புகைப்படம் உங்கள் கைவிரலில் கலக்கும் புது ட்ரெண்ட்!

கலக்குது புது ட்ரெண்ட்  உங்கள் புகைப்படத்தை விரல் நகங்களில் வரைந்து கொள்ள முடியுமா... முடியும் என்று சொன்னதோடு அதை செய்தும் காட்டி அசத்தினார் வளசரவாக்கத்தில் உள்ள கிரீன் டிரண்ட் அழகு கலை நிலையத்தின் உரிமையாளர் சங்கீதா. தனது இந்த புதிய முயற்சி குறித்து கூறுகிறார்.

‘‘நகங்களுக்கு நெயில் பாலிஷ் போடுவது ஒரு காலத்தில் பேஷனாக இருந்தது. பிரவுன், சிவப்பு, பிங்க்ன்னு குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டுமே போட்டு வந்தாங்க. அது நாளடைவில் கருப்பு, அடர் நீலம், கரும்பச்சை, வயலெட்... என மாறியது. அதன் பிறகு விரல் நகங்களில் விரும்பிய டிசைன்களை வரைந்துக் கொள்ள ஆரம்பிச்சாங்க.

கற்கள் பதிக்கப்பட்டு அதன் இடையே பூக்கள், கட்டம் கட்டமா வண்ணங்கள், வாசகங்கள், மிக்கி மவுஸ்... இப்படி. சின்ன நகத்தில் நுணுக்கமாக வரைய கஷ்டப்பட்ட பெண்கள் வண்ணங்கள் பூசப்பட்ட ரெடிமேட் நகங்களை வாங்கி விரல்களில் பொருத்திக் கொண்டனர். இப்போது இதை எல்லாம் குப்பை தொட்டியில் போட்டு விட்டு, போட்டோ நெயில் ஆர்ட் பக்கம் திரும்பியுள்ளனர்‘‘ என்றார் சங்கீதா.

‘‘நெயில் ஆர்ட் சாதாரணமா அக்ரலிக் பெயிண்டால் நகத்தில் வரைவது. ஆனால் போட்டோ ஆர்ட்டில் நாம் எதையும் வரைய வேண்டாம்.  எல்லாவற்றையும் மெஷின் பார்த்துக் கொள்ளும். ஆர்ட் மெஷினில் விரல் நகங்களை உள்ள பகுதியை வைத்து விரும்பிய டிசைனை தேர்வு செய்தா போதும் முப்பதே வினாடியில் விரல் நகத்தில் விரும்பிய டிசைன் பதிந்துவிடும்‘‘ என்று சொன்னவர் இதில் ஒருவரின் போட்டோ, புடவையின் டிசைன் எதை வேண்டும் என்றாலும் பதித்துக் கொள்ள முடியுமாம்.

இதில் 3000த்துக்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. விரும்பியதை தேர்வு செய்துக் கொள்ளலாம். இந்த கருவியில் கேமராவும் உள்ளது. அதற்கு நேரா அமர்ந்து போட்டோ எடுத்தால் அது கருவியில் பதிவாகிவிடும்.. பிறகு அதையும் நகத்தில் டிசைனாக போட்டுக் கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல் உடையில் உள்ள டிசைனை பென்டிரைவ் அல்லது மெமரிகார்டில் கொண்டு வந்தா போதும்.

அதை நெயில் ஆர்ட் கருவி மூலம் நகத்தில் பதிய வைத்துக் கொள்ளலாம். போட்டோ நெயில் ஆர்ட் கொண்டு டிசைன் போடும் போது நகத்தில் வெள்ளை, கோல்டன் அல்லது சில்வர் நிற நெயில் பாலிஷ் முதலில் போடணும். அதன் மேல் விரும்பிய டிசைனை பதிவு செய்யலாம். டிசைனை நகத்தில் போட்ட பிறகு டிரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷ் கொண்டு நகத்தின் மேல் ஒரு கோட்டிங் கொடுத்தால் பதினைந்து நாட்கள் வரை கலையாமல் இருக்கும்.

தகவல் உதவி:  தினகரன்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2