Posts

Showing posts with the label பதிவுகள்

சானியா மிர்ஸாவை லவ்விய சந்தானம்! (கலகல கதை)

Image
  வாழ்க்கையில் சில கேரக்டர்கள் சுவாரஸ்யம்! எது நடந்தாலும் ஓக்கே! நான் இப்படித்தான் இருப்பேன்! என் வாழ்க்கை என்னுடையது நான் இப்படித்தான் வாழ்வேன் என்று வாழ்வது ஒருவகை! இந்த வகையினரின் நடத்தை பிறரை பாதிக்காமல் இருக்க வேண்டும்.     இன்னொரு வகை எல்லாவற்றிற்கும் பிறரை பழி போடுவது! கடவுளை குற்றம் சொல்வது. நான் பிறந்த நேரம் சரியில்லை அதான் இப்படி அல்லாடுறேன் என்று சதா புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் ஒரு ரகம்!   இவர்கள் வாழ்க்கை எப்போதும் இனிப்பது இல்லை!     நாம் பார்க்க போகும் கேரக்டர் சந்தானம்! சினிமா நடிகர் சந்தானம் போலவே ஒரு ஜாலி டைப் கேரக்டர்! கையில் காசிருந்தால் கர்ணன் தான்! கொடை வள்ளலாகி கூடியிருக்கும் தோழர்களுக்கு பாட்டில் பாட்டிலாய் சரக்கு சப்ளை செய்வார். காசு இல்லையேல் அன்று அவனுக்கு கொடுத்தோமே என்று கணக்கு பார்த்து அவனிடம் சென்று கேட்க மாட்டார். அப்படியொரு நல்ல குணம். வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதன் இந்த சந்தானம்.      இவனுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் ஏற்பட்டு விட்டது. சானியா மிர்சாவுடனான காதல் தான்...

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

 வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2 வணக்கம் அன்பர்களே! சென்ற பகுதியில் வார மாத இதழ்களில் சிறுகதை எழுதுவது குறித்து பார்த்தோம். சிறுகதை இலக்கியத்திற்கு இப்போது பத்திரிகைகளில் பெரிய வரவேற்பு இல்லை. நாவல் என்பது கூட 80 முதல் 100 பக்கங்களுக்குள் குறைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கும். சரி அப்புறம் எப்படி பத்திரிகையில் உங்கள் பெயர் வருவது? நீங்கள் எப்படி சந்தோஷம் அடைவது? அதற்கு நீங்கள் வாசக எழுத்தாளராக துணுக்கு எழுத்தாளராக மாற வேண்டும். இன்று வரும் பிரபல வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குத்தவிர வீட்டுக் குறிப்புகள், வாசகர் கடிதங்கள், ஆன்மீகக் குறிப்புகள்,கேள்வி பதில், இணையத் துணுக்குகள் என்று ஏராளமான வாய்ப்புகள் வாசக எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கிடக்கின்றன.  பத்திரிகையில் எழுத விரும்பும் ஆரம்ப கால எழுத்தாளர்கள் வாசகர் கடிதம், கேள்விபதில் துணுக்கு, ஜோக்ஸ் என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வது வழக்கம். சில வாசகர்கள் வாசகர் கடிதம், கேள்விபதிலோடு தங்கள்  ஆசையை பூர்த்தி செய்து க...

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?

 வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? சங்கப்பலகையில் நண்பர் சுந்தரராசன் வார மாத இதழ்களில் படைப்புகள் எழுத சக எழுத்தாளர்கள் வழிகாட்டலாமே என்று கேட்டிருந்தார். அவருக்காகவும் இங்கு எழுதும் புதிய படைப்பாளர்களுக்காகவும் இந்தப் பதிவு. முதலில் இப்படி ஒரு பதிவு எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஒரு சுய பரிசோதனையும் செய்து கொண்டேன். முடிவில் ஓரளவுக்கு அனுபவமும் தகுதியும் இருக்கிறது என்று முடிவுக்கு வந்து இந்த பதிவை எழுதுகின்றேன். முதலில் என்னைப் பற்றி ஓர் அறிமுகம். நான் நத்தம் எஸ்.சுரேஷ்பாபு. 1988ல் சிறுவர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை முதலில் நட்த்தினேன். அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்புறம் தேன்சிட்டு என்ற இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிகையை என் கல்லூரிக் காலத்தில் நடத்தினேன்.  தளிர் என்ற வலைப்பூவில் 2011 முதல் படைப்புகள் எழுதி வருகின்றேன். என் கதைகள் துணுக்குகள், பாக்யா, குமுதம், தங்கமங்கை ,கோகுலம், கல்கி, ஆன்ந்தவிகடன்,  தமிழ் இந்து, மாயாபஜார், பொம்மி, பொதிகைச்சாரல் வாரமலரில் வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு வாரமலர் டி.வி.ஆர்.சிறுகதைப் போ...

