மொக்க ஜோக்ஸ்!

 1. கூட்டணியை வலுப்படுத்துங்கன்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டாரு போல!
ஏன் என்ன ஆச்சு?
ஒரு டன் இரும்பு கம்பிக்கு ஆர்டர் கொடுத்து இருக்காரே!

 1. தலைவருக்கு பொது அறிவு சுத்தமா இல்லை!
     ஏன்?
  நெட்ல 300 எம்.பி ஃபிரின்னு சொன்னா உடனே வாங்கு செண்ட்ரல்ல ஆட்சியை பிடிச்சிடலாம்னு சொல்றாரே!

 1. மன்னருக்கு போர்க்களம் என்றால் மிகவும் விருப்பமாமே?
ஆமாம்! அந்தப்புரத்தை விட அங்கு அடி கம்மியாக அல்லவா விழுகிறது!

 1. அந்த டாக்டர் கிண்டல்பேர்வழின்னு எப்படி சொல்றே?
தலைவலி பின்னியெடுக்குது டாக்டர்னு சொன்னா ஏன் கொண்டை போட்டுவிடலையான்னு கேக்கறாரே!

 1. அரசியல்வாதியோட பொண்ணை காதலிச்சியே என்ன ஆச்சு?
கூட்டணியிலே முறிவு ஏற்பட்டு போச்சு!


 1. பணவீக்கம் அதிகரிச்சு போச்சுங்கிறதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்!
அப்புறம்?
பேங்கில பணம் கொடுக்கும்போது கூடவே ஒரு தைல புட்டியும் தரனும்னு அறிக்கை விட்டிருக்கார்!

 1. அந்த ஜூஸ் கடையில என்ன தகறாரு?
பழரசம்னு சொல்றீங்களே! ரசம் இருக்கு பழம் எங்கேன்னு கேட்டு அடம்பிடிக்கிறாராம் ஒருத்தரு!

 1. கடையெல்லாம் கலைச்சுப் போட்டப்புறம்தான் கிடைச்சுது!
என்னது நீ விரும்புன புடவையா?
நீ வேற புடவை எடுக்க போன என் பொண்டாட்டி!

 1. மன்னர் இப்போதெல்லாம் நகர்வலம் போவதில்லையே ஏன்?
மக்களின் முற்றுகையை சமாளிக்க முடியவில்லையாம்!

 1. நம்ம தலைவர் கேட்டதை பார்த்து எலக்‌ஷன் கமிஷன் ஒரு நிமிஷம் ஆடிப்போச்சு?
அப்படி என்ன கேட்டார்?
புயல் சின்னத்தை தன் கட்சிக்கு ஒதுக்கணும்னுதான்!


 1. அந்த நாட்டு வைத்தியர் போலின்னு எப்படி சொல்றே?
இவ்விடம் விதண்டாவாதத்துக்கு மருந்து தரப்படும்னு போர்டு வைச்சிருக்காரே!

12.ஜட்ஜ்: பூட்டை உடைச்சு ஏன் சிலை திருடனே?
  திருடன்: கள்ளசாவி கிடைக்கல அதனால பூட்டை உடைக்கவேண்டியதா போச்சு எசமான்?

 1. தலைவர பாக்கிறதுக்கு எதுக்கு குளோப் ஜாமூனோட போறே?
அவர்தானே ஜாமூன் வாங்கிட்டு வரச்சொன்னாரு!
  அது ஜாமூன் இல்லேடா ஜாமீன்!

 1. மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு நியுஸ் வந்ததும் தலைவர் ஏன் பதற்றப்படறார்?
அவருக்கு வரக்கூடிய  ‘மாமூல்’ பாதிச்சிடப்போவுதுன்னுதான்!

14. பையன் ஓடி ஓடி சம்பாதிக்கிறான்னு சொல்றீங்களே? என்ன பண்றார்?
   கிரிக்கெட் ப்ளேயரா இருக்கார்!

15. தலைவர் பண்ற லொள்ளு தாங்க முடியலை!
    ஏன் என்ன ஆச்சு?
  சிக்கன நடவடிக்கைன்ற பேர்ல கவர்ச்சி நடிகையை பிரச்சாரத்துக்கு வரவழைச்சிருக்காரு!


மீள்பதிவு}

மழை வெள்ளம், கணிணி பழுது, வேலைப்பளு என தொடர இணையம் பக்கம் வர இயலவில்லை. கணிணி பழுது நீங்கி இன்றுதான் இணைய உலா வர முடிந்தது. பழைய பதிவொன்றை மீள்பதிவாக்கி உள்ளேன்! விரைவில் எனது புதிய பதிவுகளோடு சந்திக்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


 
Comments


 1. மன்னருக்கு போர்க்களம் என்றால் மிகவும் விருப்பமாமே?

  ஆமாம்! அந்தப்புரத்தை விட அங்கு அடி கம்மியாக அல்லவா விழுகிறது!\\ haa...........haa.......haa.......

  ReplyDelete
 2. மீள் பதிவானால் என்ன ஜோக்குகளை ரசித்தோம் சுரேஷ்!

  ReplyDelete
 3. சரவெடிகள் நண்பரே அனைத்தும் அருமை.

  ReplyDelete
 4. புன்னகைக்க வைத்தன. அகலப்புன்னகை புயல் சின்னத்துக்கு!

  ReplyDelete
 5. ஹாஹா!சிக்கன நடவடிக்கை சூப்பர் தான்.

  வெள்ளத்தில் நீங்களும் பாதிக்கப்பட்டீர்களா?

  ReplyDelete
 6. எல்லாமே
  மூளைக்கு வேலை தரும்
  நகைச்சுவைகளே!

  ReplyDelete
 7. சிரிக்க வைத்தன.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2