ஷாருக்குடன் மம்தா குத்தாட்டம்! ஐபிஎல் அரசியல்!

ஷாருக்குடன் மம்தா குத்தாட்டம்! ரசிகர்கள் ரகளை! திண்டாட்டத்தில் முடிந்த கொண்டாட்டம்!

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு பாராட்டு விழா நடத்திய மேற்கு வங்க அரசு இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. விழாவில் அரசியல் புகுந்து விளையாடியது. ரசிகர்கள் மீது தடியடி நடத்தியதில் பெரும் களேபரம் நடந்தது. தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவே மம்தா இவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ள எதிர்கட்சிகள் அவர் ஷாருக்கானுடன் மேடையில் நடனம் ஆடியதையும் உடன் கவர்னரும் ஆடியதையும் கடுமையாக விமரிசத்து உள்ளன.
    ஐபிஎல் போட்டிகள் முடிந்தும் பரபரப்புக்கு பஞ்சமில்லை! ஆடை அவிழ்ப்பு ராணிகள் பூனம் பாண்டேவும் ரோஸ்லின் கானும் ஆடைஅவிழ்த்து தங்கள் பங்கிற்கு பரபரப்பு ஏற்படுத்த இதுவரை இல்லாத ஒரு புதிய மரபை கொண்டு வந்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா. ஐபிஎல் என்பது ஒரு தனியார் அமைப்பு. இதன் அணிகளும் தனியாருக்கு சொந்தமானது. நாட்டிற்கோ மாநிலத்திற்கோ சொந்தமானது அல்ல. இந்த அமைப்பு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு விழா என்பது கொஞ்சம் அதிகமானதுதான்.
    மேற்கு வங்க மாநிலம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்துவரும் வேளையில் இது போன்ற விழாக்களை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் தனது அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து விழா நடத்தி ஆட்டம் போட்டுள்ளார் மம்தா.
  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் என்பதால் மாநிலம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஈடன் கார்டன் மைதானத்தினுள் நுழைந்தனர். மைதானம் நிரம்பி வழியே வெளியே நிறைய ரசிகர்கள் காத்திருந்தனர். விழாவில் நடனமேடை அமைக்கப்பட்டு பாடல்கள் இசைக்கப்பட ஷாருக்கான் குத்தாட்டம் போட்டார். இது அரசு விழாவா என்ற நிலை ஏற்பட்டது. உற்சாகத்திலோ இல்லை போதையிலோ மம்தாவின் தலையில் முத்தமிட்ட ஷாருக் அவரை நடனமாட அழைத்தார். முதலில் அவர்கள் மறுத்தாலும் ஷாருக் அவர்களை பிடிவாதமாக பிடித்து இழுத்து நடனமாட வைத்தார்.
    ஒரு மாநிலத்தின் முதல்வரும் கவர்னரும் இப்படி பொது மேடையில் நடனம் ஆடலாமா? ஒரு தனியார் அணிக்கு அரசின் பாராட்டு விழா தேவையா? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மம்தா நடனமாடி முடித்து வீரர்களுக்கு தங்க சங்கிலியும் பொன்னாடையும் போர்த்தி கவுரவித்தார்.
      இதனிடையே வெளியே காத்திருந்த ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட போலிஸ் தடியடி நடத்தியது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். பெற்றோரை பிரிந்த குழந்தைகள் கண்ணீர் வடித்தன. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இப்படி ஒரு நிகழ்ச்சி மம்தாவிற்கு தேவையா?
   சமீப காலமாக மம்தாவின் போக்குகள் விசித்திரமாக உள்ளது. அதில் கார்டூனிஸ்ட் ஒருவரை சிறையில் தள்ளியது மிகவும் கண்டணத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இப்போது சரிந்த தனது இமேஜை நிலைநாட்ட இந்த விழா எடுத்துள்ளார் மம்தா.
   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியவர்களில் இருவர்மட்டுமே வங்காளிகள்.மற்றவர்கள் வெளிமாநில வெளிநாட்டு வீரர்கள் கேப்டன் கம்பீரும் டில்லியை சேர்ந்தவர். ஷாருக்கானும் டில்லியை சேர்ந்தவர், இப்படி இருக்க தனியார் அணிக்கு விழா நடத்தி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார் மம்தா.
   இது போன்ற செயல்கள் இவரது அரசியல் இமேஜை தாழ்த்துமே தவிர உயர்த்தாது. இதை புரிந்துகொள்ளாத மம்தா தேவையின்றி சர்ச்சையில் சிக்கிக் கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் இந்த மாதிரிவிழாக்களை மற்ற மாநிலங்களும் எடுக்க தூண்டும் வகையில் மம்தா நடந்து கொண்டது மன்னிக்க முடியாத செயல். நாட்டில் எத்தனையோ பேர் சாதனைகள் படைத்து வெளியே தெரியாமல் இருக்க பணத்திற்காக தன்னை ஏலத்தில் விடும் ஒரு அமைப்பிற்கு விழா எடுத்து படுகுழியில் விழுந்துள்ளார் மம்தா.
    இவரது செயல்கள் கோமாளித்தனமாக அமைந்து வருகையில் விரைவில் மக்கள் மனதில் இருந்து விடைபெற்றுக் கொள்வார் மம்தா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்தகருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2