எடை!
எடை! “என்னங்க! பழைய பேப்பர் நிறைய சேர்ந்து போச்சு! எடைக்கு போடனும்!” என்றாள் மீனாட்சி “சரி சரி! வழக்கமா வர பொன்னுசாமி அண்ணாச்சியை வந்து எடை போட்டு எடுத்துட்டு போக சொல்லறேன்!” ”வேணாங்க! புதுசா ஒரு பையன் வந்து கேட்டுட்டு போயிருக்கான்! கிலோவுக்கு பத்துரூபா தரேன்னு சொன்னான். அண்ணாச்சி 8 ரூபாவுக்குத்தான் எடுத்துப்பாரு! சுளையா ரெண்டு ரூபா கூட வருது! உங்ககிட்டே சொல்லிட்டு போடுவோம்னு நாளைக்கு வா!ன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்! அந்த பையன்கிட்டேயே போட்டுருவோமா?” ”பொண்ணுசாமி அண்ணாச்சி ஏமாத்திற ஆள் கிடையாதே! நியாயமான விலைக்கு எடுத்துக்கிறவர் வேணும்னா அவர்கிட்டேயே இந்த மாதிரி பத்துரூபாய்க்கு எடுத்துக்கறேன்னு சொல்றாங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டு பார்ப்போமே!” என்றேன் நான். ”நீங்கதான் அவரை மெச்சிக்கணும்! காலத்துக்கேற்ப மாத்திக்கணும்! இன்னும் அதே பழைய சைக்கிள் பழைய தராசு எடுத்துட்டு வந்துகிட்டிருக்காரு! புது பையன் எலக்ட்ராணிக் தராசுலே எடை போடறான்! கூடுதலா ரெண்டு ரூபாவும் தரான் அவன்கிட்டே போடாம நீங்க என்னடான்னா அண்ணாச்சிக்கிட்டே கெஞ்சறேன்னு சொல்றீங்க!” மீனாட்சி சிடு