கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 37


1.   அவர் ரொம்பவும் சிக்கல்ல இருக்கிறாருன்னு சொல்றியே என்ன பண்றார்?
நூடுல்ஸ் வியாபாரம் பண்றாரு!

2.   இடைத்தேர்தல்ல  போட்டியிட வேண்டாம்னு  தலைவர் ஏன் பிடிவாதம் பிடிக்கிறார்?
   இதுவே கட்சிக்கு கடைத் தேர்தலா ஆயிடப்போவுதுன்னு ஒரு பயம்தான்!

3.   கூட்டம் சேர்த்துட்டு அலையறது தலைவருக்கு கொஞ்சம் கூட பிடிக்காது…!
  அதுக்காக கட்சி பொதுக்கூட்டத்துக்கு கூட கூட்டம் சேர்க்காம இருந்தா எப்படி?

4.   மன்னா! எதிரி மன்னன் ஓலை அனுப்பி இருக்கிறான்…!
இன்று நான் முழித்த வேளை சரியில்லை போலிருக்கிறதே மந்திரியாரே!

5.   அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
எல்லா டெஸ்ட்டும் எடுத்த பின்னாடியும் கொஞ்சம் இருங்க மைக் டெஸ்ட் பண்ணனும்னு சொல்றாரே!

6.   எந்த காரணத்துக்காக நீங்க விவாகரத்துக் கேக்கறீங்க?
தினமும் நூடுல்ஸ் பண்ணிப்போட்டு என்னை கொல்ல பாக்கிறார் ஐயா!


7.   வாஸ்து பார்த்து கட்டின வீட்டை ஏன் இடிக்கறீங்க?
நீங்க வேற வாஸ்து பார்த்த நான் கார்பரேஷன் அப்ரூவ்டை பார்க்காம விட்டுட்டேன்!

8.   எப்பக் கேட்டாலும் பையன் மேல படிச்சிக்கிட்டு இருக்கான்னு சொல்றீங்களே! அப்படி என்ன மேல் படிப்பு படிச்சிக்கிட்டே இருக்கார்?
  நீங்க வேற மாடியில நாவல் படிச்சிக்கிட்டு இருக்கான்னு சொல்ல வந்தேன்!

9.   நகை கடை விளம்பரம் வந்தா ஏன் டீவியை ம்யூட் பண்றே?
  இல்லேன்னா இதை கேட்டு என் மனைவி என்னை ம்யூட் பண்ணிடுவாளே!

10.  தலைவர் எதுக்கு இப்போ அரிவாளும் கத்தியுமா கோபத்தோட கிளம்பிட்டு இருக்கார்?
அவரும் தீவிரவாதின்னு கூகுள் சொல்லனுமாம்! அதுக்குத்தான் போராட கிளம்பிட்டார்!

11. சில்லறைத்தனமா நடந்துக்காதீங்கன்னு தலைவர் எதுக்கு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கார்?
பிறந்த நாள் வசூல் உண்டியல்ல நிறைய பேர் சில்லறைகளா போட்டுட்டாங்களாம்!

12.  புலவரே நீர் எழுதிய பாடலில் பிழை இருக்கிறது!
  அதனால் என்ன மன்னவா? நீங்கள் தரும் பொன்னில் கூட மாற்று குறைவாகத்தான் இருக்கிறது!

13. எல்.கே.ஜி படிக்கிற உங்க பையன் ஆட்டோவுல வந்து இறங்கினதும் கூடவே ஒரு டெம்போவுல வந்து ஒரு மூட்டையை இறக்கிட்டு போறாங்களே என்ன அது?
அவனோட பாட புஸ்தகங்கள் நோட்டுக்கள்! ஸ்கூல்ல ஸ்பெஷலா இப்படி ஏற்பாடு பண்ணி இருக்காங்க!

14.  தலைவருக்கு தற்புகழ்ச்சி கொஞ்சம் கூட பிடிக்காது!
அதுக்காக அவரை புகழ்ந்துபேச பத்து பேரை சம்பளம் கொடுத்து வச்சிருக்கறது நல்லா இல்லே!

15.  வீட்டுக்கு விருந்தாளி வரப்ப மட்டும்தான் என் வொய்ஃப் சமைப்பா!
அவ்ளோ மரியாதையா?
நீ வேற அப்பத்தானே அவங்களை சீக்கிரம் விரட்ட முடியும்!


16. மந்திரியாரே போருக்கு புறப்படவேண்டும் சகுனங்கள் சரியாக இருக்கிறதா?
சங்கு ஊதிவிட்டார்கள் மன்னா!

17. டாக்டர் எதுக்கு மூணு விதமான கலர்ல பிரிப்ஸ்கிரிஷன் எழுதிக் கொடுக்கிறார்?
மஞ்சள்கலர் ஆர்டினரி, சிவப்பு கலர் எக்ஸ்ட்ரா ஆர்டினரி, பச்சை கலர் ஸ்பெஷல் அதுக்கு ஏத்த மாதிரி மருந்து பில் இருக்குமாம்!

18. நோயாளியான அம்மாவை எதுக்கு ஆதித்யா சேனல் போட்டு பார்க்கச் சொல்றே?
நீங்கதானே சொன்னீங்க வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டு போகும்னு!

19. மன்னர் எதற்கு எல்லா நாட்டின் வரைபடத்தையும் தன் குடையின் கீழே ஒட்டச் சொல்கின்றார்?
எல்லா நாட்டினையும் தன் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டதாக சொல்லிக்கொள்ள ஓர் அல்ப ஆசைதான்!

20. எதிரியின் வில்லில் இருந்து அம்பு பாய்வதற்குள் மன்னர் பாய்ந்துவிட்டார்…!
அட! அப்புறம்!
அப்புறம் என்ன பாய்ந்துவந்து காலில் விழுந்த மன்னரை எதிரி தூக்கி நிறுத்தி பிழைத்துப்போகச் சொல்லிவிட்டான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அனைத்துமே அதிரடி நகைச்சுவை நண்பரே..

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை. ஆதித்யா சேனல் நகைச்சுவை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
 3. அஹஹாஹ்ஹ் அனைத்தும் அருமை!

  ReplyDelete
 4. நகை ஹைக்கூ இரண்டும் உங்களுக்கு அருமையாக வருகிறது

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2