தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
1.
வெள்ளை
அடித்ததும்
நிரம்பியது
அடித்தவன் வயிறு!
2.
ஈரம்
படர்கையில்
ஒட்டிக்கொள்கிறது பூமி!
பனி!
3.
நள்ளிரவில்
கானம்!
ரசிகரில்லா கச்சேரி!
புல்லினங்கள்!
4.
இசை
பாட வந்து
வசை வாங்கிச் சென்றது
கொசு!
5.
படையெடுப்பில்
வெற்றி!
பலகாரத்துணுக்குகளுடன்
எறும்புகள்!
6.
கலப்பு
மணம்
மணத்தது மாந்தர்களிடம்!
கதம்பம்!
7.
தேக்கி
வைத்ததும்
தேடிவந்தது பிரச்சனை!
அணை!
8.
இமை
சோர்ந்ததும்
பிறந்தது
தூக்கம்!
9.
அரும்புகளிடம்
பூத்தது குறும்பு!
குழந்தைகள்!
10. இரைக்க இரைக்க
ஊற்றெடுத்தது
கற்பனை!
11. வதங்கியதும்
உதிர்ந்தது
செடியில் மலர்!
12. எண்கள் குறைய குறைய
ஏறி வருகிறது மகிழ்ச்சி!
மைல்கற்கள்!
13. வெளிச்சம்
போட்டுக்காட்டியது!
விளக்கு!
14. விருந்தினர் சென்றதும்
வருந்தியது மரம்!
இளைப்பாறிய பறவைகள்!
15. தேய்ந்த தட்டு
வளர்கிறது!
வளர்பிறை நிலவு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சிந்திக்க வைக்கும் சிறந்த பாவரிகள்
ReplyDeleteவழக்கம்போல் அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteஎல்லாமே நல்லாயிருக்கு.
ReplyDelete