சுப்ரமணியம் சாமியுடன் ஓர் சந்திப்பு!

வணக்கம் பதிவுலக அன்பர்களே! என்னடா இன்னிக்கு இதுவரைக்கும் தளிர் எதும் பிளாக்க வில்லையே? எங்க போயி ஒழிஞ்சானோ என்று வருத்தபட்டு கொண்டிருப்பவர்களுக்கும் சனியன் விட்டுது இன்னிக்கு தப்பிச்சோம் என்று மகிழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும் சொல்லிக்கொல்கிறேன்! விடாது கருப்பு! என்பது போல விடமாட்டான் இந்த தளிர் அண்ணா சுரேஷ்!
     இன்னிக்கு எங்க குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டியதா போச்சு! எல்லாம் வேண்டுதல்தான்! வருஷம் ஒருமுறை அபிஷேக அலங்காரங்கள் செய்து வழிபட்டுவருவோம் குடும்பத்துடன்! குடும்பத்துடன் என்றால் எங்கள் குடும்பம் மட்டுமல்ல! சித்தப்பா அத்தைகள் தங்கைகள் தம்பிகள் என்று ஒரு பட்டாளமே சேரும்! பல வருடங்களாக இந்தபழக்கம் இருந்து இடையில் சில காரணங்களால் நின்று போன  இந்த பழக்கத்தை சென்ற வருடம் மீண்டும் துவக்கினோம்! உறவினர்கள் ஒத்துழைப்போடு ஆண்டவன் கைங்கர்யம் சிறப்புற நடந்தேறியது.
    சென்ற வருடம் போல இந்த வருடமும் அனைவரும் கலந்து கொள்ள சிறப்பான முறையில் வழிபாடு நடந்தேறியது. பொன்னேரி அருகில் உள்ள ஆண்டார்குப்பம் பாலசுப்ரமண்யசுவாமிதான் எங்கள் குலதெய்வம்! அவருக்கு எங்களுடைய தாத்தா இருக்கும் போது வருடம் ஒருமுறை தூய சந்தனத்தில் சந்தன காப்பு அலங்கார அபிஷேகம் செய்விப்பது வழக்கமாம். நாளடைவில் தூய சந்தனம் கிடைக்காமல் இந்த டப்பிகளில் அடைத்து விற்கப்படும் சந்தனம் கிடைக்க இந்த அபிஷேகம் தடை பட்டு போனது.
    சென்னை பூம்புகார் அங்காடியில் தூய சந்தன கட்டை கிடைப்பதாக அறிந்து விசாரித்ததில் 100கிராம் கட்டை இருபதாயிரம் தான் ஜெண்டில்மேன் என்றார்கள்! எங்களுக்கொ ஒருகிலோ தேவைப்பட்டது. என்ன செய்வது கும்பகோணம் பக்கத்தில் கிடைப்பதாக உறவினர் ஒருவர் தகவல் மூலம் அறிந்துசென்ற வருடம்  வாங்கி வந்தோம். ஆறாயிரம் ரூபாய்க்கு ஒருகிலோ தூய சந்தனக் கட்டை கிடைத்தது. அதை அங்குள்ள அரவை இயந்திரத்தில் அரைத்து எடை போட்டபோது இரண்டரை கிலோ சந்தனம் கிடைத்தது. அதைக் கொண்டு சென்ற ஆண்டு நிறைவேற்றினோம்.
    சென்ற ஆண்டு வாங்கிய இடத்தில் இந்த ஆண்டு கிடைக்க வில்லை! வெறோரு இடத்தில் இன்னும் சற்று விலை கூடுதலாக வாங்கி வந்திருந்தார் எங்கள் சித்தப்பா! இன்று காலை உச்சி கால அபிஷேக வேளை 11மணிக்கு ஸ்ரீ பால சுப்ரமண்யருக்கு அபிஷேக அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பான தரிசனம். அங்குள்ள என் அத்தை வீட்டில் மதிய உணவு சொந்தங்களுடன் உரையாடல் என பொழுது கழிந்ததால் வழக்கம் போல பதிவிட இயல வில்லை!
   இப்பொழுதுதான் நேரம் கிடைத்து பதிவிட வந்தேன்! அருண கிரி நாதரால் பாடப்பெற்ற தலமான ஆண்டார்குப்பம் அழகு முருகனை நீங்களும் தரிசிக்கலாமே!  என்னடா சுப்ரமணியம் சாமியுடன் சந்திப்பு என்று தலைப்பு கொடுத்துட்டு ஒண்ணுமே காணோமே என்று குழம்பாதீங்க! எங்க குலதெய்வம் முருகரோட பெயர்தான் சுப்ரமண்யம் சுவாமி! ஐயோ ப்ளீஸ் அடிக்க வராதீங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கமெண்ட்லாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2