இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

சென்னை: வானில் வழக்கமாக நாம் பார்க்கும் நிலா இன்று மட்டும் 14 விழுக்காடு அளவு பெரிதாகவும் மிகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

நம் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்று வட்டப்பாதையின் தூரம் என்பது 4,06,349 கி.மீ. இந்த தூரமானது இன்று மிகவும் குறைந்து பூமிக்கு அருகில் வருகிறது. அதாவது இன்று மட்டும் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்றுவட்டப்பாதையின் தூரமானது 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும்.

இதனால் நாம் வழக்கமாக பார்க்கும் நிலாவின் அளவு இன்று மட்டும் 14 விழுக்காடு அதிகமாகத் தெரியும். இன்று இரவு 9 மணிக்கு இதனை நாம் பார்க்கலாம். நிலா பெரியதாக தோன்றும்போது வழக்கமான பிரகாசத்தைவிட 30 விழுக்காடு கூடுதல் பிரகாசமாகவும் தெரியும்.

நிலா வழக்கத்தைவிட பெரியதாகத் தோன்றுவதால் கடல் அலைகள் வலுவானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இயற்கைப் பேரழிவுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

தகவல் உதவி: தட்ஸ் தமிழ்

Comments

  1. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6