Posts

Showing posts from 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56 1.    வெள்ளநிவாரணம் கொடுக்க போன தலைவருக்கே நிவாரணம் தேவைப்படுதாமே ஏன்? நிவாரணப் பொருள்கள்ல கை வச்சிட்டாருன்னு மக்கள் ”ரணப்” படுத்தி அனுப்பிச்சிட்டாங்க! 2.     எங்க தலைவர் பேசினா அப்படியே தெறிக்க விடுவாரு..! என்னது அனலா..! இல்லை எச்சில்…?! 3.    தலைவருக்கு கொஞ்சம் கூட விவரமே பத்தலை   ஏன்..? பீப் சாங் கேட்டீங்களான்னு கேட்டா நமக்கு எப்பவும் மட்டன் தான் பிடிக்கும்னு சொல்றாரே! 4.    உனக்கு அறிவிருக்கா..? அதை விற்கிறதுக்காக உங்ககிட்ட நான் வரலை! 5.    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கஜானாவைத் திறக்க சொன்னேனே என்ன ஆயிற்று? உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறந்து திறந்து இப்போது அது காலியாக இருக்கிறது மன்னா! 6.    அரசியல் களத்துல ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு முன்னேறினவரு எங்க தலைவரு..! அடுத்தவங்களை அடிச்சி அடிச்சியே பின்னுக்கு வந்தவரு எங்க தலைவரு! 7.    அதோ போறாரே அவர் பசையான ஆளு! பெரிய பணக்காரரா? இல்லே கம் தயாரிச்சு விக்கிறாரு! 8.    மழைவெள்ளத்துல சரக்கெல்லாம் அடிச்சிக்கினு போயிருச்சுன்னு புல

இன்றைய வாரமலரில் எனது ஜோக்!

Image
வலைப்பூவில் வாரம் தோறும் ஜோக்ஸ் எழுதி வந்தாலும் வார இதழ்களில் வெளிவரும்போது அதன் மகிழ்ச்சியே தனி. அதுவும் பல லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ள இதழ்களில் நமது படைப்புக்கள் வெளிவரும்போது உற்சாகம் ஊற்றெடுத்து நம்மை ஊக்குவிக்கும். கடந்தமாதத்தில் பாக்யா வார இதழில் எனது சில ஜோக்ஸ் வெளிவந்தும் என்னால் படிக்கவோ பார்க்க முடியவில்லை! எங்கள் பகுதியில் பாக்யாவார இதழ் கிடைக்க வில்லை. நண்பர் பூங்கதிர் அவர்கள் மூலம் வெளிவந்த விஷயம் மட்டுமே அறிய முடிந்தது. இன்று எனது ஜோக் ஒன்று தினமலர்- வ ாரமலரில் பிரசுரம் ஆகியுள்ளது. கடந்தவருடம் ஒன்று வெளிவந்தபின்னர் நான் பத்திரிக்கைகளுக்கு சில ஜோக்ஸ் அனுப்பி வெளிவராமல் சோர்ந்திருந்தேன். ஒன் இண்டியா இணையத்தில் ராஜேஷ்குமார் தொடரை படித்தபோது முதலில் அவரது படைப்புக்களும் வெளிவராமல் திரும்பி வந்ததாகவும் குமுதத்திற்கு நிறைய அனுப்பி வெளிவராததால் சண்டையிட சென்றதாகவும் அவர்கள் குமுதத்திற்கு ஏற்றமாதிரியும் புதுமையாகவும் இருந்தால் கட்டாயம் வெளிவரும் என்றும் சொன்னார்கள். அதன்படி புதுமையாக மும்பையை வைத்து ஒரு கதை எழுதி பிரசுரம் ஆனதாக சொன்னார். ஆனால் அதற்கு முன் அவர் எழ

தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.

Image
தந்திரக்கார மனைவி! பாப்பா மலர். ஓர் ஊரில் ஒரு விவசாயி வசித்து வந்தான். வயலில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவன் உண்டு முடித்து நிலவொளியில் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தான். அப்போது அவர்களுக்கும் ஓர் சர்ச்சை எழுந்தது.அவர்களில் திறமை மிக்கவர் கணவனா மனைவியா என்பது தான் அது.    அந்த சர்ச்சை முற்றி பெண்கள்தான் தந்திரத்தில் வல்லவர்கள், அவர்கள் நினைத்தால் ஆயிரம் தந்திரங்கள் செய்து ஆண்களை வெற்றிக் கொள்ள முடியும் என்றாள் மனைவி.அத்துடன் இல்லாமல் ஆண்கள் எளிதாக ஏமாந்துவிடுவார்கள். உங்கள் நல்ல காலம் இன்னும் உங்களை நான்  தந்திரம் ஏதும் செய்து இதுவரை ஏமாற்றவில்லை என்றாள் அவனது மனைவி.    இதைக்கேட்ட கணவன் மிகுந்த கோபம் கொண்டான். " உங்களுக்கு சமைப்பதை தவிர வேறு என்ன தெரியும்? உங்கள் தந்திரங்களை கண்டு ஏமாற நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நீ வேண்டுமானால் ஆயிரம் தந்திரங்கள் செய்து என்னை ஏமாற்றிக் காட்டு பார்க்கலாம். அப்போது நான் ஒத்துக்கொள்வேன் பெண்கள் புத்திசாலிகள்" என்று சவால் விடுத்தான் கணவன்.    அன்றைய பொழுது விடியும் நேரத்தில் கணவன் எழுந்திருக்கும் முன் எழுந்த அவனது

