தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
1.
போர்த்துக்கொண்டதும்
போர்வையைத் தேடினார்கள்!
பனி!
2.
அணிந்த
முத்துக்களை
கழற்றிக்கொண்டது சூரியன்!
பனி!
3.
சாய்ந்த
பொழுது!
நிமிர்கிறதுவாழ்க்கை!
நடைபாதைவியாபாரிகள்!
4.
உறவைப்பிரிக்க
போராட்டம்!
பறவையிடம்விளையாடுகிறது காற்று!
தூக்கணாம்குருவிக் கூடு!
5.
சிரித்த
செடிகள்
அழுதுவடிந்தன!
உதிர்ந்த பூக்கள்!
6.
சிதறும்
பண்டங்கள்!
சேதி சொல்லி அழைத்தன!
எறும்புகள்!
7.
தொடர்வண்டி
தடம்புரண்டது
பாதிப்பில்லை
எறும்புகள்!
8.
மறைந்து
போனாலும்
மறையவில்லை!
பாடகரின் குரல்!
9.
ஒரு
நொடியில் வேறு உலகம்
அழைத்துச்செல்கிறது!
குழந்தையின் பேச்சு!
10. பிரித்து வைத்தாலும்
ஒட்டிக்கொள்கிறது
குழந்தைகளிடம் மண்!
11. ஒளிந்த நிலவை
தேடிய நட்சத்திரங்கள்!
அமாவாசை!
12. பெரும் நிசப்தம்!
உணர்த்திவிட்டு சென்றது
பேரொலி!
13. வெளிச்சம் போட்டு காட்டியது
ஒளிர்ந்த விளக்கு!
இருளின் அழகு!
14. தாகம் தீர்ந்ததும்
அணைந்து போனது!
எண்ணெய்விளக்கு!
15. விழுங்கியவுடன்
குளிர்ந்து போனது குளம்!
முழுநிலா!
16. பிய்த்து எறிந்தாலும்
ஒட்டிக்கொள்கின்றன
அழுக்குகள்!
17. தனிமையில் வாடியது
ஒற்றை மரம்!
பொட்டல் காடு!
18. வாழ்த்திய உள்ளங்கள்
மிதிபட்டுக்கொண்டிருந்தன!
வாழ்த்துமடல்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ரஸித்தேன்.
ReplyDeleteஅனைத்தும் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteமிக மிக ஆழமாக யோசிக்கப்பட்டு
ReplyDeleteமிக மிக எளிமையாக சொல்லப்பட்ட
கவிதைகள் அனைத்தும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சிதறும் பண்டங்கள்!
ReplyDeleteசேதி சொல்லி அழைத்தன!
எறும்புகள்!//
எல்லா கவிதைகளும் அருமை.
வாழ்த்துக்கள்.
அருமை தோழர்...
ReplyDeleteஎல்லாம் அருமை. 18 யதார்த்தம்
ReplyDelete