பத்திரிக்கை பாசம்! பகுதி 2

Image
பத்திரிக்கை பாசம்! பகுதி 2 என் பத்திரிக்கை வாசிப்பும் பத்திரிக்கைகளில் எழுதிய அனுபவங்களை சென்ற பதிவில் சொல்லிக் கொண்டிருந்தேன். வலைப்பூ தொடங்கி தட்டுத்தடுமாறி ஓரளவுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருந்த போது நண்பர்கள் பத்திரிக்கைகளுக்கு எழுதலாமே என்று தூண்டிவிட்டனர். ஆனாலும் சூடுபட்ட பூனையாக  நான் வலைப்பூவில் மட்டும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முகநூலில் அறிமுகம் ஆனார் எழுத்தாளர் எஸ்.எஸ். பூங்கதிர். சிறுவயதிலிருந்து அவரது நகைச்சுவை துணுக்குகளை குமுதம் விகடனில் வாசித்து ரசித்திருக்கிறேன். முகநூலில் அவருக்கு நட்பு அழைப்பு விடுக்க இணைந்தவர் என் பதிவுகளை வாசித்து நீங்க பாக்யாவுக்கு எழுதலாமே ஜோக்ஸ் கவிதை எழுதுங்க! வரும் என்றார். ஆனால் சன்மானம் வராது என்று சொல்லவில்லை. கொஞ்சம் சபலம் தட்டியது. எழுதித்தான் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்.    பாக்யாவிற்கு ஜோக்ஸ் கவிதை எழுதுங்க என்று பூங்கதிர் சொன்னதால் பத்து ஜோக்ஸ்கள் பத்து ஹைக்கூ கவிதைகள் அனுப்பி வைத்தேன்..  முதன் முதலில் நான் அனுப்பிய பத்து ஜோக்குகளும் ஒரு ஹைக்கூவும் ஒரே இதழில் பிரசுரம் ஆனது. அப்புறம் ஒ...

பத்திரிக்கை பாசம்! பகுதி 1

Image
பத்திரிக்கை பாசம்!   (சற்றே பெரிய பதிவு பொறுமையா வாசியுங்க) சிறுவயது முதலே வீட்டில் தினமணி பேப்பர் வாங்குவார் அப்பா. வெள்ளிக் கிழமையில் குமுதம், விகடனும் வரும். அது தவிர ஞானபூமி என்ற மாதப்பத்திரிக்கையும் வரும். நடுத்தர வர்க்க குடும்பம் இதற்குமேல் பத்திரிக்கைகளுக்கு செலவு செய்வது இயலாத விஷயம். ஆனாலும் அவ்வப்போது வேறு சில புத்தகங்களும் வாங்குவார். தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக் படக்கதை விரும்பி வாசிப்பேன். நான் என் மாமா வீட்டில் இருந்தமையால் சொந்த ஊர் நத்தம் வருகையில் மொத்தமாக பேப்பர்களை எடுத்து தேதி வாரியாக அடுக்கி படித்து முடிப்பேன். அதே போல தினமணிக் கதிரில் சூப்பர்தும்பி என்றொரு படக்கதை அதையும் விரும்பி வாசிப்பேன். குமுதத்தில் ஆறுவித்தியாசங்கள் என்னை ஈர்க்கும் .   நான் ஏழாவது படிக்கையில் விடுமுறைக்கு   ஊருக்கு வந்தபோது பஞ்செட்டி குருக்கள் வீட்டுக்கு கூட்டிச்சென்ற அப்பா அங்கிருந்து பத்து பதினைந்து ராணிக் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க இரவல் வாங்கிக் கொடுத்தார். முகமூடிவீரன் மாயாவி, ஜேம்ஸ்பாண்ட், ப்ளாஷ் கார்டன், லேடி ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி, இன்னும் ப...

நம்பினால் நடக்கும்!

