தளிர் ஹைக்கூ கவிதைகள்!
1.இறங்கிவராவிட்டால்
ஏறிவிடுகிறது
விலைவாசி!
2.சவலையான
பூமி!
பெய்ய வில்லை!
மழை!
3.குளிரெடுத்த
மேகத்தால்
குளிர்ந்துபோனது
பூமி!
மழை!
4.விதைத்தவன்
சும்மா இருக்க
அறுவடை
செய்தது பூமி!
மழை!
5.கடல்நீரை
குடிநீராக்கியது
மழை!
6.மேகப்பூக்கள்
பூத்ததும்
மணத்தது மண்!
மழைத்தூறல்!
7.மிதிபட்டதும்
ஓலமிட்டன!
சருகுகள்!
8.உதிரும்வரை
இறகானது!
உதிர்ந்தபின்
உரமானது!
சருகுகள்!
9.பூத்துக்
கொட்டியது
பொறுக்கமுடியவில்லை!
மத்தாப்பூ!
10.கால்
ஒடிந்ததும்
தூக்கி
வீசினார்கள்!
நாற்காலி!
11.மண்சோறு
படைத்தது
நிறைவில்
கடவுள்!
குழந்தை!
12. மறைத்துக்கொண்டது
நீர்!
ஆழம்!
13. இலைகள்
அசைகையில் பிறந்தது
காற்று!
14. கற்பனைச்சிறகுகள்!
கட்டிவைக்கிறது தொலைக்காட்சி!
குழந்தைகள்!
15. குழந்தைக்கு சோறுட்டுகையில்
குழந்தையாகிறாள்
அம்மா!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
மத்தாப்பூக்களை ரசித்தேன்...
ReplyDeleteகொஞ்சம் கவிதை, அவ்வப்போது கொஞ்சம் சிரிப்பு. தங்களின் பாணி அருமை.
ReplyDelete.//கடல்நீரை
ReplyDeleteகுடிநீராக்கியது
மழை!//
அட்டகாசம்
அருமை நண்பரே
ReplyDeleteஅனைத்துமே அருமை நண்பரே. பாராட்டுகள்.
ReplyDelete//மத்தாப்பு //
ReplyDeleteஅருமை..
அனைத்துமே அ;ருமை....அதுவும் இறுதி குழந்தைக்கு சோறுட்டுகையில்
ReplyDeleteகுழந்தையாகிறாள்
அம்மா!// ஹைலைட்....
மணம் வீசும் நந்தவனப் பூக்களை ரசித்தேன் :)
ReplyDelete