உண்மை பேசிய திருடன்! பாப்பா மலர்!

முன்னொரு காலத்தில் ஒரு  நாட்டில் ஒரு பெரிய திருடன் ஒருவன் வசித்து வந்தான். மிக்ச்  சாதாரணமாக யார் வீட்டிலும் புகுந்து திருடி விடுவான். திருடினாலும் அவனிடம் ஒரு உயர்ந்த குணம் இருந்தது அது பொய் பேசாமை!

இந்த குணம் அவனது தாயால் அவனுக்கு கிட்டியது.
    சிறு வயதில் அவனது தாய் நோய் வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தாள். அப்போது இந்த திருடனை அழைத்தாள். இவனோ அப்போதே பெரிய பெரிய இடங்களில் திருடி கோடீஸ்வரன் ஆகும் எண்ணத்தில் இருந்தான். மகனின் தீய பழக்கம் பிடிக்காத அந்த அன்பு அன்னை, “  மகனே பிறர் பொருளை களவாடுவது குற்றம் இல்லையா? அதை விட்டு விடு உழைத்து பிழை களவாணி என்ற பெயர் பெறாதே! ”என்று அன்போடு அறிவுரை கூறினாள்.

     இளமைத்திமிரில் தாயின் அறிவுரை அவனுக்கு கசந்தது.  “அம்மா! இந்த திருட்டு எனது பிறவிக் குணம். அதை என்னால் விட முடியாது. நான் பல கனவு கண்டு வருகிறேன். அதற்கெல்லாம் திருடாவிட்டால் முடியாது. ஆகவே இதை தவிர்த்து வேறு ஏதாவது கேளேன்!” என்றான் மகன்.

   தன் கடைசி காலத்தில் மகனை திருடனாக விட்டு போகிறோமே என்ற வருத்தத்தில் அந்த தாய்,  “மகனே! நீ திருடிக் கொள்  ஆனால் இனி எக்காரணத்தை கொண்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு! உன் உயிரே போனாலும் பொய் பேசக் கூடாது  இதையாவது எனக்காக செய்வாயா? ”என்றாள்.

   மகனும், “ அம்மா! இனி நான் பொய்யே கூற மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டான். தாயும் இயற்கை எய்தி விட்டாள். அன்று முதல் இவன் பொய் கூறாமல்  விரதம் கடைபிடித்து வந்தான். அவனது  திருட்டு தொழிலுக்கு இது பாதகம் என்றாலும் தாய்க்கு இட்ட சத்தியத்தை அவன் மறக்க வில்லை!

   கோடீஸ்வரனாக வேண்டும் என்ற கனவு அவனை அரண்மனையில் திருடச் சொன்னது. அதனால் அரண்மணைக்கு திருடச் சென்றான். அப்படி செல்லும் போது வழியில் குதிரையில் ஒருவனை சந்தித்தான். அவன் ,”எங்கே போகிறாய் ?”என்று கேட்டான். அன்னைக்கு செய்த  சத்தியத்தால் திருடனும் தான் அரண்மனையில் திருட போவதாக கூறினான்.

    குதிரையில் வந்தவன் அவனிடம், “ அப்படியானால் நானும் வருகிறேன். திருடுவதில் ஆளுக்கு பாதி பிரித்துக் கொள்வோம் !”என்றான். திருடனும் சம்மதித்தான். அரண்மனையை அடைந்த அவர்கள் குதிரையில் வந்தவனை வெளியில் காவலுக்கு வைத்து விட்டு அரண்மனையில் நுழைந்தான். உள்ளே சென்ற திருடன் கஜானாவை உடைத்தான். மூன்று வைரக் கற்கள் இருந்தன. ஆளுக்கு ஒன்றரை என்று கல்லை உடைக்க வேண்டி வருமே என்று ஒன்றை வைத்து விட்டு இரண்டு கற்களை எடுத்து கொண்டு வெளியில் வந்தான்.

  குதிரையில் வந்தவனுக்கு பேச்சுப்படி பாதி பங்கு என ஒரு கல்லை கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டான். மறுநாள் விஷயம் வெளியில் வந்தது. அரண்மனையிலேயே திருட்டா? மந்திரி விசாரிக்க சென்றார். கஜானாவை  சோதனையிட்டார். ஒரு வைரம் இருக்க ஆசை அவரை வென்றது எடுத்து மடியில் கட்டிக் கொண்டார். திருடன் எடுத்து சென்றதாக இருக்கட்டும் என்று நினைத்து கொண்டார். அரசனிடம்  கஜானாவில் இருந்த மூன்று வைரக்கற்களும் திருட்டு போய்விட்டதாக கூறிவிட்டார்.

      மன்னன் திருடனை பிடிக்க ஆணையிட்டான். விரைவில் திருடன் கைது செய்யப்பட்டான். அவன் பொய் பேசாததால் இரண்டு வைரங்களை திருடியதாக காவலரிடம் கூறினான். அதில் ஒன்றை உடன் வந்தவனுக்கு  ஒப்பந்தப்படி தந்து விட்டதாக கூறினான்.

    மந்திரியோ! எங்கே தம்  திருட்டு வெளிப்பட்டு விடப்போகிறது என்ற பயத்தில்,  “மன்னா! இவன் பொய் சொல்கிறான். சிறையில் அடைத்து விசாரித்தால் உண்மை கிடைக்கும்!” என்றான்.

     மன்னன், சிரித்தான்! “ மந்திரியே பொய் சொல்வது திருடன் அல்ல! நீர்தான்!”

 “இவன் பொய் சொல்ல மாட்டான் என்று எனக்குத் தெரியும்! உடன் வந்தவனுக்கு ஒரு வைரம் கொடுத்தான் என்று சொல்கிறானே! அந்த உடன் வந்தவன் நான் தான். மாறுவேடத்தில் நகர்வலம் வருகையில் இவனை சந்தித்தேன். இவன்  அரண்மணையில் திருடப் போவதாக கூறினான். உடன்  வருவதாகவும் பாதி பங்கு தர முடியுமா என்று கேட்டேன். இவனும் ஒத்துக் கொண்டு அழைத்து வந்து ஒப்பந்தப்படி ஒரு வைரத்தை தந்து  விட்டான். அந்த வைரம் இதோ!” என்று மடியில் இருந்து எடுத்து காட்டினார்.        “திருடனான இவன் உண்மை பேசுகிறான்! மந்திரியான நீர் பொய் பேசுகிறீர்! உம்மை போன்றவர்கள் இந்த பதவிக்கு லாயக்கல்ல! உம்மை சிறையில் தள்ளுகிறேன்! இது என் ஆணை! “ “ திருடனே! உண்மை பேசும் உன் குணம் உன்னை இன்று காப்பாற்றியது. திருடுவது கேவலமானது! விட்டு விடு அரண்மனையில் நல்ல பணி  தருகிறேன்! உழைத்து உயர்ந்திடு என்றார் அரசர்.

   திருடனும் மனம் திருந்தி அரசர் கொடுத்த பணியை ஏற்றுக் கொண்டு சிறப்பாக வாழ்ந்தான்.

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!  

Comments

 1. அருமையான கதை இதை முன்பே தங்களது தளத்தில் படித்த நினைவும் வந்தது

  ReplyDelete
 2. நல்லதொரு கதை. பாராட்டுகள்....

  ReplyDelete
 3. அருமையான பதிவு

  உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  ReplyDelete
 4. நல்லதொரு கதை....
  வாழ்த்துக்கள் சகோதரா...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2