குடியரசு தலைவராக ஆசைப்படும் திமுக தலைவர்?!!
ஜனாதிபதி பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு
போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார்
போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம்
காத்துவருகிறார். துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, மத்திய
அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என, பலருக்கு இந்த
பதவியில் அமர ஆசை. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல்
விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில
எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து,
"தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர். பிரபல
எதிர்க்கட்சித் தலைவரை அந்த தி.மு.க., குழு சந்தித்து விஷயத்தைச்
சொன்னதுமே, அவர் ஆடிப்போனாராம். உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த
பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் அந்த தலைவர்.
"ஜனாதிபதி பதவியில் தலைவரை அமர்த்த நாங்கள் ஆசைப்படுகிறோம்' என்று
தி.மு.க., வினர் சொல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர தலைவரை
பார்க்கும் படி சொன்னார் அந்த எதிர்க்கட்சி தலைவர். உடனே, தி.மு.க.,வினர்
அவரைச் சந்தித்தனர். விஷயத்தைக் கேட்ட அவரும் அதிர்ச்சியடைந்தார். சரியான
பதில் சொல்லாமல், பார்க்கலாம் என்று இவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த
மகாராஷ்டிர தலைவர். இப்படி திடீரென இந்த பதவி மேல் தி.மு.க., ஏன்
ஆசைப்படவேண்டும்? ஜனாதிபதி கோதாவில், இந்த அம்மா இறங்கும் போது தலைவர்
சும்மா இருக்கலாமா, அதனால் தான் தலைவருக்கு லாபி செய்கிறோம் என்கின்றனர்
தி.மு.க.,வினர்.
தகவல் உதவி} தினமலர்
டிஸ்கி} தள்ளாத வயதில் ஓய்வெடுக்காமல் எதற்கு இந்த கொலைவெறி! தமிழர் வருவது பொறுக்கவில்லையா? என்று கேட்காமல் கொஞ்சம் யோசிக்கவேண்டும். திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை கெடுத்தது போதும் . அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியிலே காங்கிரஸிக்கே ஆப்பா? கலைஞர் அவர்களே உங்களின் சேவை இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன்! அதிகமா ஆசைப் படாதீங்க!
தகவல் உதவி} தினமலர்
Comments
Post a Comment