'குட்டிகிட்டே' இருக்கும் மேனேஜர்! தூசு தட்டின ஜோக்ஸ்!


தூசு தட்டின ஜோக்ஸ்!

பழைய வார இதழ்களிலிருந்து திரட்ட பட்ட ஜோக்ஸ்.

என் ஹஸ்பெண்டுக்கு கோவம் வந்தா பின்னு பின்னுன்னு பின்னிருவார்!
அதானே பார்த்தேன் நீ எப்படி டெய்லி ஆபிஸுக்கு ரெட்டை ஜடை பின்னிகிட்டு வர்றேன்னு இப்பத்தான் புரியுது!
                          மா.அமிர்த லிங்கம்
என் பாட்டிக்கு திமிர் ரொம்ப அதிகமா போச்சு!
எப்படி சொல்றே?
அறுபதாம் கல்யாணத்துக்கு பக்கத்து வீட்டு தாத்தாவைத்தான் பண்ணிப்பாளாம்!
                      ‘நடேஷ்ஷா’
தயிர் ஏன் வெள்ளையா இருக்குன்னு உனக்குத் தெரியுமா?
 அதை தோய்ப்பதால்!
                       எஸ்.உதயகுமார்.
என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே மாசத்துல என் கணவர் ஸ்கூட்டர் வாங்கிட்டாரு!
நீ ராசிக்காரிதான்!
 நீ ஒண்ணு! கார் வைச்சிருந்தவர் அதை வித்த பணத்திலே ஸ்கூட்டர் வாங்கியிருக்காரு!
                        எஸ்.வெங்கட்ரமணி
டைப்பிஸ்ட் ராதாவுக்கு தங்கமான மனசு?
 எப்படி சொல்ற?
எல்லோரும் உரசப்பாக்கிறாங்களே!
                    கோ.க.சுரேஷ்.
என்னது தாலிகட்டப்போற  நேரத்துல மாப்பிள்ளை காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்தறார்?
  இப்பத்தான் பொண்ணை நேரில் பார்க்கிறார் போலிருக்கு!
                               பெ.நாபன்.
என்ன தலைவர் நம்ம பக்கம் பார்த்து பேசிகிட்டு இருக்காரு!
 கூட்டம் எங்கே இருக்கோ அந்த பக்கமா பார்த்து பேசுறாரு என்ன தப்பு?!
                        பாஸ்கி
ஓட்டபந்தயமெல்லாம் வெச்சு வேலைக்கு ஆள் எடுத்துகிட்டு இருக்காங்களே போலிஸ் வேலைக்கா?
  நீங்க வேற ஃபைனான்ஸ் கம்பெனிக்கு!
                        எஸ்.கிருஷ்ண மூர்த்தி
ஆபரேஷன் தேவையில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு!
  எதனால..?
அவருக்கு வேற இடத்திலிருந்து பணம் கிடைச்சிடுச்சாம்!

எங்க ஆபிஸ் மேனெஜர் எப்பவும் குட்டிகிட்டேதான் இருப்பார்!
 தப்பு பண்ணா குட்டுவாரா?
அதில்லைடா புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கிற அந்த டைப்பிஸ்ட் குட்டிகிட்டேயே இருக்கார்டா!
                              நிலா.
என்ன ஆச்சர்யம் ஆபீஸ்ல ஸ்டாப் எல்லாம் தூங்காம சுறுசுறுப்பா இருக்காங்க?
  இன்னிக்கு ஸ்டிரைக் பண்றாங்கய்யா?
                         எம் பூங்கோதை

என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா இன்ஸ்பெக்டர் சார்!
  அப்படியா வயசு என்ன இருக்கும்?
ஓடிப்போனப்பவா? இப்பவா?
                    நெற்குப்பை கி.மனோகரன்.
ஷேவிங் கத்தி மூலம் எய்ட்ஸ் பரவ வாய்ப்பு இருக்குன்னு சொன்னது தப்பா போச்சு?
ஏன்?
கத்தியிலே நிரோத்தை மாட்டி வச்சிருக்கான்!
                     எம் ராஜ்குமார்.

புரையேறினதால தலையில பெரிய காயம் ஏற்பட்டுடுச்சா, எப்படி?
 என் மனைவி கொஞ்சம் ஓங்கித்  தட்டிட்டா!
                          ஹரிஹரன் பரமக்குடி

அன்பே! நாம தற்கொலை பண்ணிக்கிறதை தவிர வேற வழியில்லைன்னு சொல்றீங்களே ஏன்?
நம்ம காதல் கல்யாணத்துல முடிஞ்சிடுமோன்னு பயமாயிருக்கு!
                              கண்ணபிரான்.
நன்றி குமுதம், ஆனந்தவிகடன்.


தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2