கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 98
1கவிஞர்கிட்டே மெட்டு இதோ பாட்டு கொடுங்க! இதோ மெட்டு பாட்டு கொடுங்கன்னு சுத்தி சுத்தி வந்தவங்கள்ளாம் என்ன பண்றாங்க? ” மீ..ட்டூ! மீ..ட்டூ!”ன்னு ட்விட்டர்ல ஹேஷ் டேக் போட்டுகிட்டு இருக்காங்க...! 2.பொண்ணுக்கு மியுசிக்லே ஆர்வம் அதிகம்னு சொன்னாங்க! அப்புறம்...! கல்யாணம் பண்ணப்புறம்தான் தெரிஞ்சது “மியுசிக்கலி”யிலே ஆர்வம் அதிகம்னு! 3.கல்யாண வீட்டுல ஒருத்தரை மட்டும் தடபுடலா கவனிக்கறாங்களே என்ன விஷயம்? சும்மாவா அஞ்சு லிட்டர் பெட்ரோல் மொய் எழுதி இருக்கிறாராம்! 4.புலவரே உங்கள் பாட்டில் கூர்மை இல்லை…! மன்னா….! உங்களை புகழ்ந்து பாடி பாடி வரிகள் எல்லாம் மொக்கையாக போய்விட்டது மன்னா! 5.அரசவைப் புலவர் மீது பாடகி பாலியல் குற்றச்சாட்டு வைத்தாரே என்ன ஆயிற்று? மீ டுவிலிருந்து புலவரை மீட்டு வர பெரும்பாடு ஆகிவிட்டதாம்! 6.நம் மன்னர் சுத்த பயந்தாங்கொள்ளி.....! அதற்காக தீபாவளி வெடிக்கு கூட பயந்து பதுங்கு குழியில் புகுந்து கொள்வதெல்லாம் அதிகமா தெரியுது! 7.நாட்டில் போர் ஏதும் இல்லையே… மன்னர் எதற்கு இத்தனை பதுங்கு குழிகள் வெட்ட சொல்கிறார்? ராணியாரிடம் இருந்து தப்பித்து ஒளிந்து கொள்ளத்தான்! 8.