இன்றைய வாரமலரில் எனது ஜோக்!

வலைப்பூவில் வாரம் தோறும் ஜோக்ஸ் எழுதி வந்தாலும் வார இதழ்களில் வெளிவரும்போது அதன் மகிழ்ச்சியே தனி. அதுவும் பல லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ள இதழ்களில் நமது படைப்புக்கள் வெளிவரும்போது உற்சாகம் ஊற்றெடுத்து நம்மை ஊக்குவிக்கும்.

கடந்தமாதத்தில் பாக்யா வார இதழில் எனது சில ஜோக்ஸ் வெளிவந்தும் என்னால் படிக்கவோ பார்க்க முடியவில்லை! எங்கள் பகுதியில் பாக்யாவார இதழ் கிடைக்க வில்லை. நண்பர் பூங்கதிர் அவர்கள் மூலம் வெளிவந்த விஷயம் மட்டுமே அறிய முடிந்தது.

இன்று எனது ஜோக் ஒன்று தினமலர்- வாரமலரில் பிரசுரம் ஆகியுள்ளது. கடந்தவருடம் ஒன்று வெளிவந்தபின்னர் நான் பத்திரிக்கைகளுக்கு சில ஜோக்ஸ் அனுப்பி வெளிவராமல் சோர்ந்திருந்தேன்.

ஒன் இண்டியா இணையத்தில் ராஜேஷ்குமார் தொடரை படித்தபோது முதலில் அவரது படைப்புக்களும் வெளிவராமல் திரும்பி வந்ததாகவும் குமுதத்திற்கு நிறைய அனுப்பி வெளிவராததால் சண்டையிட சென்றதாகவும் அவர்கள் குமுதத்திற்கு ஏற்றமாதிரியும் புதுமையாகவும் இருந்தால் கட்டாயம் வெளிவரும் என்றும் சொன்னார்கள். அதன்படி புதுமையாக மும்பையை வைத்து ஒரு கதை எழுதி பிரசுரம் ஆனதாக சொன்னார். ஆனால் அதற்கு முன் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகள் பிரசுரம் ஆகவில்லை என்று சொன்னார். ஆனால் அவர் விடா முயற்சியினால் இன்று பெரிய எழுத்தாளராய் மிளிர்கின்றார்.

அந்த தொடரை படித்ததும் எனக்கும் உற்சாகம் ஊற்றெடுத்து நிறைய ஜோக்ஸ்களை குமுதம், பாக்யா, விகடன், வாரமலர் என்று பல்வேறு இதழ்களுக்கு மெயில் மூலம் அனுப்பினேன். ஒரு மாதமாக ஒன்றும் பிரசுரம் ஆகவில்லை! ஆனால் சோர்வடையவில்லை! கணிணி பழுதால் இந்த மாதம் கொஞ்சம் ஓய்வு கொடுத்து உள்ளேன்.

வாரமலரில் கட்டாயம் ஒரு ஜோக்காவது பிரசுரம் ஆகும் என்று எண்ணியிருந்தேன். கிட்டத்தட்ட வாரம் இருபது ஜோக்ஸ் என நூறு ஜோக்ஸ் அனுப்பி இருந்தேன். என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை! இன்றைய வாரமலரில்( சென்னைபதிப்பு) எனது ஜோக்ஸ் ஒன்று வாசகர் பம்பர் பரிசாக 1000 ரூபாய் பரிசுடன் பிரசுரம் ஆகியுள்ளது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!

பிரசுரம் செய்த வாரமலருக்கும், ஊக்கமூட்டிய எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கும் ஆதரவளிக்கும் நட்புக்களுக்கும் எனது நன்றி! நன்றி! நன்றி!
படைப்பை வாசிக்க இங்கேhttp://www.dinamalar.com/supplementary_detail_story.asp…

