தளிர் அண்ணா கவிதைகள் 4


வெற்றி உன் பக்கம்!

நாட்கள் தேயத் தேய
நாமும் தேய்கிறோம் நண்பா!
நாளை நாளை என
வேலையை தள்ளிப் போடாதே!
வேளை வரும் என்று
மூலையில் கிடாதே!
மூளையை உபயோகி!
உதறி எறி உன் தயக்கங்களை!
உற்சாகமாக புறப்படு!
உன் வாழ்க்கை சிறக்க
உறுதியாய் திட்டமிடு!
இறுதி வரை போராடு!
சலித்து போகாமல்
சல்லடை போடு! உன் வாய்ப்பு
உன் காலடியில் விழும்!
வீணாக்காமல் விரைந்து பற்றிடு!
வெற்றி உன் பக்கம்
விரைந்து வந்திடும்!

நம்பு இளைஞா!

நம்மால் முடியும்
என்று நம்பு
நண்பா!

முடியாதது எதுவும்
இல்லை என்ற
முனைப்பு உன்னிடம் இருந்தால்
மலையும் கடுகாகும்!

கடலின் அலைகளை
எதிர்த்து கப்பல்
நீந்த வில்லையா?

காற்றை கிழித்து
விமானங்கள்
பறக்கவில்லையா?

பூமியைத்
துளைத்து நீர்
ஊற்றெடுக்கவில்லையா?

முட்டையை உடைத்து
பறவைகள்
பிறக்கவில்லையா?

நிலவை மறைக்க
மேகம்
முயல்வதில்லையா?

எதிர் நீச்சல் போட
பழகு! என்னாலும்
முடியும் என நினை!
எந்நாளும் உன்
பொன்னாள் ஆகும்நாள்
தூரத்தில் இல்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2