Image
நம்பினால் நடக்கும்! மாவீரன் அலேக்சாண்டர் உலகத்தை வென்று வரப்புறப்பட்ட போது தம் சொத்துக்களையெல்லாம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது ஒருவர், எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே உங்களுக்கு என்னதான் மிஞ்சபோகிறது? என்று கேட்டார்.    அலேக்சாண்டர் ஒரே சொல்லில் பதில் சொன்னார். ‘நம்பிக்கை’ ஆம் அவர் தன்னை நம்பினார்! வென்று காட்டினார். நம்பினால் எதுவும் நடக்கும்.ஆகவே எந்த ஒரு செயலிலும் எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். எதிலும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை எனும் போது அதனை இழந்தால் வாழ்க்கையையும் இழப்பது போலத்தானே?      யானைக்கு பலம் தும்பிக்கையால் என்றால் மனிதனுக்கு பலம் அவனது நம்பிக்கையால்! நம்பிக்கை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று பிறரை நம்புவது! மற்றொன்று தன்னை நம்புவது! பிறரை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தபின் அவர்மீது நம்பிக்கை இல்லாமல் அந்த காரியம் நடக்குமோ நடக்காதோ என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள் சிலர். ஒரு காரியத்தை இவர் செய்வார் என்று நம்பிக் கொடுத்தபின் அது நடக்குமோ நடக்காதோ என்று எண்ணம் வரும் எனில்...

ஒரே நாள் மழை! பத்து நாள் விடுப்பு!

Image
ஒரே நாள் மழை! பத்து நாள் விடுப்பு!    என் வீடு! கடந்த 22ம் தேதியன்று  மழை சற்று ஓய்ந்திருந்த சமயத்தில்  திங்கள் சோமவாரம் குறித்த பதிவொன்றை தட்டச்சு செய்யும் போதே தலைவலி துவங்கியது. பொறுத்துக் கொண்டு போஸ்ட் ஷெட்யூல் செய்துவிட்டு உறங்க சென்றுவிட்டேன். மறுநாள் சோமவார அபிஷேகம் பிரதோஷம் என்று வேலைகள் கிரகப்பிரவேசம் வேறு ஒன்று. இதெல்லாம் எப்படியோ முடித்து இரவு படுக்கும் சமயம் குளிரெடுத்தது. எப்படியோ மாத்திரை எடுத்துக் கொண்டு படுத்தேன். அடுத்த நாளும் காய்ச்சல், உடல்வலி, அதனுடனே கார்த்திகை தீபமும் கடந்தது.     மருத்துவம் செய்து கொண்டாலும் உடல் அசதி காரணமாக கணிப்பொறி பக்கம் வர முடியவில்லை! வெள்ளியன்று பாட்டி சிரார்த்தம். உறவினர்களோடு அளவளாவுதிலும் சிரார்த்த பணிகளிலும் கழிய மீண்டும் சனி, ஞாயிறு முதல் மழை ஆரம்பித்துவிட்டது. அவ்வப்போது தடைபட்ட மின்சாரம் கணிணி பக்கம் செல்லவிடவில்லை. திங்களன்று மதியம் முதல் விடாத மழை! வெளியே தலைகாட்ட முடியவில்லை!   எங்களுடையது ஓட்டு வீடு! என் அப்பாவின் தாத்தா கட்டியவீடு! சில இடங்களில் ஒழுகினாலும் மழைக்கு இதமாக...

ஆனந்தவிகடன் தலையங்கமும் எனது கேள்வியும்!

Image
ஆனந்தவிகடன் தலையங்கமும் எனது கேள்வியும்! தமிழ்நாட்டை வெள்ளக்காடாக்கிய பெருமழை சிலநாட்களாக ஓய்ந்த நிலையில் இன்று ஆனந்தவிகடன் வார இதழை வாசிக்க நேர்ந்தது. முதல்வரைப் பற்றி ஒரு பெருங்கட்டுரை இந்த நாலரை ஆண்டு ஆட்சியின் அவலங்களை பட்டியலிடுகிறது ஓர் கட்டுரை. அனைத்தும் நிஜங்களாக சுடுகிறது. இவ்வளவு தைரியமாக விமரிசித்து எழுதிய நிருபர் குழுவினருக்கு முதலில் பாராட்டுக்கள். மற்றபடி விகடன் பழைய விகடன் வாசித்த எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை! இதழ் முழுக்க சினிமா செய்திகள், பேட்டிகள், துணுக்குகள்தான்.    அஞ்ஞான சிறுகதை, பாரதிதம்பி கட்டுரை, பத்து செகண்ட் கதைகள் கொஞ்சம் கவர்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்ல வந்தது விகடனின் இந்தவார தலையங்கம் பற்றி.     வெள்ளக்காடான தமிழகத்தை மீட்க அரசு நடவடிக்கை அவசியமாக தேவைப்படும் நேரத்தில் தேவை மக்கள் நடவடிக்கை என்று தலைப்பில் தொடங்குகிறது தலையங்கம். பேரழிவை விளக்குகிறது முதல் பத்தி. அடுத்த பத்தி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததை செல்லமாக கண்டிக்கிறது.    அதற்கப்புறம் விகடன் சொல்லுவதைத்தான் என்னால்...