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்!  பழுத்ததும்  விழுந்தது பழம்!  மாலைச்சூரியன்! மேடுபள்ளம் சமமாக்கியது! மழைவெள்ளம்! வெள்ளப்பெருக்கில் விரைந்து பூத்தது மனிதம்! ஒளி மறையவும் ஊடுருவி விடுகின்றது பனி! சமாதான தூது வெள்ளைப்போர்வையில்பூமி! காலைப்பனி! கும்மிருட்டு ரசிக்க வைத்தன மின்மினிகள்! சிறகு விரிக்கையில் வெட்டப்படுகின்றன! குழந்தையின் கற்பனைகள்! காரிருள் மறைந்த மரங்கள் வெளிச்சப்படுத்திய மின்மினிகள்!  வண்ணப்பூக்கள் வண்டுகள் மொய்க்கவில்லை! கோலம்! பழுத்தது உண்ண முடியவில்லை! இலை! ஆறுவழிச் சாலைகள் கூறு போட்டன கிராமங்கள்! வீதிகளில் வழிந்தது பால்! விபத்து ஏதும் இல்லை! வான் நிலா! தள்ளி வைக்கப்பட்டது குளிர்! நெருப்பு! அரண்களையும் அணைத்துக் கொண்டது பனி! மாரி மாறி அணைத்ததில் மரணித்தது பூமி! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

சுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா?

Image
சுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா? சென்னைப் பெருமழை செய்த ஒரே நல்ல காரியம் பலகாலமாய் வாங்கி வைத்து வாசிக்காது இருந்த பல நூல்களை என்னை வாசிக்க வைத்தது. அடை மழை! மின்சாரம் இல்லை. அகல் விளக்கொளி அல்லது சிம்னி விளக்கொளியில் நூல்களை வாசிப்பது என்பது ஓர் சுகானுபவம்.   சின்ன வயதில் ஆசானபூதூரில் படிக்கையில் பாடங்களை சிம்னி விளக்கொளியில் படித்து இருக்கிறேன். அதே போல மின்சாரம் இல்லா சமயங்களில் நத்தத்திலும் பாடங்களோ இல்லை கதைப் புத்தகங்களோ படித்து இருக்கிறேன். மழைக்காலத்தில் மழையின் பேரிரைச்சல் தவளைகளின் சத்தம் அந்தகாரமான இருட்டில் ஓர் அறையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் சிறு விளக்கொளியில் இரவு விழித்து இருந்து கதை படிப்பது அதுவும் சுஜாதாவின் இந்த அமானுஷ்யம் கலந்த நாவலை படிப்பது செம திரில்!       இந்த நாவல் 90களில் தொலைக்காட்சி தொடராகவும் வந்து இருக்கிறது. பகல்பொழுதில் ஒளிபரப்பானது. பல எபிசோட்கள் மின்சாரம் தடைபட்டு பார்க்க முடியாமல் போனது. இறுதிப்பகுதியும் அப்படித்தான் பார்க்க முடியவில்லை. அது மிகவும் குறையாகவே இருந்தது. சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியில்  இந்த நாவலை வ

மொக்க ஜோக்ஸ்!

