கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56


1.   வெள்ளநிவாரணம் கொடுக்க போன தலைவருக்கே நிவாரணம் தேவைப்படுதாமே ஏன்?
நிவாரணப் பொருள்கள்ல கை வச்சிட்டாருன்னு மக்கள் ”ரணப்” படுத்தி அனுப்பிச்சிட்டாங்க!

2.    எங்க தலைவர் பேசினா அப்படியே தெறிக்க விடுவாரு..!
என்னது அனலா..!
இல்லை எச்சில்…?!

3.   தலைவருக்கு கொஞ்சம் கூட விவரமே பத்தலை
  ஏன்..?
பீப் சாங் கேட்டீங்களான்னு கேட்டா நமக்கு எப்பவும் மட்டன் தான் பிடிக்கும்னு சொல்றாரே!


4.   உனக்கு அறிவிருக்கா..?
அதை விற்கிறதுக்காக உங்ககிட்ட நான் வரலை!

5.   வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கஜானாவைத் திறக்க சொன்னேனே என்ன ஆயிற்று?
உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறந்து திறந்து இப்போது அது காலியாக இருக்கிறது மன்னா!


6.   அரசியல் களத்துல ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு முன்னேறினவரு எங்க தலைவரு..!
அடுத்தவங்களை அடிச்சி அடிச்சியே பின்னுக்கு வந்தவரு எங்க தலைவரு!

7.   அதோ போறாரே அவர் பசையான ஆளு!
பெரிய பணக்காரரா?
இல்லே கம் தயாரிச்சு விக்கிறாரு!

8.   மழைவெள்ளத்துல சரக்கெல்லாம் அடிச்சிக்கினு போயிருச்சுன்னு புலம்பறாரே பெரியவியாபாரியா?
நீ வேற அவர் வீட்டுல வாங்கி வெச்சிருந்த டாஸ்மாக் சரக்கு அடிச்சிட்டு போனதை சொல்றார்!

9.   கூட்டணியிலே சேர இத்தனை பேர் அழைப்பு விடுத்தும் தலைவர் ஏன் சும்மா இருக்கார்?
’குழம்ப’ வைச்சிட்டாங்களாம்!

10. வெள்ள நிவாரணமா புடவை கொடுத்தும் உன் மனைவிக்கு திருப்தியா இல்லையா ஏன்?
மேட்சிங் ப்ளவுஸ் கொடுக்கவே இல்லையாம்!

11. மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே...?
     ஆம்...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சந்தர்ப்பவாத நகைச்சுவையை மிகவும் ரசித்தேன் நண்பரே... அருமை

  ReplyDelete
 2. நகைச்சுவைகள் வழக்கம்போல அருமை.

  ReplyDelete
 3. ரசித்தேன் நன்றி நண்பரே

  ReplyDelete
 4. அனைத்தும் ரசித்தோம்

  ReplyDelete
 5. வணக்கம்
  ஐயா
  நகைச்சுவை அருமை இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. மேட்சிங் ப்ளவுஸ்,,,,, இதிலேயும்,
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
 7. அன்பு நண்பரே,
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 8. ரசித்தேன்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2