நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 26
நொடிக்கதைகள்! பகுதி 26
பூமராங்க்!
“இந்த வயசுல நான்…” என்று சொல்ல ஆரம்பித்த அப்பாவை இடைமறித்து “உங்க அப்பாவும்
இப்படித்தான் உங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருப்பாரு உங்களை மாதிரி!” என்றான்
மகன்.
பொய்!:
“ஃபீவரா இருந்தது ஹோம் ஒர்க் எழுதலேன்னு மிஸ்கிட்ட சொல்லிடறேன்! என்ற குழந்தையிடம்
“இந்தவயசிலேயே பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா?” என்று எரிந்து விழுந்தவன்.,ரிங்கிய செல்லை
ஆன் செய்து “ ஆன் த வே சார்! வந்துகிட்டே இருக்கேன்! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல அங்கிருப்பேன்!”
என்று பொய் சொன்னான்.
ஐநூறு!
மளிகை கடை அண்ணாச்சியிடம் எப்படியோ பேசி சாமர்த்தியமாக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை
தள்ளிவிட்டு வீட்டுக்கு வருகையில் ஏங்க! முருகேசு உன்கிட்ட வாங்கின ஐநூறை திருப்பி
தந்துட்டு போனாரு என்று ஐநூறு ரூபா நோட்டை நீட்டினாள் மனைவி.
ஆயிரம்!
ஆயிரம் முறையாவது நடந்து திரிந்து நண்பனிடம்
கடன் கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் அதிர்ந்தான். செய்தியில்
“ஆயிரம் ஐந்நூறு ரூபா நோட்டுக்கள் செல்லாது” என்று ஒடிக் கொண்டு இருந்தது.
கணக்கு!
தன் வீட்டுத் திருமணத்தில் எதிர்பார்த்ததை விட விருந்து செலவு கூடிவிட்டது என்று
சொன்னவர் மொய் வருகை அதிகரித்தது என்று எவரிடமும் சொல்லவில்லை!
பிரிவு!
சினிமா ஜோடிகள் பிரிவு என்ற செய்தியை படித்து வருந்தினாள் கணவனை விவாகரத்து
செய்தவள்.
பரிவு!
வளர்த்த தந்தைக்கு வீட்டில் இடம் கொடுக்காத மகன் வளர்க்கும் நாயை பரிவோடு வீட்டு
சோபாவில் படுக்க இடம் கொடுத்தான்.
மழை!
போனவருஷம் மழையை சபித்தவர்கள் எல்லோருமே இந்தவருஷம் குளிரை சபித்துக் கொண்டிருந்தார்கள்
மழையே இல்லாம போயிருச்சு பனியா கொட்டுது என்று.
ஹெல்மெட்!
சாலையோரத்தில் ஹெல்மெட் வியாபாரம் செய்து கொண்டிருந்தவன் வியாபாரம் முடிந்ததும்
கடையை கட்டிக்கொண்டு கிளம்பினான் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல்.
முதல் பிரசவம்!
நெர்வஸா இருக்காதே! இப்ப ஆயிரம் வசதி வந்திருக்கு! ஒண்ணும் பயம் கிடையாது! இது
முதல் பிரசவங்கிறதாலே டென்ஷன் இருக்கத்தான் செய்யும் போகப் போக பழகிடும் என்று மகப்பேறு
மருத்துவரான தன் மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் தாய்.
விளையாட்டு!
“சமத்தா விளையாடிட்டு இருக்கணும்! நாங்க கடைக்கு போயிட்டு வந்துடறோம்!” என்று
தன் டேப்லட்டை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு கிளம்பினாள் அந்த தாய்.
பேய்!
“இந்த வாரம் டீவியிலே பேய்ப் படமே போடலை! ஒரே போர் அடிக்குது!” நீயாவது பேய்க்கதை
சொல்றியா பாட்டி என்று கேட்டாள் பேத்தி.
வேசம்!
சாமி வேஷம் போட்டு பிச்சை எடுத்து வந்தவனை விரட்டி அடித்துவிட்டு கிளம்பினர்
கோயிலுக்கு!
கமிஷன்!
விளக்கை தேய்த்ததும் வந்து நின்ற பூதத்திடம் நோட்டை மாற்றிக் கொடுக்கணும் என்றார். “எவ்வளவு கமிஷன் தருவே? என்றது பூதம்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து
ஊக்கப்படுத்துங்கள்!
ஐநூறு, ஆயிரம் அருமை
ReplyDeleteபடித்தேன். ரசித்தேன்.
ReplyDeleteஅருமை தோழர் தொடர்க
ReplyDeleteம்ம்ம்ம் காலத்துக்கு ஏற்ற நகைச்சுவை
ReplyDelete