Comments

  1. வாழ்த்துக்கள் சுரேஷ். ஜோக் மிகவும் அருமை பரிசு பெற முழுத் தகுதி உடையது.
    பத்திரிகைகள் நம் அனுப்பும் படைப்புகள் பரிசீலனையில் உள்ளன. நிராகரிக்கப் பட்டது என்று தெரிவித்துவிட்டால் நாம் இணையத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம்.கால் சூழலுக்கு ஏற்ற அனுப்பப் படும் சில படைப்புகள் தக்க நேரத்திலோ வெளி வராவிட்டால் நாம் இணையத்திலும் வெளியிட முடியாது அவுட் டேட் ஆகிவிடும்.
    மது விலக்கு போராட்டம் சம்பந்தப் பட்ட ஒரு பக்கக் கதை ஒன்றை குமுதத்திற்கு அனுப்பி இருந்தேன். உரிய நேரத்தில் விரைவாக அதை பிரசுரித்து விட்டது குமுதம்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்! உண்மைதான்! விகடனுக்கு அனுப்பினால் உதவி ஆசிரியர் மெசேஜ் அனுப்பி இதுமாதிரி ஜோக்ஸ் வேண்டும் என்று ஹிண்ட்ஸ் கொடுக்கிறார். ஆனால் அவர் கேட்ட மாதிரி அனுப்பிய ஜோக்ஸ் தேர்வாயிற்று இல்லை என்று எதுவும் மெசேஜ் அனுப்பவில்லை! வெள்ள நேரத்தில் நான் அனுப்பிய ஜோக் கட்டாயம் தேர்வாகும் என்று எண்ணியிருந்தேன். இதுவரை பிரசுரம் ஆகவில்லை! வலைப்பூவிலும் வெளியிட முடியாது. நேரம் கடந்துவிட்டது. குமுதத்திற்கு மெயில் அனுப்பினால் சேர்வது கிடையாது என்பது மற்றொரு மைனஸ்.

      Delete
  2. வாழ்த்துகள் நண்பரே!
    வார இதழ், மாத இதழ்களில் பல படைப்புகள் முன்னாளில் படைத்தவன் என்ற முறையிலும்,
    தினமலர் நாளிதழில் பணியாற்றியவன் என்ற முறையிலும் ஒன்றைக்கூற விரும்புகிறேன்.
    பத்திரிகைகளுக்கு அனுப்புவது தனி பதிவுகளாக இருக்கட்டும்.
    மேலும், டைமிங் ஜோக்ஸ் என்றால் அள்ளிக் கொள்வார்கள்.
    இது எனது அனுபவம்.
    மேலும் சிறப்பான பதிவுகள் வெளிவர எனது வாழ்த்துகள்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    எனக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா.. தொடர்ந்து படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமை நண்பரே எமது வாழ்த்துகளும் தொடர்க....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சுரேஷ். ஜோக் மிகவும் அருமை பாராட்டுக்கள்.
    உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்தது உங்களது நகைச்சுவையும் ஹைக்கூ கவிதையும்தான் அதில்தான் உங்கள் திறமைமூழுவதும் அடங்கி இருக்கிறது என நினைக்கிறேன். நீங்கள் எழுதும் நகைச்சுவை அணைத்தையும் ஒரே பதிவில் போடாமல் 2 அல்லது மூன்றாக மட்டும் தினமும் உங்கள் வலைப்பூ தலத்திலும் பேஸ்புக்கிலும் தொடர்ந்து இட்டுவாருங்கள் அதன் பின் நீங்கள் எல்லோரும் அறியக்கூடிய பிரபல நகைசுவையாளராக ஆவீர்கள் என்பது உறுதி அதன் பிறகு பிரபல வார இதழ்கள் உங்களிடமே நேரடியாக தொடர்பு கொண்டு எழுதிதாருங்கள் என்று கேட்பார்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சார், இன்னும் நிரம்ப எழுதி பிரசுரமாகட்டும்.

    ReplyDelete
  7. இனிய வாழ்த்துக்கள் சுரேஷ்! இந்தத்துறையில் [ நகைச்சுவை] திறமையுள்ளவர்கள் மிகக் குறைவு. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்! விரைவில் மிகப்பெரிய பலன் கிட்டும்!!

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் சுரேஷ்! இன்னும் மேலும் மேலும் பல படைப்புகள் வெளிவர வாழ்த்துகள். உங்கள் கவிதைகளைக் கூட அனுப்பலாமே சுரேஷ். அருமையாக எழுதுகின்றீர்கள்..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தளீர் அவர்களே,
    இன்னும் நிறைய எழுதுங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
  10. //இன்றைய வாரமலரில்( சென்னைபதிப்பு) எனது ஜோக்ஸ் ஒன்று வாசகர் பம்பர் பரிசாக 1000 ரூபாய் பரிசுடன் பிரசுரம் ஆகியுள்ளது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!//

    வாழ்த்துக்கள், தளிர்! பிரசுரமானதைத் தாண்டி தங்கள் அயராத முயற்சிக்கு.. பிரசுரமாகாவிட்டாலும் தளராதீர்கள்.. உங்கள் அங்கீகரிப்பில் தான் நீங்கள் வளர்கிறீர்கள்.. இது மட்டும் நினைவில் இருக்கட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2