ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலி ராஜ்! பகுதி 3.
ரன் எக்ஸ்பிரஸ் ! மிதாலி ராஜ் ! பகுதி 3. உலக்கோப்பை பைனல் ! உலகின் வலிமையான அணியான ஆஸ்திரேலியாவை சந்தித்த்து இந்தியா . இந்தியா எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று எல்லோரும் ஆவலோடு போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் செஞ்சூரியனில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கெரன்ரோல்டன் இந்தியர்களின் கனவை சிதறடித்து சதமடிக்க 215 ரன்களை குவித்து 216 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது . மிகப்பெரும் இலக்கை துரத்திய இந்திய அணி பதட்ட்த்தில் தவறுகளை செய்தது . அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியா துல்லியமாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தியது . இந்தியாவின் பேட்டிங் தூணாக இருந்த மிதாலி எல்பி டபிள்யூ முறையில் வெறும் ஆறு ரன்களுக்கு ஆட்டமிழக்க 117 ரன்களுக்கு ஆட்டமிழந்து உலககோப்பையை இழந்தது இந்தியா . மிதாலியின் கனவு தகர்ந்தது . அந்த போட்டியில் 7 ஆட்டங்களில் 199 ரன்களை எடுத்த மிதாலியின் ஆவ்ரேஜ் 49.75. அதிகபட்ச ரன் 91. நியுசிலாந்துக்கு எதிராக . ஆனாலும் மிதாலி தளர்ந்து போகவில்லை ! உலக கோப்பை ...