தளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர்
சென்ரியு கவிதைகள்!
காந்தி தேசம்
ஆனது
காணாமல் போனது
காந்தீயம்!
சிக்கலான
உணவு!
சிக்கிக்கொண்டது!
நூடுல்ஸ்!
வழிகாட்ட
வேண்டியவர்
வழிதவறி
போனார்!
டிராபிக்
ராமசாமி!
வர்ணஜொலிப்பில்
ஆறுகள்!
இருண்டுபோனது
விவசாயம்!
சாயக்கழிவுகள்!
வாழ்க்கைத்
தரம் உயர்கையில்
தாழ்ந்து
போனது தராதரம்!
இலவசப்
பொருட்கள்!
இலவசமாய்
கொடுத்தும்
ஏற்க ஆளில்லை!
அரசுப்பள்ளிகள்!
நகரைச்
சுற்றிவந்தன சாலைகள்
நலிந்து போனது
விவசாயம்!
துரிதமாய்
புகுந்த நோய்கள்
துவக்கிவைத்தன
துரித
உணவுகள்!
பழுக்க
வைத்தார்கள்
கரைந்துபோனது
பணம்!
கல் வைத்த
பழங்கள்!
கல்வைத்தார்கள்
பொலிவிழந்தது
உடல்
பழங்கள்!
குளிரூட்டிக்கொண்டிருந்தது
குளிர்விப்பான்
உயர்ந்து கொண்டிருந்தது
பூமியின்
வெப்பம்!
மலைப்பாம்புகளிடம்
சிக்கி
மரணம்
அடைகின்றன
அரசுப்பள்ளிகள்!
காலம்காட்டும்
கைபேசிகள்
கைவிட்டுப்போயின
கடிகாரங்கள்!
ரெண்டாம்
கல்யாணம்
சந்தோஷத்தில்
மாப்பிள்ளை!
இடைத்தேர்தல்!
சுமை
இறக்கியும்
பாரம்
சுமக்கின்றன
அரசுப்பேருந்துகள்!
ஆடு
தாண்டிவிட்டது!
ஆறு
தாண்டவில்லை!
மேகதாது அணை!
புதுமாப்பிள்ளை வர
பொசுங்கினர் பழைய மாப்பிள்ளைகள்!
இடைத்தேர்தல்!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
வணக்கம்
ReplyDeleteஐயா
ஒவ்வொரு புதிரும் அருமையாக உள்ளது படித்து இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்! புதிராய் எழுதுவதால் புதிர் என்று பொருள் கொண்டுவிட்டீர்களா? நன்றி!
Deleteஅனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துகள்.
ReplyDeleteகைக்கூ மணக்குது கவிதை - நல்ல
ReplyDeleteகருத்தைத் தெளிக்குது வரிகள்
மொக்குளே வாழ்வெனும் உண்மை - இந்த
மூவரிப் பாட்டுக்கும் செழுமை !
அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நீண்டநாளுக்குப்பின் வருகை தந்திருக்கும் நண்பருக்கு நன்றி!
Deleteவிவசாயம், அரசுப்பள்ளிகள், கடிகாரங்கள் என அனைத்தும் உண்மைகள்...
ReplyDeleteநன்றி நண்பரே!உண்மைகளைத்தான் இன்றைக்கு கவிதையாக வடிக்க வேண்டிய நிலையாகிவிட்டது!
Deleteஅனைத்தும் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஇன்றைய சமுக சீர்கேடுகளை சுட்டிக்காட்டும் சீர்மிகு வரிகள் :)
ReplyDeleteஎப்படிப் பாராட்டுவேன் அத்தனையும் முத்துக்களே. வாழ்த்துக்கள் தொடர !
ReplyDeleteஇப்போ எல்லாம் என் பக்கம் காணமுடியலையே.
சிறிது காலம் வலைப்பக்கம் வரவில்லை! கடந்த மே 21 முதல் ஜூன் 8வரை வலைப்பக்கம் வராததால் சில பதிவுகள் என் கண்ணில் படாமல் போயிருக்கலாம். இதைத் தவிர எந்த காரணமும் இல்லை சகோதரி! பதிவுகளை வந்து பார்க்கின்றேன்! நன்றி!
Deleteநாம் அந்நியப்பட்டு போவதையும் அதனால் வரும் விளைவுகளையும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteதொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteமழைக்காலம்
ReplyDeleteதுளிர்த்தது
தளிர்
அனைத்தும் அருமை
தொடருங்கள்
--
Jayakumar
வெயிலிலும் வதங்காது இருக்கவே முயற்சிக்கிறது! பின்னூட்ட ஊற்றிருப்பதால்! நன்றி!
Delete//இலவசமாய் கொடுத்தும்
ReplyDeleteஏற்க ஆளில்லை!
அரசுப்பள்ளிகள்!//
எல்லாமே அருமை. ஆனாலும் இந்த வரிகள் மிகவும் சிந்திக்க வைத்தன.
நன்றி நண்பரே! தங்கள் தளத்திற்கு வந்து பார்க்கிறேன்!
Deleteதளிர் கனியாகி இனிக்கிறது.
ReplyDeleteதொடர்கிறேன்.