ஒரே நாள் மழை! பத்து நாள் விடுப்பு!
ஒரே நாள் மழை! பத்து நாள் விடுப்பு!
கடந்த 22ம் தேதியன்று
மழை சற்று ஓய்ந்திருந்த சமயத்தில் திங்கள்
சோமவாரம் குறித்த பதிவொன்றை தட்டச்சு செய்யும் போதே தலைவலி துவங்கியது. பொறுத்துக்
கொண்டு போஸ்ட் ஷெட்யூல் செய்துவிட்டு உறங்க சென்றுவிட்டேன். மறுநாள் சோமவார அபிஷேகம்
பிரதோஷம் என்று வேலைகள் கிரகப்பிரவேசம் வேறு ஒன்று. இதெல்லாம் எப்படியோ முடித்து இரவு
படுக்கும் சமயம் குளிரெடுத்தது. எப்படியோ மாத்திரை எடுத்துக் கொண்டு படுத்தேன். அடுத்த
நாளும் காய்ச்சல், உடல்வலி, அதனுடனே கார்த்திகை தீபமும் கடந்தது.
மருத்துவம் செய்து
கொண்டாலும் உடல் அசதி காரணமாக கணிப்பொறி பக்கம் வர முடியவில்லை! வெள்ளியன்று பாட்டி
சிரார்த்தம். உறவினர்களோடு அளவளாவுதிலும் சிரார்த்த பணிகளிலும் கழிய மீண்டும் சனி,
ஞாயிறு முதல் மழை ஆரம்பித்துவிட்டது. அவ்வப்போது தடைபட்ட மின்சாரம் கணிணி பக்கம் செல்லவிடவில்லை.
திங்களன்று மதியம் முதல் விடாத மழை! வெளியே தலைகாட்ட முடியவில்லை!
எங்களுடையது ஓட்டு
வீடு! என் அப்பாவின் தாத்தா கட்டியவீடு! சில இடங்களில் ஒழுகினாலும் மழைக்கு இதமாக இருந்தது.
வாசலில் ஏரிக்கால்வாய் ஓடை செல்கிறது. பின்புறம் பிள்ளையார் கோயில் குளம். இவை இரண்டும்
போன வார மழைக்கே நிரம்பி கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்து இருந்தது. செவ்வாய் அதிகாலை
முதல் இரவு வரை விடாது தொடர்ந்த மழை கால்வாயை ( இப்போது வயல்) நிரப்பி எங்கள் வீட்டுக்கு
வரும் சிமெண்ட் சாலை மேல் ஏறி பிள்ளையார் கோயில் குளத்தின் கரையை தொட்டு நின்றது. சாலையெல்லாம் முழங்காலளவு நீர்.
என் வீட்டிற்கு வரும் சிமெண்ட் சாலை மூழ்கியுள்ளது! |
வெளியே செல்ல முடியவில்லை!
காரனோடை குசஸ்தலை நதியில் பத்து வருடத்திற்கு பின் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. எங்கும்
தண்ணீர்! தண்ணீர்! வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரம் திருவள்ளூர் இன்று
வெள்ளமாவட்டமாக மாறிவிட்டது. ஒரே நாள் மழை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
எங்கள் பகுதிகள்
பரவாயில்லை! சென்னை வாசிகளை நினைத்தால் பயமாக இருக்கிறது. வீடு முழுக்க நீர் புகுந்து
கைக்குழந்தைகளோடு அல்லாடும் தாய்மார்களையும், வயதானவர்களையும் குடிநீர், பால், உணவு
இல்லாமல் அவர்கள் படும் பாட்டையும் செய்திகளில் காண்கையில் கண்ணீர் மல்கி நிற்கிறது.
அடையாற்று வெள்ள பெருக்கும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் ஸ்தம்பித்து
நிற்கும் போக்குவரத்தும், மனதில் பாராமாய் பதிகின்றது.
சென்னை மேயரோ, மந்திரிகளோ,
எம்.எல்.ஏக்களோ நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதை பார்க்க முடியவில்லை! தன்னார்வலர்கள்தான்
பெரும்பாலும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சிமெண்ட் சாலையை ஒட்டி கால்வாய்! |
அடையாறு கரையோர மக்கள்,
தாம்பரம், கொரட்டூர் , குன்றத்தூர் பகுதி வாசிகளின் நிலை மிக பரிதாபமாக உள்ளது. ஒரு
வாரம் முன்னர் பெருமழை பெய்து உதாரணம் காட்டியும், மீண்டும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை
செய்தி வந்தும் அரசு இவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாக்கமால் விட்டது
வேதனையான ஒன்று.
நதிகளையும் கால்வாய்களையும்,
குளங்களையும், ஏரிகளையும் ஆக்ரமித்து குடியிருப்புகளாக மாற்றிக் கொண்டவர்களுக்கு இயற்கை
நல்லதொரு பாடம் புகட்டியுள்ளது. இனியாவது இயற்கையின் பாதையில் குறுக்கிடாமல் இயற்கையோடு
இயைந்து வாழ மக்கள் பழக வேண்டும். இல்லையெனில் இந்த பாடம் மீண்டும் தொடர்ந்துகொண்டுதான்
இருக்கும் போல!
