வெற்றிப்பாதை காட்டுவாரா தோனி!

வெற்றிப்பாதை காட்டுவாரா தோனி!


இன்றைய ப்ளே ஆப் போட்டியில் பலமான மும்பை அணியை எதிர் கொள்கிறது சென்னை அணி! மும்பை அணியுடன் ஒப்பிடும் போது நமது அணி சற்று பலம் குறைந்ததுதான்! மும்பை அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிகம்! அதனால்தான் 2010ல் பைனல் வரை வந்தது. இப்போதைய கேப்டன் ஹர்பஜன் துணிச்சல் மிக்கவர்! இந்திய அணிக்காக பல போட்டிகளை தனது பந்து வீச்சால் வென்று காட்டியவர்! அத்துடன் இல்லாமல் பேட்டிங்கிலும் சாதித்தவர்.இவர் மட்டுமில்லாமல் சச்சின், ரோகித் சர்மா, போலார்டு, மலிங்கா, அம்பாதிராயுடு, ஸ்மித் போன்ற வீரர்கள் ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்ற கூடியவர்கள்.
    இந்த முறை மும்பை அணியுடன் இரண்டுமுறை மோதிய சென்னை அணி இரண்டுமுறையும் தோற்றுப் போனது. முதல் போட்டியிலேயே மும்பை சென்னையை வீழ்த்தியது. அடுத்த நடந்த இரண்டாவது லீக்கிலும் கடைசி பந்தில் சிக்சர் விளாசி ஜெயித்து தன் திறமையை நிரூபித்துகாட்டியது மும்பை அணி. டெண்டுல்கர் அந்த அணியில் இருப்பது அவர்களுக்கு மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த தொடரோடு டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெறலாம். எப்படியும் இன்னும் இரண்டாண்டுகள் இந்திய அணியில் அவர் நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடல் காயங்களால் அவதியுறும் அவர் இந்த டி 20 போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? கொஞ்சம் யோசிக்கலாம்! விசயம் வேறு எங்கோ சென்று கொண்டிறுக்கிறது நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்.
    சென்னை அணியை பொறுத்த வரை ஆடினால் ஆடுகிறார்கள்! கவிழ்ந்தால் கவிழ்ந்துவிடுகிறார்கள். இந்திய அணியைப் போலத்தான் இருக்கிறது சென்னையின் பங்களிப்பும். இந்த நான்கு தொடர்களிலும் ஆடியதை விட இம்முறை சென்னை அணியின் ஆட்டம் மிக மோசமாகத்தான் அமைந்து இருந்தது. டூபிளசிஸ் மட்டுமே பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும்படி ஆடிவருகிறார். ஆல்பி மோர்கல் விக்கெட் வீழ்த்த தடுமாறுகிறார். பத்து கோடி கொடுத்து வாங்கிய ரவீந்திர ஜடேஜா சொதப்பி வருகிறார். ரெய்னா, தோனி, பத்ரிநாத், விஜய், ஹசி என அனைவரின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை!
   சென்னை அணியின் பலமே சுழல் பந்துவீச்சுதான்! அஸ்வின்,ஜகாதி கூட்டணி சென்ற வருடம் கலக்கியது. ஆனால் இந்த வருடம் இவர்கள் விக்கெட் வீழ்த்த தடுமாறுவதுடன் ரன்களை வாரி வழங்குகின்றார்கள். பீல்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! கேப்டனின் கீப்பிங்கும் சரி இல்லை! வியுகமும் சரியில்லை. இத்தனை இல்லைகள் இருந்தாலும் ஒரு அதிர்ஷ்டம் இருந்ததால்  ப்ளே ஆப் னுள் சென்னை நுழைந்து இருக்கிறது. இது இவர்களுக்கு இறுதி வாய்ப்பு. இன்று தோற்கும் அணி நடையை கட்ட வேண்டியதுதான். இரண்டு முறை தோற்ற மும்பையை இன்று வென்று அடுத்த சுற்றுக்கு சென்னை செல்லவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
    அதற்கு என்ன செய்யலாம்! ஹசி வந்தபின் டூ பிளசிஸ் நீக்கப்பட்டு வருகிறார். அவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜாவை துரத்திவிட்டு அனிருத்தாவை சேர்க்கலாம். ஜடேஜா பந்துகளை வீணடிப்பதோடு பந்து வீச்சிலும் சாதிக்கவில்லை! அஸ்வின் ஜகாதி இருவரை சேர்த்துகொள்வதோடு ஹில்பெனான்ஸையும் மார்கலையும் வேகபந்துக்கு வைத்துக் கொண்டால் போதுமானது.டுவைன் பிராவோவையும் அணியில் சேர்க்கலாம். பந்து வீசுவதோடு ரன்களையும் சேர்ப்பார். இந்த கூட்டணி அமைந்தால் வெற்றி கிடைக்க வாய்ப்பு என்பது என் கருத்து.
என் அணி தேர்வு இது. விஜய்,டூபிளசிஸ், ரெய்னா,பத்ரிநாத், பிராவோ, தோனி, மார்கல், அனிருத்தா, அஸ்வின், ஜகாதி, ஹில்பெனான்ஸ்.

இந்த கூட்டணி வெல்லும் என்று நினைக்கிறேன்! வென்று காட்டுவாரா தோனி?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை தயவு செய்து கமெண்ட் செய்து ஊக்குவியுங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2