தளிர் ஹைக்கூ கவிதைகள்! 8

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

கட்டிவைத்தார்கள்
மணத்தது!
கூந்தலில் பூ!

அணைத்ததும்
அதிகமானது வெப்பம்!
காதலி!

புள்ளி வைத்ததும்
அழகானது
மான்!

தொலைத்து விட்டு
தேடுகின்றனர்
தூக்கம்!

 
சத்தம் போட்டாலும்
சலிக்கவில்லை!
சில்வண்டுகள்!
 
மஞ்சள் பூசின
மரங்கள்!
கொன்றைபூ!

புதிய வீட்டில்
கண்ணீர் சிந்தினர்!
ஹோமப்புகை!

வெள்ளம் பாய்ந்தது
பாதிப்பில்லை!
ஒளி!

எல்லா ரகசியங்களும்
உறங்குகின்றன!
இருட்டு!

விடை தெரிந்தும்
சொல்ல முடியவில்லை!
குழந்தையின் வினா!

விழிகள் மூடியதும்
விரிந்தது காட்சி!
கனவு!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!