Posts

Showing posts from June, 2015

இந்திக்காரன் எடுத்த வாந்தி!

Image
சென்ற சனிக்கிழமையன்று சென்னைக்கு பிரயாணம் செய்யும் பாக்கியம் வாய்த்தது எனக்கு. திருமணமாகி பத்துவருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தங்கை ஆண் மகவை வெள்ளியன்று பெற்றெடுத்ததால் மாமா ஆனேன். மருமகனைப் பார்க்க சென்னை பயணம்.    முன்பெல்லாம் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு செல்ல அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்கள் பிடிக்கும். மாலை டிராபிக் நெரிசல் என்றால் கூட ஒன்றேகால் மணிநேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம். இது நான் சென்னைக்கு பேருந்து ஏறும் இடத்தில் இருந்து பாரிமுனை சென்றடைய ஆகும் நேரமாகும்.    ஆனால் இப்போதெல்லாம் இரண்டரை மணிமுதல் மூன்று மணிநேரம்வரை சென்னை செல்ல நேரம்செலவிட வேண்டியதாகின்றது. சென்னை மாநகரமும் முன்பைவிட நெரிசல் அதிகமாகி சாலைகள் குறுகிப்போய் கிடக்கின்றது.    முன் தினமே அடையாறு மலர் மருத்துவமனைக்கு சென்று வந்திருந்த என் தந்தை சொன்னார் 50 ரூபாய் டிக்கெட் தான் பெஸ்ட் என்று. காலையில் கிளம்ப முடியவில்லை! பதினோறு மணி அளவில் கிளம்பி வண்டியை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு பெரியபாளையம் கூட்டுரோட்டில் மெக்கானிக்கையே டிராப் செய்ய சொல்லி இறங்கியபோது மணி 11.45.

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
1.இறங்கிவராவிட்டால் ஏறிவிடுகிறது விலைவாசி! மழை! 2.சவலையான பூமி! பெய்ய வில்லை! மழை! 3.குளிரெடுத்த மேகத்தால் குளிர்ந்துபோனது பூமி! மழை! 4.விதைத்தவன் சும்மா இருக்க அறுவடை செய்தது பூமி! மழை! 5.கடல்நீரை குடிநீராக்கியது மழை! 6.மேகப்பூக்கள் பூத்ததும் மணத்தது மண்! மழைத்தூறல்! 7.மிதிபட்டதும் ஓலமிட்டன! சருகுகள்! 8.உதிரும்வரை இறகானது! உதிர்ந்தபின் உரமானது! சருகுகள்! 9.பூத்துக் கொட்டியது பொறுக்கமுடியவில்லை! மத்தாப்பூ! 10.கால் ஒடிந்ததும் தூக்கி வீசினார்கள்! நாற்காலி! 11.மண்சோறு படைத்தது நிறைவில் கடவுள்! குழந்தை!  12. மறைத்துக்கொண்டது   நீர்!   ஆழம்!  13. இலைகள்    அசைகையில் பிறந்தது    காற்று!  14. கற்பனைச்சிறகுகள்!   கட்டிவைக்கிறது தொலைக்காட்சி!   குழந்தைகள்!  15. குழந்தைக்கு சோறுட்டுகையில்     குழந்தையாகிறாள்     அம்மா!   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12

