"ஓ" போடவைத்த கோவா! பெட்ரோல் ரூ 60 தான்!
பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது! குறையுங்கள்! குறையுங்கள் என்று எதிர்கட்சிகள் அனைத்தும் போராட்டம்! ஆர்பாட்டம் என அறிவிப்புக்களை வெளியிட்டு கொண்டிருக்க சத்தம் போடாமல் ஒரு சாதனை படைத்திருக்கிறது கோவா அரசாங்கம்! உண்மையிலேயே மக்கள் மேல் அக்கறை உள்ள ஒரு அரசு செய்யவேண்டியது இது தான் என்று எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது கோவா அரசு.
நாடெங்கும் பெட்ரோல் விலை ரூ 80 ஐ நெருங்கிய நிலையில் இங்கு மட்டும் ரூ 60க்கு கிடைக்கிறது. சென்னையோடு ஒப்பிடும் போது லிட்டருக்கு ரூ 17 குறைவு டில்லியோடு ஒப்பிடுகையில் லிட்டருக்கு ரூ 12 குறைவு. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? சாத்தியப்பட்டு சாதித்திருக்கிறது கோவா அரசாங்கம்!
பெட்ரோல் மீதான வாட் வரியை முற்றிலுமாக நீக்கி விட்டது கோவா அரசு! இதனால்தான் பெட்ரோல் விலை அங்கு குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ 26 வரை வரியாக விதிக்கப்படுகிறது. இதனால் தான் கூடுதல் விலை செலுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. வரி செலுத்தாவிடில் அரசுக்கு இழப்புதான். அந்த இழப்பை ஆடம்பர பொருட்கள் மீது அதிக வரி விதித்து ஈடுகட்டி கொள்கிறது கோவா அரசு.
ஈடு செய்வது எப்படி? பெட்ரோல் வரியை முழுமையாக குறைத்துள்ளதால்
ஏற்படும் வருவாய் இழப்பை சரி அசசெய்வதற்காக, ஆடம்பரங்களுக்கான வரியை, கோவா
மாநில அரசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மதுபானங்களுக்கான வரி, பல மடங்கு
அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவாவுக்குள் கார்கள் நுழைந்தாலே, அவற்றுக்கு நுழைவு வரி
விதிக்கப்படும். பொது அதிகாரப் பத்திரத்துக்கான (பவர் ஆப் அட்டர்னி)
பதிவுக் கட்டணம், தற்போதுள்ள 25 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்களுக்கு, 10 சதவீத ஆடம்பர வரி
விதிக்கப்பட்டுள்ளது. சாலை வரியையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை மழைக்காலக் கூட்டத் தொடருக்கு பின், இந்த வரி உயர்வு அமலுக்கு
வரவுள்ளது.
மத்திய அரசும் மாநிலங்களுக்கு கடும் நெருக்கடி தராமல் கலால் வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை சற்று குறையும். கோவா அரசை மற்ற மாநிலங்களும் பின் பற்றினால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது. எதையும் தடாலடியாக செய்யும் தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொள்வாரா? இல்லை எப்போதும் போல் எந்த கட்டிடத்தை இடிக்கலாம் என்று யோசிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே!
Comments
Post a Comment