கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39


1.   உங்க பெண்ணோட கவுரவம் மூழ்கிப் போயிரப்போவுது மாமா வந்து காப்பாத்துங்கன்னு மாப்பிள்ளை சொன்ன போது புரியலை போனப்புறம்தான் புரிஞ்சிது!
  என்ன ஆச்சு?
பொண்ணோட நகை எல்லாத்தையும் அடகுவைச்சு மூழ்கி போற ஸ்டேஜ்ல இருக்குது!

2.   தலைவருக்கு மருத்துவ அறிவு கம்மின்னு எப்படி சொல்றே?
டாக்டர் உங்களுக்கு சுகர் கம்ப்ளைண்ட் இருக்குன்னு சொன்னதும் யாரு அவன் சுகர் எம்மேல கம்ப்ளைண்ட் கொடுக்க எவ்வளவு தைரியம்னு கேக்கறாரு!

3.   வீட்டுக்கு வந்த திருடன் உங்க பெண்டாட்டியை மிரட்டறதை பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தீங்க?
நம்மளாலே முடியாததை மத்தவங்க செய்யறப்ப ஏற்படற ஒரு சின்ன சந்தோஷத்துல திகைச்சு நின்னுட்டேன் சார்!

4.   மாப்பிள்ளைக்கூட நெருங்கிப் பழக முடியலைன்னு சொல்றீங்களே என்ன காரணம்?
அவர் கொஞ்சம் “தூரத்து உறவா” போயிட்டாரே!


5.   இந்த படத்தோட கதையை திருடி எடுத்திருக்கேன்னு ஒருத்தன் வந்து நிற்க முடியாது!
  எப்படி?
பலரோட கதைகளை உருவி எடுத்திருக்கேனே!

6.   தலைவர் எதுக்கு இப்ப நூறு லிட்டர் பெவிக்காலுக்கு ஆர்டர் கொடுக்க சொல்றாரு?
கட்சியில பிளவு அதிகம் ஆயிருச்சாம்! ஒட்டிவைக்க பார்க்காராம்!

7.   மன்னர் வேட்டைக்கு போனபோது சேடிகளோடு சொக்கட்டான் ஆடியது ராணிக்குத் தெரிந்துவிட்டதாம்!
அப்புறம்!
அந்தப்புரத்தில் ராணி பல்லாங்குழி ஆடிவிட்டாராம்!

8.   அந்தக் ஸ்விட் கடையில கூட்டம் மொய்க்கும்னு சொன்னாங்க ஒண்ணும் காணோமே!
நல்லா பாருங்க! எல்லா ஸ்விட்லயும் எறும்பு மொய்க்கும்! அதைத்தான் சொல்லியிருப்பாங்க!

9.   வரவர நம்ம தலைவர் எதுக்கு அறிக்கை விடறதுங்கிறதுக்கு விவஸ்தை இல்லாம போயிருச்சு!
என்ன செய்தாரு?
குளிர்கால கூட்டத்தொடர்ல கலந்துக்கிற எம்.பிக் களுக்கு இலவசமா ஸ்வெட்டர் வழங்கனும்னு அறிக்கை விடறாரு!


10.  தரகரே! பையன்  ஒரு இடத்திலே ஸ்டெடியா நிக்க மாட்டான்னு சொல்றீங்களே! குடிப்பாரா?
நீங்க வேற! பையன் பஸ் கண்டக்டரா இருக்கான்றதைத்தான் அப்படி சொன்னேன்!

11. மன்னர் ஏன் வாயில் காப்போனை முறைக்கின்றார்?
புவனாதிபதி என்று சொல்லுவதற்கு பதில் வாய் குழறி புண்ணாதிபதி என்று உளறி விட்டானாம்!

12. வங்கியிலே போய் பயிர் கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டாங்களா ஏன்?
  நான் அரைபடி பாசிப்பயிரு இல்ல கடனா கேட்டேன்!

