நான் ரசித்த சிரிப்புகள் 11

நான் ரசித்த சிரிப்புகள் 11

1.     டாக்டர் ஆபரேசனுக்கு  உடனடியா ரத்தம் வேணும்னு கேளுங்க! ஏற்பாடு பண்றேன். பேஷண்ட் வேனும்னு கேட்டா நான் எங்க போவேன்?!
                    வி.சாரதி டேச்சு

2.     ரம்யா நாம ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கலாமா?
அடப் பாவி இருந்த ஒத்தபைக்கையும் வித்துட்டியா?
                       காயல் ஹாஜா.

3.     வருமானத்துக்கு அதிகமா ஏன் சொத்து சேர்த்தீங்க?
இதென்ன கேள்வி? வருமானத்துக்குத்தான்!
                      வீ.விஷ்ணுகுமார்

   4.தலைவர் எதுக்கு இப்ப டாக்டர் பட்டம் கேட்கிறார்?
     பால்கட்டண உயர்வு,பஸ்கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வுன்னு ஒரே ஷாக் டிரீட்மெண்டா கொடுத்திருக்காராமே!
                       பெ.பாண்டியன்.

   5.தலைவரே நீங்க இன்னும் மாறவே இல்லைன்னு ஊர்ல பேசிக்கிறாங்க!
   இனி, புதுசா எந்த கட்சி இருக்கு நான் மாற?
                        அதிரை புகாரி

6. தலைவர் பேச ஆரம்பிச்சதும் கூட்டம் கலையறது சகஜம்தானே? புதுசா தலைவர் ஏன் ஃபீல் பண்றார்?
   நடந்தது பொதுக்குழு கூட்டமாச்சே!
                       அ.ரியாஸ்

7.நிலத்தை கிரயம் பண்ற நேரத்துல தலைவர் எங்க போனாரு?
  முன் ஜாமீன் வாங்க!
                    அ.ரியாஸ்

8.அந்த டாக்டரை தலைவர் ஏன் சந்தேகப்படுறார்?
   தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங்க் போனா பத்தாது.. நான் சொல்ற ரூட்லதான் போகனும்னு சொல்றாராம்!
                        சி.சாமிநாதன்.

9.குற்றவாளி கூண்டில் நிற்க உனக்கு வெட்கமா இல்லையா?
  ரொம்ப வெக்கையாத்தான் இருக்கு எசமான்!
                         சிக்ஸ்முகம்.

10 தினமும் கொலை கொள்ளை, வழிப்பறிகள் நடக்குதுன்னு ஜனங்க புலம்பறாங்க தலைவரே!
  நாம ஆட்சியிலே இல்லைன்னா என்ன நடக்கும்னு இப்பவாவது புரிஞ்சா சரி!
                         சிக்ஸ் முகம்.

11 சம்மர் லீவுக்கு ஊட்டி போறீங்களா? கொடைக்கானல் போறீங்களா?
    புதுக்கோட்டை பெரியப்பா வீட்டுக்குப் போறோம் அங்கதான் பவர்கட்டே இல்லையாம்!
     வத்திராயிருப்பு தெ.சு கவுதமன்.

12. ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள பொண்ணு போயி அரைமணி நேரம் கழிச்சி டாக்டர் மாப்பிள்ளை உள்ளேயிருந்து ஏன் பெல் அடிக்கிறாரு?
  பழக்கத் தோஷத்துல அடுத்த ஆளை வரச்சொல்றாருங்க!
                  கொளக்குடி சரவணன்.

13.என் மருமகன் கரெண்ட் மாதிரி!
  எந்த விஷயத்திலே?
கொஞ்ச நேரம் வீட்ல இருக்கமாட்டார்.!
                அண்டனூர் சுரா.

14 நாங்க உங்க வீட்டுக்கு ரெய்டுக்கு வரப்போறோமுன்னு சம்மன் அனுப்பினோமே?
  அதை நான் மனுன்னு நினைச்சி வாங்கி படிக்காம கிழிச்சு போட்டுட்டேன்!
                    வி.சாரதி டேச்சு.

15.திருடன் உங்க வாயைத்தானே கட்டிப்போட்டான்! பக்கத்துல இருந்த உங்க கணவர் ஏன் திருடன் திருடன்னு கத்தலை?
   என் பக்கத்துல இருக்கும் போது அவரு வாயைத் திறக்க மாட்டாரு சார்!
                         வி.சாரதி டேச்சு.

நன்றி: விகடன், குமுதம்.
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்லாமே!




                            

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2