என் வீட்டு பின் புறம் பிள்ளையார் கோயில் குளம்! நிரம்பி வழிகிறது! கழிவு நீர், ஆகாயத்தாமரை கலந்து உள்ளது! |
சென்னை பதிவர்கள்,
ஸ்ரீராம் ஐயா, சென்னைப்பித்தன் ஐயா, தென்றல்சசிகலா, சீனு, மோகன்குமார், ராமனுஜம் ஐயா,
தில்லையகம் கீதா, ஜாக்கிசேகர், மதுமதி, ஆரூர் மூனா, ஸ்கூல்பையன் சரவணன் மற்றும் குடந்தை
சரவணன், கவியாழி கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
சென்னை மக்களும் நம்
சக நண்பர்களும் விரைவில் இந்த வெள்ளப் பெருக்கில் இருந்து மீண்டுவர இறைவனை ப்ரார்த்திக்கின்றேன்!
என்னுடைய வழக்கமான பதிவுகள் அடுத்த வாரம் முதல் தொடரும்.
வணக்கம்
ReplyDeleteஐயா
எல்லாம் இறைவன் துனை... இயற்கை.... கோபித்தால் விளைவுகள் அதிகம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் பதிவைப் படிக்கும்போதே மனதிற்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு குணமடைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteமிகக் கடினமான தருணம்தான். அவர்கள் படும் வேதனையும் துயரமும் தொலைகாட்சிய்லேயே பார்க்க முடியவில்லை. இனிமேலாவது அரசும் மக்களும் விழிப்புணர்வு பெறவேண்டும்.
ReplyDeleteசிந்திக்க வைத்த பதிவு.
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...
ReplyDeleteபாதுகாப்பாய் இருங்கள்...
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.
விடாத பிணியிலும் விறுவிறுப்பு விருப்பப் பணியை தொடர ஆரோக்கிய மருந்து அருள் செய்யட்டும் நண்பரே!
ReplyDeleteதன்னார்வலத் தொண்டர்கள்தான் வணக்கத்திற்குரிய உண்மைத் தலைவர்கள் என்பதே உண்மை!
நல்ல பதிவு!
நட்புடன்,
புதுவை வேலு
மழலைகள் பத்திரம்.
ReplyDeleteவெள்ளம் வடியும்வரை
வெளியிடங்களுக்கு அனுப்பாதீர்கள்.
பகிர்வுக்கு நன்றி சுரேஷ்.
சுற்றிலும் வெள்ளக்காடு... சென்னை மக்களையும் மழையால் தவிக்கும் மற்ற மாவட்ட மக்களையும் பார்க்கும்போது மனது பதைக்கிறது. இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும். எனது பிரார்த்தனைகளும்.
ReplyDeleteஉங்கள் உடல் நலம் விரைவில் சரியாகட்டும்..
மனம் கணக்கிறது நண்பரே
ReplyDeleteகவனமாக இருங்கள்
உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்
குழந்தைகளை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்
விரைவில் சென்னை உட்பட பாதிப்பு ஏற்பட அனைத்து மாவட்டங்களின் நிலைமை சீரடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteசென்னை மக்களும் நம் சக நண்பர்களும் விரைவில் இந்த வெள்ளப் பெருக்கில் இருந்து மீண்டுவர இறைவனை ப்ரார்த்திக்கின்றேன்!//
ReplyDeleteநாங்களும் உங்களுடன் பிரார்த்திக்கிறோம். மழையால் அவதிபடும் அனைத்து மக்களும் நலம்பெறவேண்டுகிறேன்.
மழை பெய்தது
ReplyDeleteவெள்ளம் வந்தது
மூழ்கியது தளிர்
வெள்ளம் வடிந்தும்
எட்டிப் பார்த்தது
இனி புதுத்துளிர்
காணலாம்
ஜெயகுமார்
மழை பெய்தது
ReplyDeleteவெள்ளம் வந்தது
மூழ்கியது தளிர்
வெள்ளம் வடிந்தும்
எட்டிப் பார்த்தது
இனி புதுத்துளிர்
காணலாம்
ஜெயகுமார்
தொண்டர்களை
ReplyDeleteகடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்
வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...
போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!
நிலைமை தற்சமயத்தில் பரவாயில்லையா?
ReplyDeleteதங்கள் உடல் நலன் குழந்தைகள் நலன் பார்த்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteவிரைவில் அனைத்தும் சரியாக வேண்டும்.
தாமதமாகிவிட்டது தங்கள் பதிவிற்கு வர,.
ReplyDeleteஉங்கள் பகுதி கிராமப்பகுதி வயல்கள் உள்ளதால் இதோடு தப்பித்தீர்கள் போலும். சென்னைப்பகுதி அடுத்தடுத்து வீடுகள் நெருக்கடிகள் அதனால் துன்பம் ....இயற்கை நல்ல பாடம் கற்பித்தது.கீதா உங்கள் நலம் சொன்னார்..
கீதா: அன்று உங்களுடன் பேசியதில் உங்கள் நலம் அறிந்து மகிழ்வு...இயற்கை நல்ல பாடம் கற்றுக் கொடுத்தது. சரி நம் அரசியல்வாதிகள் திருந்துவார்களா?
மழைக்குப் பின் காய்ச்சல் கவனமாக ஒய்வு எடுக்கவும்.
ReplyDeleteஇயற்கை மனிதனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது
உடல் நலம் தேறி இருக்கும் என நம்புகிறேன். இந்த மழை எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது! :(
ReplyDelete