முதல்ல நீ நிறுத்து! ராமதாஸ் vs முருகதாஸ்! கலக்கல் கதம்பம்!

கூடன் குளத்தில் பங்கு கேட்கும் கேரளா!

நாமதான் வந்தாரை வாழவைப்போம்னுட்டு மலையாளிகளை முதலாலிகளாகவும் சினிமாவில் நாயகிகளாகவும் வாழ்வித்து கொண்டிருக்கிறோம். ஆனால் அண்டை மாநிலமான கேரளா நம்மோடு மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. முல்லை பெரியாறு அணைக்காக ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருக்க சத்தம் போடாமல் புதிய பிரச்சனைக்கு வழி வகுத்து உள்ளார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி! கூடன் குளம் மின்சாரத்தில் அவருக்கு பங்கு வேணுமாம்! 500 மெகாவாட் மின்சாரம் கூடன் குளத்திலிருந்து தரவேண்டும் என்று கேட்டு மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளாராம் சாண்டி! அண்டை மாநிலம் வளர்ச்சி பெறக்கூடாது என்று கூடன் குளம் போராட்டத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்த கேரளா இப்போது உற்பத்தி துவங்கும் வேளையில் பங்கு கேட்பது வேடிக்கையாக இல்லை! எப்படியோ இன்னொரு பிரச்சனைக்கு அடிக்கல்லை நாட்டி விட்டார் உம்மண் சாண்டி!

லெனினை விஷம் வைத்து கொன்றாரா ஸ்டாலின்! பரபரப்பு தகவல்!

பரபரப்பாக எதையாவது எழுதி காசு பார்ப்பதில் வெளிநாட்டுக்காரர்கள் வல்லவர்கள்! அப்படித்தான் முன்பு இங்கிலாந்து இளவரசி டயானாவை பற்றி பரபரப்பாக எழுதி காசு பார்த்தார்கள். இப்போது வரலாற்று வல்லுனர் லூரி தன் பங்கிற்கு ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார்! இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை? அவர் தனது ஆராய்ச்சி கட்டுரையில் ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் விளாடிமீர் லெனினை அவரின் தோழர் ஜோசப் ஸ்டாலின் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ரஷ்ய புரட்சியாளர் லெனின் அதிபரான பின் தனக்குப்பின் நாட்டையும் கட்சியையும் வழி நடத்தி செல்ல தகுதியானவர் ஸ்டாலின் என முதலில் கருதினார். ஆனால் ஸ்டாலினின் சர்வாதிகார போக்கினால் அதிருப்தி அடைந்த லெனின் லியோன் ட்ராட்ஸ்கியை கட்சியின் பொதுச்செயலராக அறிவிக்க நினைத்தார். இதை அறிந்து கொண்ட ஸ்டாலின் லெனினை விஷம் வைத்து கொன்றதாக நான் நினைக்கின்றேன் என  தெரிவித்துள்ளார்.
   ஸ்டாலின் தனது எதிரிகளை விஷம் வைத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் இதே பாணியைத்தான் லெனினை கொல்லவும் பயன் படுத்தியிருக்கவேண்டும் ஏனெனில் லெனின் 53வயதில் இறந்த போது அவரது மூளை இறுகிவிட்டதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெனின் தனது இறுதிக்காலத்தில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற கருத்தும் உண்டு. அதன் பிறகு அவருக்கு இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டது. முதல் பக்கவாதத்தால் அவர் எழுதும் திறனை இழந்தார். இரண்டாவது பக்கவாதத்தால் பேசும் திறனை இழந்தார். ஆனால் இறப்பதற்கு முன் வரை நன்றாக பேசிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. நன்றாக பேசிக்கொண்டிருந்த நபர் மறுநாளே இறந்து போனதற்கு அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். அவரது உடல் இன்னும் செஞ்சதுக்கத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் இப்போது கூட அவரது மூளையை பரிசோதிக்க முடியும் என்று  லூரி கூறியுள்ளார். எப்படியோ கொளுத்தி போட்டுவிட்டார்! இனி புகைஞ்சுதானே ஆகனும்!

என்ன கொடுமைடா சாமி! ஆசிரியர் தேர்வு வாரியம் வேதனை!

டி.இ.டி தேர்வுகள் ஜூன் 3ம் தேதி  நடக்க உள்ளது இதற்காக 7,50,000 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதில் 6.50 லட்சம் விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து பரிசோதித்த ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ந்து போய்விட்டது. இந்த விண்ணப்பங்களை சரிவர பூர்த்தி செய்யாதோர் 28 ஆயிரம் பேராம்! இதில் பலபேர் தங்களுடைய பெயரைக்கூட பூர்த்தி செய்யாமல் விட்டுள்ளனராம்! விண்ணப்பங்களை சரிவர பூர்த்தி செய்யாதவர்கள் எல்லாம் எப்படி ஆசிரியராக பணியாற்ற போகிறார்கள் என்று கவலை அடைந்துள்ளது தேர்வு வாரியம்! ஆனால் இந்த விண்ணப்பங்களை நிராகரிக்க போவதில்லை என்று அறிவித்து ஆசிரியர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது வாரியம்!.புதிய கல்விக் கொள்கையின் படி ஆசிரியர் பணியில்  சேர்ந்த அணைவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் டி.இ.டி தேர்வில் வெற்றி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பங்களை நிராகரித்தால் ஓர் ஆண்டு வீணாகி போகும் என்று கரிசணம் காட்டுகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்! கற்று கொடுப்பவர்களே இந்த நிலையில் இருந்தால் கற்றுக் கொள்பவர்கள் நிலை என்ன? நமது கல்வி அதலபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

முக்கியத்துவம் பெற்ற கனிமொழி!

சமீபத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனி தி.மு.க தலைவரை சந்திச்சார் இல்லையா? அதில ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சந்திப்பு கோபால புரத்தில் இல்லாமல் சி.ஐ.டி காலனியில நடந்துச்சு! இது ஒரு எக்ஸ்க்ளூசிவ் சந்திப்பா இருந்ததாலே ஞான தேசிகன் கூட விமான நிலையத்துல வறவேற்றதோட ஒதுங்கிட்டாராம்! ஸ்பெக்ட்ரம் கனிமொழிக்கு முக்கியத்துவம் தர்றதுக்காகவே இந்த சந்திப்பு சி.ஐடி காலனியிலே நடந்துச்சுன்னு செய்திகள் அடிபடுது! ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன் வேதனை இப்ப எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்!


  முதல்ல அவன் நிறுத்தட்டும்! முருகதாஸ் vs ராமதாஸ்

விஜயின் துப்பாக்கி படத்திற்கு ராமதாஸ் வட்டாரத்துல இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது! விசயம் ஒண்ணுமில்லை! துப்பாக்கி போஸ்டருல விஜய் சுருட்டு பிடிக்கிறமாதிரி படம் இருந்தது அவ்வளவுதான் பொங்கி எழுந்திருச்சு அன்புமணி குருப்! அவரது மனைவி சௌமியா அன்புமணியின் பசுமை தாயகம் அமைப்பு போராட்டங்களில் குதிக்க படத்தின் இயக்குனர் முருகதாஸும் பொங்கி எழுந்துவிட்டார்! தனது டிவிட்டர் தளத்தில்  ஒரு இந்தி பட போஸ்டரை போட்டு முதல்ல அவன நிறுத்த சொல்லு! நான் நிறுத்தறேன்னு! கமெண்ட் போட்டுறுக்கார்! விசயம் எங்க போயி முடியுமோ?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2