13. சேனலை மாத்தி மாத்தி சீரியல்களை பார்க்கிறியே எப்படி கதை புரியும்?
எல்லா சீரியலும் ஒரே  கதையத்தானே எடுக்கிறாங்க! என்ன ஆக்டர்ஸ் மாறி நடிக்கிறாங்க அவ்வளவுதான்!


14. அந்தப் புரத்தில் நுழைந்த எதிரியை அரசர் மன்னித்துவிட்டாராமே!
ஆம்! அந்த தண்டணை ஒன்றே போதும் என்று விட்டுவிட்டாராம்!

15. காது குத்துவிழாவிற்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு!
  ஏன்?
புதுசா தானும் கடுக்கண் போட்டுக்கணும்னு ஆசைப்படறாரே!

16. அந்த டீக்கடை ஓனர் ஓர் முன்னாள் கவர்ச்சி நடிகைன்னு எப்படி சொல்றே?
ஆடையே இல்லாம டீ தர்றாங்களே!

17. தலைவர் தள்ளாமையினாலே அவதிப்படறாருன்னு சொல்றியே அப்படி ஒண்ணும் வயசாயிடலையே!
அவருடைய கார் அடிக்கடி நின்னு போயிடறது இறங்கி தள்ள ஆளில்லைன்னு சொன்னேன்!


18. அவரு இந்த ஆஸ்பத்திரியிலே சேரும் போது கோடீஸ்வரனா இருந்தார்!
  இப்ப எப்படி இருக்கார்!
லட்சாதிபதியா ஆயிட்டார்!

19. தலைவர் அடிச்ச பல்டியிலே நீதிபதி அசந்துட்டாரா எப்படி?
சொத்தே இல்லாம வந்து இவ்ளோ சொத்தை எப்படி சேர்த்தீங்கன்னு கேட்டதுக்கு சொத்தை இல்லாமத்தான் வந்தேன் ஆனா இப்போ பல்லுப்பூரா சொத்தையா ஆயிருக்கே அப்படித்தான்னு சொல்றாரு!

20. நம்ம ராப்பிச்சைக்கு ரொம்பவுந்தான் திமிரு அதிகமா போயிருச்சு!
ஏன் என்ன ஆச்சு?
சாப்பாடு ஒருமாதிரி இருக்கே இன்னிக்கு உங்க வீட்டுக்காரு சமைக்கலையான்னு கேக்கறான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. சிரித்தேன்
  ரசித்தேன்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 2. அனைத்தும் கலகல...

  சும்மாவே இருந்தது - ஹா... ஹா... ரொம்பவே குறும்பு - உங்களுக்கு...!

  ReplyDelete
 3. ரசித்து நன்றாய்ச் சிரித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வணக்கம்,
  ஆடை இல்லா டீ,
  நல்ல வேள கடுக்கண், அவரு பாட்டுக்க தாலி,
  முதல் இருந்து அனைத்தும் கலக்கல்,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
 5. சூப்பர் ,இத்தனை பதிவுகளை நானாய் இருந்திருந்தால் இருபது நாள் தேற்றி இருப்பேன் !

  ReplyDelete
 6. நகைச்சுவைகளை படித்ததும் மிக நன்றாக சிரிப்பு வந்தது ஆனால் நீங்கள் கொஞ்சமாக சிரியுங்கள் என்று சொன்னதால் சிரிப்பை அடிக்கி கொஞ்சமாக சிரித்தேன்

  ReplyDelete
 7. மிகவும் ரசித்தோம் சுரெஷ்! அருமை அனைத்தும்....

  ReplyDelete
 8. அனைத்தும் சூப்பர் ஹா ஹா .ரொம்பவே ரசித்தேன். ....நன்றி நன்றி !

  ReplyDelete
 9. அனைத்தையும் ரசித்தேன் நண்பரே... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 10. அனைத்தும் மிக அருமை. தொகுப்பாகத் தொடர்ந்து தரும் தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!