Image
விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12 இன்று யாராவது ஒரு பத்து ரூபாய் கொடுத்துவிட்டால் போதும் வள்ளல் என்றும் கொடையாளர் என்றும் பாரி என்றும் பலவிதமாக துதி பாடுகின்றனர்.  அன்றும் புலவர்களுக்கு கொடையளித்த பல புரவலர்கள் புகழ்ச்சியை விரும்பினர் புலவர்களும் புரவலர்களை விதவிதமாக புகழ்ந்து பாடி அவர்களை மகிழ்வித்து கொடை பெற்று மகிழ்ந்தனர். இவ்விதம் புகழ்கையில் அப்புலவர்களின் தமிழ் அறிவு மட்டும் இன்றி புரவலர்களின் தமிழ் அறிவும் நம்மால் அறிய முடிகின்றது. பொருத்தமானவரை பற்றியே புகழ்ந்தார்களே அன்றி எல்லோரையும் புகழவில்லை.    துரிதகவி திருமலைக் கொழுந்து கவிராயர் என்று ஒருவர். அவரை ஆதரித்த வள்ளல் விநாயக வள்ளல். விநாயக வள்ளலைப் பாடி சிறப்பித்துள்ளார் இந்த கவிராயர். விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தைப் பற்றியும்  பாடுகின்றார். சிவபெருமான், முருகன் போன்றோருக்கு பல கண்கள் உண்டானது இந்த விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தின் அழகை  பார்க்கவே என்று உயர்வு நவிற்சியில் சிறப்பிக்கின்றார். விநாயக வள்ளலை  கர்ணன், பாரி, காரி என்றெல்லாம் சிறப்பிக்க முடியாது. அவர் ஓர் தியாகி என்று சொல்லுகி

ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!

Image
ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்! அலங்காபுரி என்ற நாட்டின் ராணி நகைமுத்து. பெயருக்கேற்றார்போல நகைகள் அணிவதில் அளவற்ற ஆசை கொண்டவளாக இருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்களாக பொன், வெள்ளி, நவரத்தினங்களாக சூடிக்கொண்டு தன்னை அலங்காரம் செய்துகொள்வாள் அந்த ராணி.    ஒரு சமயம் அரண்மனை நந்தவனத்து தோட்டத்தில் உள்ள குளத்தில் நீராடச் சென்றாள் நகைமுத்து. அப்போது தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றிவைத்துவிட்டு நீராடினாள். நீராடி முடித்து கரை ஏறியதும் மீண்டும் ஆபரணங்களை அணியத் துவங்கினால் முத்து மாலை ஒன்றைக் காணவில்லை. அரசிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சேடிகள் நாலாபுறமும் தேடியும் முத்து மாலை கிடைக்கவில்லை. மாயமாக மறைந்த அந்த முத்து மாலையைத் தேடச்சொல்லி கணவனான ராஜாவிடம் சொன்னாள்.       அந்த ராஜாவும் மனைவியின் சொல்லைத் தட்டாது காவலர்களை அனுப்பி முத்துமாலையைத் தேடச்சொன்னார். காவலர்கள் ஊரெல்லாம் அலசி தேடினர். கிடைத்தபாடில்லை.அப்போது ஓர் வழிப்போக்கன் காவலர்களை கண்டு மிரண்டு ஓடினான். அவன் தான் முத்துமாலையை எடுத்திருக்க வேண்டும் என்றெண்ணி அவனை பிடித்து மிரட்டினர் காவலர்கள்.    வழிப்ப

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39 1.    உங்க பெண்ணோட கவுரவம் மூழ்கிப் போயிரப்போவுது மாமா வந்து காப்பாத்துங்கன்னு மாப்பிள்ளை சொன்ன போது புரியலை போனப்புறம்தான் புரிஞ்சிது!   என்ன ஆச்சு? பொண்ணோட நகை எல்லாத்தையும் அடகுவைச்சு மூழ்கி போற ஸ்டேஜ்ல இருக்குது! 2.    தலைவருக்கு மருத்துவ அறிவு கம்மின்னு எப்படி சொல்றே? டாக்டர் உங்களுக்கு சுகர் கம்ப்ளைண்ட் இருக்குன்னு சொன்னதும் யாரு அவன் சுகர் எம்மேல கம்ப்ளைண்ட் கொடுக்க எவ்வளவு தைரியம்னு கேக்கறாரு! 3.    வீட்டுக்கு வந்த திருடன் உங்க பெண்டாட்டியை மிரட்டறதை பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தீங்க? நம்மளாலே முடியாததை மத்தவங்க செய்யறப்ப ஏற்படற ஒரு சின்ன சந்தோஷத்துல திகைச்சு நின்னுட்டேன் சார்! 4.    மாப்பிள்ளைக்கூட நெருங்கிப் பழக முடியலைன்னு சொல்றீங்களே என்ன காரணம்? அவர் கொஞ்சம் “தூரத்து உறவா” போயிட்டாரே! 5.    இந்த படத்தோட கதையை திருடி எடுத்திருக்கேன்னு ஒருத்தன் வந்து நிற்க முடியாது!   எப்படி? பலரோட கதைகளை உருவி எடுத்திருக்கேனே! 6.    தலைவர் எதுக்கு இப்ப நூறு லிட்டர் பெவிக்காலுக்கு ஆர்டர் கொடுக்க சொல்றாரு? கட்

