிபதி.

டிப்ஸ்!
 ஸ்காட்லாந்து ஆசாமிகள் இருவர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். ஓட்டல் சிப்பந்தி ஒருவன் குடை ஒன்றை கொண்டு வந்து கொடுக்கவும் இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்தார் குடையை வாங்கிக் கொண்டவர். என்ன இருந்தாலும் நீ  கொடுத்த டிப்ஸ் அதிகம் தான் என்றார் மற்றவர். நான் வரும்போது குடையே கொண்டு வரலியே இரண்டு ரூபாய்க்கு எவன் இவ்வளவு அருமையான குடை கொடுப்பான்? என்றார் முதலாமவர்!

டிக்கெட் வாபஸ்!

திரையரங்கு ஒன்றில் பால்கனியில் அமர்ந்து குடும்பத்துடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு ஸ்காட்லாந்து காரர். கீழே எட்டிப்பார்த்த அவரது மகன் திடீரென்று அப்படியே தலைக் குப்புற விழுந்துவிட்டான். தியேட்டர் மானேஜரிடம் ஓடினார் தந்தை. பையன் படம் முழுவதையும் பார்க்காததால் டிக்கெட்டை வாபஸ் செய்து பணத்தை வாங்கி நடையை கட்டினாராம்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2