புத்திசாலி ஆமை
ஒரு ஊர்ல ஒரு குளம் இருந்துச்சு! அந்த குளத்துல நிறைய மீனுங்க சந்தோசமா வாழ்ந்து வந்தது. அந்த மீனுங்களோட ஒரு ஆமையும் அந்த குளத்துல வசிச்சு வந்தது. குளத்துல இருக்கிற மீனை பிடிச்சு தின்ன ஒரு நரி வரும். நரியால எப்படி மீனை பிடிக்க முடியும் அதனாலே தப்பி தவறி குளத்து கரை மேல விழற மீனை நரி பிடிச்சு தின்னும். இத பார்த்த ஆமை நரி மேல பரிதாபப் பட்டு ஒன்றிரண்டு மீன்களை நரிக்கு பிடிச்சு போட்டுச்சு. இதனால நரியும் ஆமையும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க!
   இப்படியே இருக்கும் போது ஒரு ரெண்டு மூணு வருசமா மழையே பெய்யாம ஆறு குளம் எல்லாம் வத்திப் போச்சு. இந்த ஆமை இருந்த குளத்திலேயும் தண்ணி வத்த ஆரம்பிச்சது. அதனால மீனுங்க குறைஞ்சி போயிருச்சு. இனிமே இந்த குளத்துல நாம இருந்தா நம்ம உயிருக்கு ஆபத்துன்னு ஆமைக்கு தோணுச்சு. அப்ப அந்த வழியா ரெண்டு கொக்குங்க வந்துச்சுங்க!
    ஆமை அந்த கொக்குகளை பார்த்து எங்க போறீங்க கொக்குகளா?ன்னு கேட்டுச்சு.
இந்த தண்ணி இல்லா காட்டுல எங்களாலே இருக்க முடியாது. அதான் தண்ணி இருக்கற திசை தேடி பறந்து போறோம்னு கொக்குங்க சொல்லுச்சு. என்னையும் கூட்டிட்டு போறீங்களா?ன்னு ஆமை கேட்டுச்சு.
   உன்னை எப்படி கூட்டிட்டு போக முடியும். உன்னால பறக்க முடியாதே? அப்படின்னு கொக்குங்க சொல்லுச்சு. ஆமை அந்த குளத்து ஓரம் இருந்த ஒரு கழியை கொண்டுவந்து கொக்குங்க கிட்ட கொடுத்து இத நீங்க ரெண்டுபேரும் பிடிச்சு பறந்து போங்க நடுவுல நான் கொம்பை கவ்விக்கிட்டு வந்துடறேன்ன்னு சொல்லுச்சு.
    நல்ல ஐடியாதான்! ஆனா நடுவுல நீ வாயை திறக்க கூடாது! திறந்தா நீ கீழே விழுந்து சாக வேண்டியதுதான்னு சொல்லுச்சு கொக்குங்க! நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க என்று கழியை ஆமை கவ்விக்க அதை ரெண்டுபக்கமும் பிடிச்சு கிட்டு கொக்கு பறந்து போச்சு. ஆமை காவடி டோய்! என்று சிறுவர்கள் கேலி பண்ண அவர்களை திட்ட வேண்டும் போல் இருந்தாலும் ஆமை வாயைத் திறக்க வில்லை!
      அந்த நேரம் பாத்து அந்த பக்கம் ஆமையோட ப்ரெண்ட் நரி வந்து நின்னுச்சு! அட இந்த ஆமை இந்த குளத்தை விட்டு போயிட்டா நமக்கு மீன் யாரு பிடிச்சு தருவாங்க! தண்ணி வத்தனதும் இந்த ஆமையை பிடிச்சு திண்ணலாமே!ன்னு யோசிச்சுது  அது.உடனே அது ஒரு தந்திரம் பண்ணி பாட ஆரம்பிச்சது.
  ஏ கூறு கெட்ட கொக்குகளா?
 கூத்தாடி கொக்குகளா!
 ஒட்டாம உள்ளாமை
உமக்கெதுக்கு நாட்டாமை?
ஆமையை கீழே போட்டா
அஞ்சு ரூபா தந்திடுவேன்!


   நரி இப்படி பாடினதும் ஆமைக்கு கோவம் வந்துடுச்சு! இந்த நரிக்கு எத்தனை மீன் பிடிச்சு கொடுத்திருக்கோம்! கொஞ்சம் கூட நன்றி இல்லாம அஞ்சு ரூபாய்க்கு என்னை பேரம் பேசுதேன்னு நினைச்சிகிட்டு பதில் பாட வாயை திறந்து நன்றி கெட்ட நரியேன்னு வாயை திறந்துச்சு! 

