காற்றில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்! வேலூர் அருகே பரபரப்பு!

வேலூர்:  வேலூர் அருகே ரோட்டில் காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே உள்ளது வேலப்பாடி மெயின் ரோடு. இங்கு திடீரென ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்த வண்ணம் இருந்தது. முதலில் 100 ரூபாய் நோட்டுகளும், பின்பு 10 ரூபாய் நோட்டுகளும், அடுத்து 20 ரூபாய் நோட்டுகளும், தொடர்ந்து 50 ரூபாய் நோட்டுகளும் வரிசையாக பறந்து வந்தன. இதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை பறந்து பறந்தே பிடித்தனர்.

சிறியவர் முதல் பெரியவர்கள் என பலரும் முன்டியடித்து காற்றில் வந்த நோட்டுகளை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாங்கள் ஓடி, ஓடி பிடித்த நோட்டுகளை பறிமுதல் செய்ய போலீசார் வந்த தகவல் அறிந்து பலரும் மாயமாய் மறைந்துவிட்டனர்.

இருப்பினும் பொது மக்களிடம் இருந்த சுமார் 8,900 ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த ரூபாய் நோட்டுக்கள் எங்கிருந்து வந்தது, யார் பறக்க விட்டனர் என்ற தகவல் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!