தோனி விலக வேண்டுமா? கதம்ப சோறு! பகுதி 62

Image
கதம்ப சோறு! பகுதி 62 மேகியைத் தொடர்ந்து காம்ப்ளான்!          மேகிநூடுல்ஸில் தீங்கு விளைவிக்கும் பொருள் இருக்கிறது என்று தடைசெய்யப்பட்டது விற்பனைக்கு வைத்திருந்த பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டது. இத்தனை நாள் சும்மா இருந்த சுகாதாரத்துறை திடீரென விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றது. இதில் என்னென்ன உள்குத்துக்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதைத்தொடர்ந்து இப்போது உ.பி யில் ஒருவர் வாங்கிய காம்ப்ளான் பவுடரில் புழுக்கள் நெளிந்தது என்று பகீர் பட வைக்கின்றார். அதே போல குளுக்கான் டி யிலும் புழுக்கள் இருந்தது அதையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் ஒருவர். பையில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவுமே பாதுகாப்பானது அல்ல என்ற ஓர் விழிப்புணர்வு இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது அந்த வகையில் இந்த சம்பவங்கள் நல்லதுதான். அதே சமயம் இந்தப் பொருள் உடல்நலனுக்கு தீங்கானது என்று பாக்கெட்டில் பொறித்துவிட்டு விஷத்தைக் கூட விற்றுக் கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் வினோதமானது. சிகரெட், பீடி, குட்கா, பான், சாராயம் போன்றவை இந்தியச் சந்தையில் பொருளாதார அளவில் பெரிய இடத்தை பிடித்துள்ளன. இவற்றை

பாடம்! சிறுகதை!

Image
பாடம்         டிகிரி முடித்து வேலைக்கு அலைந்த்து அலைந்து கால்கள் கூட தேய்ந்து விட்டது ஆனால் வேலைதான் கிடைத்தபாடில்லை. வேலைக்குச் செல்பவர்களை கண்டு பொறாமைப்படத்தான் முடிந்ததே தவிர வேலைக்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை!. இன்னும் எத்தனை நாள்தான் வீட்டில் இண்டர்வியுவிற்கும் அப்ளிகேசன் போடவும் காசு கேட்டுக் கொண்டிருப்பது. வெளியில் சென்றால் பார்ப்பவர்களின் பார்வையே நக்கலாக தென்பட்டது கணேஷிற்கு.    இன்று கூட கம்பெனி ஒன்றிர்கு இண்டர்வியுவிற்கு போய் ஏமாந்து திரும்பினான். நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்தவர்கள் எம்.எல்.ஏ சிபாரிசோடு வந்தவனுக்கு வேலைக் கொடுத்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள். ச்சே இதென்ன பிழைப்பு ஃபைலை தூக்கிக் கொண்டு வேலை கிடைக்குமா என்று அலைந்து கொண்டு அனைவரும் கேலியாக பார்க்கிறார்கள்.  இன்று தான் கடைசி. இனி வேலை தானே கிடைத்தால் கிடைக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்! நாமாக அலைந்தால் கிடைக்கவில்லையே தாமாக எங்கே கிடைக்கப்போகிறது? என்று சிந்திக்காமல் சலித்துக் கொண்டான் கணேஷ்.      அப்போது ராமசாமி தாத்தா எங்கோ சென்று திரும்புவதை பார்த்து