Image
கூட்டணியை வலுப்படுத்துங்கன்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டாரு போல! ஏன் என்ன ஆச்சு? ஒரு டன் இரும்பு கம்பிக்கு ஆர்டர் கொடுத்து இருக்காரே! தலைவருக்கு பொது அறிவு சுத்தமா இல்லை!      ஏன்?   நெட்ல 300 எம்.பி ஃபிரின்னு சொன்னா உடனே வாங்கு செண்ட்ரல்ல ஆட்சியை பிடிச்சிடலாம்னு சொல்றாரே! மன்னருக்கு போர்க்களம் என்றால் மிகவும் விருப்பமாமே? ஆமாம்! அந்தப்புரத்தை விட அங்கு அடி கம்மியாக அல்லவா விழுகிறது! அந்த டாக்டர் கிண்டல்பேர்வழின்னு எப்படி சொல்றே? தலைவலி பின்னியெடுக்குது டாக்டர்னு சொன்னா ஏன் கொண்டை போட்டுவிடலையான்னு கேக்கறாரே! அரசியல்வாதியோட பொண்ணை காதலிச்சியே என்ன ஆச்சு? கூட்டணியிலே முறிவு ஏற்பட்டு போச்சு! பணவீக்கம் அதிகரிச்சு போச்சுங்கிறதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்! அப்புறம்? பேங்கில பணம் கொடுக்கும்போது கூடவே ஒரு தைல புட்டியும் தரனும்னு அறிக்கை விட்டிருக்கார்! அந்த ஜூஸ் கடையில என்ன தகறாரு? பழரசம்னு சொல்றீங்களே! ரசம் இருக்கு பழம் எங்கேன்னு கேட்டு அடம்பிடிக்கிறாராம் ஒருத்தரு! கடையெல்லாம் கலைச்சுப் போட்டப்புறம்தான் கிடைச்சுது! எ

புத்திசாலி ஆமை

Image
ஒரு ஊர்ல ஒரு குளம் இருந்துச்சு! அந்த குளத்துல நிறைய மீனுங்க சந்தோசமா வாழ்ந்து வந்தது. அந்த மீனுங்களோட ஒரு ஆமையும் அந்த குளத்துல வசிச்சு வந்தது. குளத்துல இருக்கிற மீனை பிடிச்சு தின்ன ஒரு நரி வரும். நரியால எப்படி மீனை பிடிக்க முடியும் அதனாலே தப்பி தவறி குளத்து கரை மேல விழற மீனை நரி பிடிச்சு தின்னும். இத பார்த்த ஆமை நரி மேல பரிதாபப் பட்டு ஒன்றிரண்டு மீன்களை நரிக்கு பிடிச்சு போட்டுச்சு. இதனால நரியும் ஆமையும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க!    இப்படியே இருக்கும் போது ஒரு ரெண்டு மூணு வருசமா மழையே பெய்யாம ஆறு குளம் எல்லாம் வத்திப் போச்சு. இந்த ஆமை இருந்த குளத்திலேயும் தண்ணி வத்த ஆரம்பிச்சது. அதனால மீனுங்க குறைஞ்சி போயிருச்சு. இனிமே இந்த குளத்துல நாம இருந்தா நம்ம உயிருக்கு ஆபத்துன்னு ஆமைக்கு தோணுச்சு. அப்ப அந்த வழியா ரெண்டு கொக்குங்க வந்துச்சுங்க!     ஆமை அந்த கொக்குகளை பார்த்து எங்க போறீங்க கொக்குகளா?ன்னு கேட்டுச்சு. இந்த தண்ணி இல்லா காட்டுல எங்களாலே இருக்க முடியாது. அதான் தண்ணி இருக்கற திசை தேடி பறந்து போறோம்னு கொக்குங்க சொல்லுச்சு. என்னையும் கூட்டிட்டு போறீங்களா?ன்னு ஆமை கேட்டுச்சு.    உன்னை

தக்காளியால் தவித்த கதை!

நேற்று வீடுதிரும்பல் மோகன் குமார் ஒரு நல்ல ஆசிரியையைப் பற்றி பதிவிட்டு இருந்தார். இப்படி பல நல்ல ஆசிரியர்கள் பல மாணவர்களை உருவாக்கி வருகின்றனர். சிலர் விதிவிலக்காக ஏதோ கடமைக்கு பணியாற்றி சென்று விடுகின்றனர். நான் படித்த போதும் இப்படி சில நல்லாசிரியர்களும் சில கடமைக்கு பணியாற்றுபவர்களும் இருந்தனர். இது ஒரு டீச்சரிடம் நான் மாட்டிக்கொண்டு தவித்த கதை!      அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆசான பூதூரில் இருந்து   வயல் வரப்புகளில் நடந்து பெரும்பேடு வரவேண்டும். அங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி இருந்தது. அது அப்போதுதான் நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக மாறியிருந்தது. நடுநிலைப்பள்ளியில் இருந்த சிலர் அப்படியே உயர்நிலைப்பள்ளியிலும் பணியாற்றினார்கள். சிலர் புதிய ஆசிரியர்களாக வந்தனர். ஆனால் நானே அந்த பள்ளிக்கு புதுசு. ஐந்தாம் வகுப்பு வரை ஆசானபூதூர் ஆரம்ப பள்ளியில் படித்து விட்டு ஆறாம் வகுப்பிற்கு பெரும்பேடு வந்தவன் நான்.     எப்படியோ ஆறாம் வகுப்பை முடித்து ஏழாம் வகுப்பினுள் நுழைந்தேன். அதுவரை ஆறாம் வகுப்பு வரை அறிவியல் ஆசிரியராக இருந்தவர் மாறி ஒரு பு