அவ்வளவுதான்  தொப்புன்னு கீழே விழுந்துடுச்சு! நல்ல வேளை கொக்குங்க ரொம்ப உயரம் பறக்கலை அந்த இடம் மணல் பாங்கா இருந்ததாலே சின்ன அடியோட தப்பிச்சிகிட்ட ஆமைக்கு நரி மூலம் தொந்தரவு ஆரம்பிச்சது.

   வேகமா வந்த நரி ஆமையை பிடிச்சது! ஆனா ஆமை அதுக்குள்ள தன் உடம்பை முழுசுமா ஓட்டுக்குள்ள மூடிக்கிச்சு! நரியால ஆமையை கடிக்க முடியலை! எப்படி எப்படியோ முயற்சி பண்ணி பார்த்து  ஒண்ணும் பண்ண முடியாம தவிச்சுது நரி!
   ஆமைக்கு சிரிப்பு தாங்கலை!  கெக்கே!ன்னு சிரிக்க  ஏன் உன்னை கடிக்க முடியலைன்னு ஆமைகிட்டேயே கேட்டுது நரி! நான் வெயில்ல உலர்ந்து போயிருக்கேன் அதனால கடி விழாதுன்னு  சொன்னது ஆமை!
   நரிக்கு நல்ல பசி! எப்படியாவது இந்த ஆமையை சாப்பிட்டனும்னு பக்கத்துல இருந்த ஒரு குட்டைக்கு கொண்டுபோய் ஆமையை நனையறா மாதிரி அழுத்தி பிடிச்சது நரி. கொஞ்ச நேரம் கழிச்சி எடுத்து கடிச்சது. இப்பவும் கடிபடலை! அதுக்கு கோவம் வந்துருச்சு! ஏய் ஆமையே ஏமாத்தறியா! தண்ணில நீ நனைஞ்சும் கடிபடலையேன்னு கேட்டுச்சு நரி.
  நீ எங்க என்னை தண்ணில ஊற விட்ட தரையோட அழுத்தி பிடிச்சுகிட்ட நான் எப்படி ஊறுவேன்! என்று கேட்டது நரி!
  நீ ஓடிப்போயிட்டா என்ன பண்றது?ன்னு கேட்டுச்சு நரி!
 இத்தனை நாளு உனக்கு மீனு பிடிச்சு போட்ட நான் ஓடிப்போயிருவேனா? அப்படின்னு கேட்டுச்சு ஆமை!
 அப்ப நீ சேக்காளியா இருந்தே! அப்படின்னு சொல்லிச்சு நரி!
  இப்ப மட்டும் நான் உனக்கு பகையாளியா! ன்னு கேட்டுச்சு ஆமை!
   நரியாலை பதில் பேச முடியலை! ஆமையை தூக்கி  தண்ணியிலே வீசிட்டு நல்லா ஊறீனதுக்கு அப்புறம் வா! நா இங்கயே நிற்கறேன்னு சொல்லுச்சு!
   உன் கிட்ட வந்து உயிரை விட நான் முட்டாளா என்ன? அப்படின்னு கேட்ட ஆமை தண்ணிக்குள்ள மறைஞ்சி போயிருச்சு! ஏமாந்து நின்னது நரி!

(நாடோடிக் கதைகளில் இருந்து)டிஸ்கி} கணிணி பழுது அடைந்து உள்ளது! (அம்மாபலகை) மதர் போர்ட் ரிப்பேர்! மொபைல் மூலம் பழைய பதிவை மீள்பதிவாக  தந்துள்ளேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அருமையான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 2. ரொம்ப நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. நரித்தந்திரம்...

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா

  கதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 6. ஆஹா அருமை!! நல்ல கதை..

  ReplyDelete
 7. ஆமை தப்பிச்சிருச்சா? புத்திசாலி ஆமைதான். இதை போல் இன்னொரு கதை உண்டல்லவா?

  ReplyDelete
 8. அருமையான கதை சார். எனது 300 வது பதிவான சோளமாவு அல்வாவை ருசிக்க எனது தளத்திற்கு வருகை தாருங்கள்.

  ReplyDelete
 9. கணினியைச் சரி செய்தாச்சா? படித்த கதை என்றாலும் சுவாரசியம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2